Archives
Recent Articles
- Chinnayarpathi & Kilpunachi Tribal settlement Visit & Inventory Work
- 5000 Tree Saplings distributed from Nalvazhikatti & Selvalayam Trust
- Given 2 sewing machine for 2 tribal destitute womens
- Our Nalv Trust A/C number got changed, Please note new A/C details
- Piggy Banks to Tribal Children – பழங்குடி இன குழந்தைகளுக்கு உண்டியல்…
-
Child Sexual Abuse
Click the link to Know :
-
கவனயுத்தி ஆட்டங்கள்(Listening Games)
Game – I (கைதட்டி பெயர் சொல்)
————-பிள்ளைகளை குழுவாக பிரித்து(5 pupil) ,அ. ஒருவர் கண்ணை மூடி கொண்டு இருக்க மற்ற நால்வரும் தங்களது கைகளை தட்டி(ஒரே சீராக) பெயரை சொல்ல வேண்டும்(3 times). பின் கைகளை மட்டும் மற்ற நால்வர் தட்ட அவர்களின் பெயரை கண்ணை மூடி கொண்டு இருப்பவர் சொல்ல வேண்டும்(இது போல் குழுவில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்)………* பிள்ளைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும்.************************************************************ ****************************** Game – II (கண்ணை மூடி கண்டுபிடி)————குழு ஆட்டம் – குழுவிலிருந்து எவரேனும் இருவர்………அ. ஒரு ஹாலில் சில தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்(dining tables and chairs) , ஒருவரின் கண்ணை துணியால் கட்டி அவரை சில தடுப்புகளுக்கு இடையே விட வேண்டும், அங்கு இருந்து அவர் எப்படி வெளி வர வேண்டும் என்பதை அவரின் குழு நண்பர் தூரத்தில் நின்று கொண்டு வாய் வார்த்தைகள் மூலமாக வழி காட்ட வேண்டும்(அங்கு இருக்கும் பொருட்களின் பெயரையோ, இடத்தின் பெயரையோ சொல்ல கூடாது). எந்த அணி குறுகிய நேரத்துக்குள் சரியான வழியை அடைகிறதோ அந்த அணி வெற்றி பெறும். மற்ற அணியில் இருப்போர் சிறிய கூச்சலிட்டு கொண்டு இருக்க, கண்ணை மூடி கொண்டு இருப்பவர் தனது அணியில் உள்ள நபரின் குரலை கேட்டு வழியை அடைய வேண்டும்.* வாழ்க்கையில் தனக்கு தேவையானதை தேர்வு செய்ய மாணவர்களுக்கு உதவும்(பல இடையுறுகளுக்கு இடையில்).************************************************************ ****************************** Game – III (route map game – like as Game II)———–************************************************************ ****************************** Game – IV————(Listening – என்பது கேட்பது மட்டுமல்ல சுற்றியுள்ள அனைத்தையும் கவனிப்பது) – இதில் பிள்ளைகள் தன் ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டும்(கண், காது, மூக்கு, வாய், தொடு உணர்வு)அ. குழுவினர் சத்திரம் முழுவதையும் சுற்றி வர வேண்டும்(குறிப்பிட்ட நேரத்துக்குள்), அப்போது ஐந்து புலன்களுக்கும் ஏற்றார் போல் வேலையை நாம் செய்து (கொண்டு) இருப்போம், ஆனால் அவர்களை எதற்காக சுற்றி வர சொல்கிறோம் என்பதை சொல்ல மாட்டோம். அவர்கள் சுற்றி முடித்த பின்னர் அங்கு நிகழ்ந்தவை பற்றிய கேள்விகள் கேட்கப்படும்.கண் – ஏதேனும் ஒரு வித்தியாசமான செயல் நாம் செய்து கொண்டு இருப்போம்.காது – ஏதேனும் ஒரு இசை, பாடல், நகைச்சுவை ஒரு அறையில் ஓடிக்கொண்டு இருக்கும்(audio).மூக்கு – ஒரு அறையில் ஏதேனும் ஒரு வாசனை வீசி கொண்டு இருக்கும்.வாய் – (need vazhaities inputs)தொடு உணர்வு – ஒவ்வொரு இடத்திற்கு பிள்ளைகள் நுழைவதற்கு முன்னால் அங்கு நின்று இருக்கும் நாம் பிள்ளைகளை தட்டி கொடுப்போம் அல்லது கைகளை கொடுப்போம் ஏதேனும் ஒரு தொடு செயல் நம்மால் நிகழ்த்தபடும் அதை அவர்கள் இறுதியில் நாம் கேட்கும் பொழுது சொல்ல வேண்டும்.* பிள்ளைகளுக்கு இறுதியில் நாம் கேள்விகளை கேட்கும் பொழுது தான் பல இடங்களில் கவனிக்காமல் இருந்தது தெரிய வரும் இதனால் அந்த அணியின் மதிப்பெண் குறையும். ஆனால் இந்த விளையாட்டிற்கு பிறகு பிள்ளைகள் தங்கள் செயல்களில் தேவையான கவனத்தை செலுத்துவர்.************************************************************ ****************************** Game – V (உன்னில் என்ன மாற்றம்)————-குழு விளையாட்டுகுழுவில் நடுவில் ஒருவர் நிற்க அவரை மற்றொரு நபர் கூர்ந்து கவனிக்க வேண்டும் பின் கவனித்த நபர் இரண்டு நிமிடம் வெளியே அனுப்பபடுவார், அவர் திரும்பி வருவதற்குள் நடுவில் உள்ள நபரின் உடையில், அணிந்திருக்கும்/வைத்திருக்கும் பொருளில், நிற்கும் தோரணையில் மாற்றங்களை மற்றவர்கள் செய்வர், வெளியே சென்ற நபர் திரும்பி வந்து அந்த மாற்றங்களை கண்டு பிடிக்க வேண்டும்.— இதே போல் குழுவில் உள்ள அனைவரும் செய்ய வேண்டும்.* இதனால் பிள்ளைகள் ஒருவரை பார்க்கும் போது அவருடைய அனைத்து அசைவுகளையும் கவனிப்பர்.************************************************************ ******************************