Superb Article

Bookmark this on Hatena Bookmark
Hatena Bookmark - Superb Article
Share on Facebook
[`google_buzz` not found]
[`yahoo` not found]
[`livedoor` not found]
[`friendfeed` not found]
[`tweetmeme` not found]

Superb Article. மாணவர் மறுமலர்ச்சி​த் திட்டம்

Really an important article..
 

மாணவர்களே மாணவர்களைப் படிக்க வைக்கும்’ புதிய மறுமலர்ச்சித் திட்டம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார். கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்லூரியில் மாணவர்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்தார் சசி. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சேர்ந்ததாம். இதை 40 ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘படிக்க பணமில்லை என்ற நிலை என்னை கலங்க வைக்கிறது. அதனால்தான் கல்விக்காக உங்களிடம் கையேந்தி வந்துள்ளேன்’’ என மனம் உருகி மாணவர்களிடம் பேசியிருக்கிறார் சசிக்குமார்.இதில் சசிக்குமாரின் நோக்கத்தில் நேர்மை இருக்கலாம், படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுவதை உண்மையான அக்கறையோடே செய்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சசிகுமார் விளம்பரத்துடன் புரிந்துகொண்டிருக்கும் கல்வி பற்றியப் பார்வை மிக அபாயகரமானது மட்டுமல்ல, அதுதான் சமூகத்தின் அனைவரின் நோக்கமும் கூட. ‘அவர் வெளியத் தெரியாம பல ஏழைப் பிள்ளைங்களைப் படிக்க வெச்சுகிட்டிருக்காரு’ என சிலரைப் பற்றி சொல்வதுண்டு. மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘ஏழைப்பசங்க படிக்க கஷ்டப்படுறாங்க.இவர் ஹெல்ப் பண்றாரு.. இதுல என்ன தப்பு இருக்கு?’ என்பதாகவே தோன்றும். ஆனால் அது அப்படி அல்ல.சமூக நீதியை அழித்து சமமின்மையை ஒரு சரியென முன் வைக்கும் கல்விக்கொள்ளைக்கு முட்டுக்கொடுக்கும் செயல் இது. உரிமையாய் பெற வேண்டிய கல்வியை பிச்சையாய் மாற்றும் அயோக்கியதனம். பணம் இருந்தால்தான் படிக்க முடியும் என்ற கேடுகெட்ட நிலைமையை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி நிறுவன முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் செயல். சசிக்குமார் தெரிந்தோ, தெரியாமலோ அந்த தரகு வேலையைதான் பார்த்திருக்கிறார்.

இந்த தரகர் வேலையை சில வருடங்களுக்கு முன்பிருந்தே மிகுந்த பெருமையுடன் செய்து வருகிறார். தனது ’அகரம் பவுண்டேஷன்’ மூலமாக ஒவ்வொரு வருடமும் சில மாணவர்களுக்கு ’இலவச கல்வி’ தரும் அவர், அதை வைத்து தனது ‘நல்லவன்’ இமேஜ்-ன் கிராஃபை நன்றாகவே மேலே ஏற்றியிருக்கிறார். இங்கும் ’இலவசக் கல்வி’ என்பதன் பொருள், இலவசம் அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணம், நன்கொடை உள்ளிட்ட அனைத்தையும் அகரம் பவுண்டேஷன் செலுத்திவிடும். இதற்குப் பெயர் இலவசக்கல்வி அல்ல. இங்கு அகரம், ஒரு ஆள் பிடித்துத் தரும் தரகு வேலை செயல்படுகிறது.வருமான வரி விலக்கு, கறுப்பை வெள்ளையாக்கும் வாய்ப்பு’ .போட்டி மிகுந்த திரைப்படத் துறையின் வியாபாரத்திற்கு இந்த இமேஜ் ஒருவித தனித்தன்மையைக் கொடுக்கிறது. அதன்பிறகு ‘நீயா நானா?’ போன்ற கைப்புள்ள ஸ்டைலில் தமிழகத்தில் ‘அறிவை’க் கொல்லும் அக்கப்போர் நிகழ்ச்சியின் விருந்தினர் நாற்காலியை அலங்கரிக்கலாம். ஊடக செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கலாம்.
 
இப்படிசில மாணவர்களுக்கு பணம் கட்டிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மாணவர்கள் அவர்கள் விரும்பும் படிப்புக்கான பணத்தைக் கட்டி படிக்க முடியாமல் அல்லாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ‘உண்டியல்’ ஏந்தி பணம் வசூல் செய்து தந்துவிட முடியுமா? எத்தனை தலைமுறைக்கு, எத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு அப்படி செய்ய முடியும்? பிரச்னையைத் தீர்ப்பதற்கு சரியான வழி என்ன?
 
மொத்தமாக கல்வி என்பது அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக தரப்பட வேண்டும். ‘இலவச கல்வி’ என்பது நமது பிறப்புரிமை. ஒவ்வொரொ நாடும், அரசும் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய உரிமை. மாறாக நடைமுறையில் கல்வி காசாக்கப்பட்டு, மிக்ஸியும், கிரைண்டரும், (தேர்தல் சமயத்தில்) குவாட்டருமே இலவசமாக வழங்கப்படுகின்றது. ’இலவச கல்வி’ என்பது இறுதி எல்லை என்றபோதிலும் நடைமுறையில் உடனடி தீர்வுக்கான சாத்தியங்கள் என்ன?
 1.தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது
2.அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.
 
இயக்குநர் சசிக்குமார், நடிகர் சூர்யா ஆகியோர் இந்த அநீதியான கல்விக்கொள்ளைக் குறித்து வெளிப்படையாகப் பேசினால் அவர்களின் நட்சத்திர இமேஜ் காரணமாக அது கூடுதலாக கவனம் பெறுமே?! ஆனால் அவர்கள் எப்போதும் பேசமாட்டார்கள்.
 
கல்வி என்பது இன்று என்னவாக இருக்கிறது? பணம் இருந்தால் மட்டுமே தரமான பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும். ‘தரமான பள்ளி’ என்ற சொல்லை உச்சரிக்கும்போதே நம் மனங்களில் தனியார் பள்ளிகளின் சித்திரம்தான் தோன்றுகிறது. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை. தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு கையில் காசு இல்லை. என்ன செய்வது? படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் தனது மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் படிப்புக்காக மட்டுமே அர்ப்பணிக்கிறது. தங்கள் வாழ்க்கையை அடகு வைத்தால்தான் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் என்பது கண்கூடான யதார்த்தம். இந்த நிலைமை உண்மை என்கிற அதே சமயம் இது நியாயம் இல்லை என்பதும் நமக்குத் தெரியும். ஆனாலும் எல்லோரும் தனது அடுத்தத் தலைமுறையையேனும் மேலும் ஒரு படி அதிக வசதியுள்ள வண்டியில் ஏற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய சிரமங்களை ஏற்றுக்கொள்கின்றனர். இதனால்தான் எல்.கே.ஜி.க்கு 40 ஆயிரம் என்ஜினீயரிங்குக்கு 20 லட்சம் என கணக்கு வழக்கின்றி அள்ளிக் கொட்டுகின்றனர்.
 
வேற என்ன சார் பண்றது? பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சுத் தரணும்ல.. நாம காசு, பணம்தான் சேர்த்து வைக்கலை. நல்லப் படிப்பைக் கொடுத்துட்டா அதுங்க பொழைச்சுக்கும்ல…’ என்பது பொதுவான பெற்றோர் எதிர்வினை. இச்சொற்களில் இருக்கும் ’பாசம், அக்கறை’ என்பனவற்றை வடிகட்டிவிட்டுப் பார்த்தால் ‘சுயநலம்’ என்ற சொல் கிடைக்கக்கூடும். தனது சக்திக்கு மீறி அதிக முதலீடு போட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கம் அதற்கான நியாயமான Return-ஐ எதிர்பார்க்கிறது. சமூகப் பிரச்னை, மாணவர் சங்கம், பொதுநலம், அரசியல், போராட்டம், பொதுப் பிரச்னை, கலை, இலக்கியம் என ‘காசுக்கு உதவாத’ அனைத்தையும் மாணவர்கள் செய்யும்போது பெற்றோர் மனது <

 

it will be really worth if every one of us share this “education politics” to every other neighbour.. Everyone feel that learning happens at school/college/tution environment. and missed to realize that learning happens at all the environment..
 
..students who got this kinds of aids may not certainly realize the education system, instead they may also offer an amount to other needy people..
 
if time permitts get an example from our mentor Sivaraman-Bengaluru [96320-37005]. Once he shared his hurted feelings to me when he shocked to get a dialog from the girl he supported financially.

 

— this is the place I really like Nalvazhikatti to move.. rather funding.. and not only focussing on academics.. let us mentor our child to fight for their rights.. if not now.. let it be in another 5 years

Related Posts Plugin for WordPress, Blogger...
Did you like this? Share it:
Article, Good, Mnc, Nalvazhikatti, tamil, Think, Tribal, Useful, youth , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *