Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
You can do Social service; Social Responsibility
Cost free Session on You can do Social service; Social Responsibility by Mr.Arunbalaji Selvaraj & Mr.Manikandan K | YOU CAN DO IT | EDC | Sri Eshwar College of Engineering
Its Free session give to college students.
மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்
Email – nalvazhikatti@gmail.com
WhatsApp / Call – 82965 42155
Website – www.nalvazhikatti.org
Mobile – +91 – 82965 42155 / 96000 85388To Sponsor:-
:- +91- 94866 56708
Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
IFSC Code: CORP0000170
MICR Code: 642017002
Account number: 017001601000184
Location of Beneficiary Bank: POLLACHI
Beneficiary Bank Name: CORPORATION BANK
Beneficiary Bank Branch: POLLACHI BRANCHநன்றி
-நல்வழிகாட்டி அறக்கட்டளை-
-
அறம் செய விரும்பு
இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் நம்மை பற்றியோ அல்லது நம் குடும்பத்தை பற்றியோ கூட யோசிக்க நேரம் இல்லை. ஆனால் எல்லோருக்கும் நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும், யாருக்காவது உதவ வேண்டும் என்றும் எண்ணம் இருக்கும். இருப்பினும் அந்த அளவுக்கு பணமோ, நேரமோ நம்மிடம் கிடையாது. சரி, யாராவது நம்மை நாடி வந்து சேவை செய்ய உதவி (பணம்) கேட்டால் உதாரணத்திற்கு நாங்க அன்பு இல்லத்தில் இருந்து வருகிறோம் உங்களால் முடிந்ததை உதவுங்கள் என்று கேட்டால் நம் மனம் சற்று சந்தேகம் கொள்வது இயல்பு தான்.
நாம் கொடுக்கும் பணம் அவர்களை சென்று சேருமோ அல்லது ஏதாவது பித்தலாட்டமோ என யோசிக்க வைக்கும். இதற்க்கு என்ன தான் செய்வது !. கவலை வேண்டாம் . நான் இந்த துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். (அதாவது நான் 10 வருடமாக ஒரு என்.ஜி.ஒ நடத்தி வருகிறேன், அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன்…) நான் என் கண்களால் பார்த்து விசாரித்து உறுதி செய்யப்பட்டதை தான் இதில் கூறி இருக்கிறேன்.
எங்கள் ஊரில் (பொள்ளாச்சியில்) பல ஆண்டுகளாக ஒருவர்…
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் பழி.
என்ற குறளுக்கு ஏற்ப அன்னதானத்தை ஒரு உன்னதமான தர்மமாக கருதி வயதான நடக்ககூட முடியாத ஆதரவற்ற உடல்நலம் குன்றி இருப்பவர்களுக்கும் , தனது இருப்பிடம் தேடி உணவு வந்தால் ஒழிய வேறு வழியில்லை என்றிருப்பவர்களுக்கும் , சாலையோர மனநோயாளிகள் , கண்பார்வையற்றோருக்கும் உணவு , உடை, மருத்துவ வசதி ஆகியவை வழங்கி வருகிறார்.
ஆம்!! அவர்தான் “ராமகாரியம் சுகுமார்”.
Ramakaryam Sukumar
பொள்ளாச்சி சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் (45 கி.மி சுற்று அளவுள்ள ) ஊர்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட, பிச்சை ஏந்துகின்ற அதாவது “தனது இருப்பிடம் தேடி உணவு வந்தால் ஒழிய அவர்களால் வாழ முடியும் என்ற நிலைமையில் உள்ள 280 பேருக்கும் இவரே நேரில் சென்று தினமும் உணவு, உடை, மருத்துவம் ஆகிய அற்புத உதவிகளை செய்து வருகிறார்.
நம்மை போன்ற மக்கள் அவர்க்கு நாம் விரும்புகிற நாட்களில், அதாவது பிறந்த நாள், திருமண நாள், தாய் தந்தை நினைவு நாள் அல்லது ஏதாவது ஒரு நாளில் அன்றைய நாளுக்கு செலவாகும் ரூ. 2000 /- (280 பேருக்கு ஒரு வேளை உணவு) பணமாகவோ / காசோலை / வங்கி கணக்கு மூலமாகவோ அனுப்பி உதவுகிறார்கள்.
அவர் நம்மிடம் கேட்பது நம் வீட்டில் உள்ள பழைய துணிகள் , நியூஸ் பேப்பர் (பார்செலுக்கு), மளிகை பொருட்கள் மற்றும் நாம் விருப்பப்பட்ட இனிப்பு, கார வகைகளை கொடுத்து உதவலாம்.அல்லது
நாமே உணவு தயார் செய்தும் கொடுக்கலாம் ! நாம் விரும்பினால் அவருடன் சென்று அவர்களுக்கு உணவை நாமே கொடுக்கலாம்.
இருப்பினும் அவருக்கு தற்போதைய தேவை ஒரு நல்ல பெரிய (mixy) அரைப்பான் சமையலுக்காக மற்றும் 280 பேருக்கு போர்வை….குளிர்காலம் இல்லையா?…
இந்த சேவையோடு மட்டும் நில்லாமல் நான் முதலில் கூறியதை போன்று நான் நடத்தி வரும் “நல்வழிகாட்டி” – www.nalvazhikatti.org என்ற கல்வி சார்ந்த என்.ஜி.ஒ மூலியமாகவும் பல பேருக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார்.
Ramakaraya Sukumar – நல்வழிகாட்டி
சேவையின் உச்சகட்டமாக ஒரு ஆதரவற்ற மாணவியை தன் வீட்டிலேயே வளர்த்து படிக்க வைத்து வருகிறார்.
இவர் செய்யும் அறபணிக்கு நாம் ஏன் அணிலாக உதவி செய்ய கூடாது ?
உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ தயவு கூர்ந்து இந்த மாமனிதருக்கு உதவுங்கள். நான் கீழே விவரங்களை இணைத்து உள்ளேன் .
-பொள்ளாச்சி அருண்பாலாஜி-Videos:-
- https://www.youtube.com/watch?v=U-zkKftB87Y
- https://www.youtube.com/watch?v=8EowKvmlixY&t=92s
- https://www.youtube.com/watch?v=gYNTGmTxqjM&t=52s
Photos: –
- https://www.facebook.com/nalvazhikatti/photos/t.100000784653507/890952744293310/?type=3&theater
- https://www.facebook.com/photo.php?fbid=1399109410125201&set=a.151805944855560.23506.100000784653507&type=3&theater
Contact number: 91502 55745 / 96000 85388 / 8296542155
Bank account details: –
Account Number: 1337101013515
Bank name: Canara Bank
Branch: Zamin Vthukuli
ifsc: cnrb0001337
Name: Sukumar
நல்வழிகாட்டி:
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், கல்வி மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கற்பிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது தான் நல்வழிகாட்டி.
உங்களின் பங்களிப்பு:
இந்த கிராமப்புற மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதின் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், ‘நல்வழிகாட்டிக்கு உதவுங்கள்’.To know about Nalvazhikatti – An education NGO
Nalv website: www.nalvazhikatti.org
Nalv email: nalvazhikatti@gmail.com
Nalv blog: http://nalvazhikatti.blogspot.in/
Nalv video: – https://www.youtube.com/watch?v=wFCUe5zRGKM&feature=related
https://www.youtube.com/watch?v=IwN9hE7V6G0&feature=related
Nalv Photos: – https://www.facebook.com/pg/nalvazhikatti/photos/?ref=page_internal
நல்வழிகாட்டி முலம் கிராமப்புற மாணவர்களின்கல்விக்கு உதவ. http://www.nalvazhikatti.org/contributor.htm
நன்றி !
-
No to coke pepsi pizza burger
“கோக், பெப்ஸி… பீட்ஸா, பர்கர் நோ நோ…” அதிரடி ‘அம்மா’!
லெட்ஸ் மூவ்’ – அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது!எதற்காக?! ‘சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள். கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். அதற்குப் பதிலாக கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள். டி.வி-யே கதி என்று பழியாகக் கிடக்காமல், விளையாட்டுத் திடலுக்கு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள். பள்ளிக்கு காரில் போய் இறங்காமல், நடந்தே சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’– இந்த நான்கு செய்திகளை அமெரிக்க குழந்தைகளின் மனதில் பதியவைக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக மிஷேல் முன்னெடுத்து வரும் இயக்கம்தான், ‘லெட்ஸ் மூவ்’! இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதும், இவரின் முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை. இந்த இயக்கமே கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது இப்போது!அமெரிக்கப் பெற்றோர்கள், பொருள் தேடுவதிலேயே பிஸியாகிவிட்டதால்… வீட்டில் சமைத்த உணவைக் குழந்தைகள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. மூன்று வேளையும் நொறுக்குத்தீனியையே அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். தண்ணீர் குடிப்பதையே முழுக்க மறந்துவிட்டு, சர்க்கரைத் தண்ணீரான குளிர்பானங்களை மட்டுமே குடிக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் அதிக கொழுப்பு, கலோரிகளால், அமெரிக்காவில் மூன்று குழந்தையில் ஒரு குழந்தை, குண்டு (ஒபிசிட்டி நோய்) குழந்தையாக இருக்கிறது. இன்னொருபுறம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலரும் டி.வி., கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாகி, நாளன்றுக்கு ஏழரை மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். ’2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை டயபடீஸ், ரத்த அழுத்தம், கேன்ஸர், ஆஸ்துமா, இதய நோய்… போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என்று அமெரிக்க மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதெல்லாம்தான்…. ‘லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்க வைத்தது.‘குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவும், ஓடியாடி விளையாடவும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்; அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; சுற்றுப்புற சமுதாயம் என்ன செய்யவேண்டும்?’ – இது எல்லாவற்றையும் ஓர் அட்டவணையாகத் தீட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் மிஷேல். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது, வீட்டில் அப்பா, அம்மாக்கள் சத்தான உணவுகளைப் பற்றி என்னதான் எடுத்துச் சொன்னாலும், பள்ளிக்கூட வளாகத்திலேயே கோக், கேஎஃப்சி, மெக்டொனல்ட்ஸ் போன்ற விளம்பரங்கள் இருப்பதும், பள்ளிக்கூட கேன்டீன்களிலேயே சிப்ஸ், பர்கர், ஹாட் டாக், கோக் போன்றவை விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி, பள்ளிக்கூடத்தில் துரித உணவுகளுக்கான விளம்பரங்களைத் தடை செய்யவும், பள்ளியில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார் மிஷேல்.பிள்ளைகளைத் துருப்பிடிக்க வைக்கும் துரித உணவுகளுக்கு எதிராக மிஷேல் தொடுத்திருக்கும் யுத்தம் நான்கு ஆண்டுகளை கடக்கும் நிலையில்… இதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தற்போது கொடுக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகள் வீண் செய்கிறார்கள். பர்கரும் கோக்கும் பள்ளியில் கிடைக்காவிட்டால் என்ன, பள்ளிக்கு வெளியில் சென்று சாப்பிடத்தான் செய்கிறார்கள். அதனால் ‘மிஷேல் பரிந்துரைக்கும் தீர்வானது நடைமுறைக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று சொல்லி… துரித உணவுகளை மீண்டும் கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வர துரித உணவகங்கள் மறைமுக யுத்தத்தில் இறங்கியுள்ளன.‘பர்கர், பீட்ஸா பற்றி இப்போது இவ்வளவு பேசும் மிஷேலே முன்பெல்லாம் இதுபோன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது மட்டுமல்லாது, தன் மகள்களுக்கும் கொடுப்பார். அவருக்கு உணவு விஷயத்தில் ஞானோதயம் பிறந்துவிட்டது என்பதற்காக நாட்டில் இருக்கும் அத்தனை பேர் மீதும் அதைத் திணிப்பது சரியல்ல. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதெல்லாம் டூ மச்’ என்கிற ரீதியில் தனிமனித சுதந்திரத்தை முன் வைத்தும் துரித உணவகங்கள் கத்துகின்றன.துரித உணவு என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம். இதன் மீது மிஸ்டர் ஒபாமாவே கைவைத்தாலும், பண ருசி கண்ட தொழில்முதலைகள் சும்மா இருக்க மாட்டார்கள்தான். ஆனாலும், ‘துரித உணவகங்களின் சூழ்ச்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று போராடும் அமெரிக்க அம்மா மிஷேலின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்’ என்பதுதான் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை!http://www.letsmove.gov/eat-healthyநீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?! -
நீங்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள,
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளியுங்கள்:
1. உங்களது குடிப்பழக்கத்தால், உங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியிழந்து விட்டதா?
2. குடிப்பதால், உங்கள் பணி நேரம் குறைந்து விட்டதா?
3.உங்களது குடிப்பழக்கம், உங்கள் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதா?
4.குடிப் பழக்கத்தால், பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளனவா?
5.மோசமான சுற்றுச் சூழலில், உங்களைவிட தகுதி குறைந்த நபர்களோடு சேர்ந்து குடிக்குமளவிற்கு மாறி விட்டீர்களா?
6.நீங்கள் குடிப்பதால், குடும்ப நலனை கவனிக்க, பராமரிக்க முடியவில்லையா?
7.கவலைகள், பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்காக குடிக்கிறீர்களா?
8.தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறதா?
9.குடிப்பழக்கம் காரணமாக, தூங்குவதில் சிரமம் உள்ளதா?
10. குடிப்பழக்கத்தால் உங்கள் திறமைகளும், லட்சியங்களும், ஆர்வங்களும் குறைந்து வருகிறதா?
.
.
.
.
..
இந்த, 10 கேள்விகளில், ஒரேயொரு கேள்விக்கு மட்டும், ‘ஆம்’ என்று, நீங்கள் பதிலளித்தால்,
நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம் அல்லது மிக விரைவில் அடிமையாகி விடுவீர்கள்.
இரண்டு கேள்விக்கு, ‘ஆம்’ என்ற பதிலளித்தால், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமை.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு, ‘ஆம்’ என்று பதிலளித்தால், எவ்வித சந்தேகமும் இன்றி, நிச்சயமாக நீங்கள் குடிப்பழக்க அடிமை தான்.
இந்த, 10 கேள்விகளில் எந்தக் கேள்வியும் உங்களுக்குப் பொருந்தவில்லை எனில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையில்லை; ஆனால், அடிமையாகி விடாமல், உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்.
புத்தகம் ஒன்றில் படித்தது.
-
ONLY BUILDERS, BANKS GAIN WHEN YOU TAKE LOAN TO INVEST IN REALTY
An acquaintance recently told me that his colleague had bought a flat for Rs 40 lakh and is selling it at Rs 80 lakh. He had made a down payment of only Rs 8 lakh at the time of buying the flat. According to him, real estate was the best investment option. This is something we hear almost every second day as financial planners. The person also believed that among various asset classes, money was being made only in real estate. Why was it so, he asked. To clear the cobwebs regarding real estate investment by taking a loan and to open up a myopic view on this subject, we made some calculations after agreeing on some basic assumptions.Here are the calculations …
-
ONLY BUILDERS, BANKS GAIN WHEN YOU TAKE LOAN TO INVEST IN REALTY
An acquaintance recently told me that his colleague had bought a flat for Rs 40 lakh and is selling it at Rs 80 lakh. He had made a down payment of only Rs 8 lakh at the time of buying the flat. According to him, real estate was the best investment option. This is something we hear almost every second day as financial planners. The person also believed that among various asset classes, money was being made only in real estate. Why was it so, he asked. To clear the cobwebs regarding real estate investment by taking a loan and to open up a myopic view on this subject, we made some calculations after agreeing on some basic assumptions.
Here are the calculations …
-
ஜீவா
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்
அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு “என்ன காமராஜ் என்று கேட்டார்”.
என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..? ” என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, “நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.
“நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்” என்றார் காமராஜர்.
“காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்” என்று ஜீவா மறுக்க,
“அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்” என்று அழைத்தார்.
“அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் ” என்று அனுப்பி வைத்தார்.
“கண்டிப்பாக வரணும்” என்றார் காமராஜர்.
விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.
“என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே…? ” என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே”… என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
“ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்”….? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்” என்றார்.
உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் ” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர்.
அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்க
ு போன் பண்ணுங்கள்”… என்பது தான். இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை
அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உனர்ந்த,பகிர்ந்த தலைவர்கள்,கர்மவீரர், ஜீவா,கக்கன் போன்ற தலைவர்கள்.
ப. ஜீவானந்தம்
ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டைதொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். -
உடல் மொழி1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.
-
EC – Encumbrance Certificate – வில்லங்க சான்றிதழ் online
பொதுவாகவே ஈஸீ(EC – Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்)கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாடவேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்.அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி,சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம். அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒருகாப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)Good News – To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in ONLINE or HOME DELIVERY BY COURIER from Government for Rs 1 and Rs 25.
Links to extract EC in English – http://www.tnreginet.net/
igregn/webAppln/EC.asp?tams=0 Links to extract EC in Tamil – http://www.tnreginet.net/
igregn/webAppln/EC.asp?tams=1 Links to extract Registered Documents –
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document. asp Links to extract Marriage Certificate
http://www.tnreginet.net/english/smar.asp Links to CHECK Registered Chit Companies – http://www.tnreginet.net/
english/schit.asp Links to CHECK Registered Society – http://www.tnreginet.net/
english/society.asp Links to CHECK the Land Value Guideline (updated till 2012)
http://www.tnreginet.net/Guidelinevalue2012/ gvaluemainpage2011.asp - 2 Comments