• அறம் செய விரும்பு


    இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் நம்மை பற்றியோ அல்லது நம் குடும்பத்தை பற்றியோ கூட யோசிக்க நேரம் இல்லை. ஆனால் எல்லோருக்கும் நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும், யாருக்காவது உதவ வேண்டும் என்றும் எண்ணம் இருக்கும். இருப்பினும் அந்த அளவுக்கு பணமோ, நேரமோ நம்மிடம் கிடையாது. சரி, யாராவது நம்மை நாடி வந்து சேவை செய்ய உதவி (பணம்) கேட்டால் உதாரணத்திற்கு நாங்க அன்பு இல்லத்தில் இருந்து வருகிறோம் உங்களால் முடிந்ததை உதவுங்கள் என்று கேட்டால் நம் மனம் சற்று சந்தேகம் கொள்வது இயல்பு தான்.


    நாம் கொடுக்கும் பணம் அவர்களை சென்று சேருமோ அல்லது ஏதாவது பித்தலாட்டமோ என யோசிக்க வைக்கும். இதற்க்கு என்ன தான் செய்வது !. கவலை வேண்டாம் . நான் இந்த துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். (அதாவது நான் 10 வருடமாக ஒரு  என்.ஜி.ஒ நடத்தி வருகிறேன், அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன்…) நான் என் கண்களால் பார்த்து விசாரித்து உறுதி செய்யப்பட்டதை தான் இதில் கூறி இருக்கிறேன்.


    எங்கள் ஊரில் (பொள்ளாச்சியில்) பல ஆண்டுகளாக ஒருவர்…


    ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை


    மாற்றுவார் ஆற்றலின் பின்.

    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்


    பெற்றான் பொருள்வைப் பழி.

    என்ற குறளுக்கு ஏற்ப அன்னதானத்தை ஒரு உன்னதமான தர்மமாக கருதி வயதான நடக்ககூட முடியாத ஆதரவற்ற உடல்நலம் குன்றி இருப்பவர்களுக்கும் , தனது இருப்பிடம் தேடி உணவு வந்தால் ஒழிய வேறு வழியில்லை என்றிருப்பவர்களுக்கும் , சாலையோர மனநோயாளிகள் , கண்பார்வையற்றோருக்கும் உணவு , உடை, மருத்துவ வசதி ஆகியவை வழங்கி வருகிறார்.

    ஆம்!! அவர்தான்  “ராமகாரியம் சுகுமார்”.

    Ramakaryam Sukumar

    பொள்ளாச்சி சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் (45 கி.மி சுற்று அளவுள்ள ) ஊர்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட, பிச்சை ஏந்துகின்ற அதாவது “தனது இருப்பிடம் தேடி உணவு வந்தால் ஒழிய அவர்களால் வாழ முடியும் என்ற நிலைமையில் உள்ள 280 பேருக்கும் இவரே நேரில் சென்று தினமும் உணவு, உடை, மருத்துவம் ஆகிய அற்புத உதவிகளை செய்து வருகிறார்.

    நம்மை போன்ற மக்கள் அவர்க்கு நாம் விரும்புகிற நாட்களில், அதாவது பிறந்த நாள், திருமண நாள், தாய் தந்தை நினைவு நாள் அல்லது ஏதாவது ஒரு நாளில் அன்றைய நாளுக்கு செலவாகும் ரூ. 2000 /- (280 பேருக்கு ஒரு வேளை உணவு) பணமாகவோ / காசோலை / வங்கி கணக்கு மூலமாகவோ அனுப்பி உதவுகிறார்கள்.

    அவர் நம்மிடம் கேட்பது நம் வீட்டில் உள்ள பழைய துணிகள் , நியூஸ் பேப்பர் (பார்செலுக்கு), மளிகை பொருட்கள் மற்றும் நாம் விருப்பப்பட்ட இனிப்பு, கார வகைகளை கொடுத்து உதவலாம்.                                         

    அல்லது


    நாமே உணவு தயார் செய்தும் கொடுக்கலாம் ! நாம் விரும்பினால் அவருடன் சென்று அவர்களுக்கு உணவை நாமே கொடுக்கலாம்.

    இருப்பினும் அவருக்கு தற்போதைய தேவை ஒரு நல்ல பெரிய (mixy) அரைப்பான் சமையலுக்காக மற்றும் 280 பேருக்கு போர்வை….குளிர்காலம் இல்லையா?…

    இந்த சேவையோடு மட்டும் நில்லாமல் நான் முதலில் கூறியதை போன்று நான் நடத்தி வரும் “நல்வழிகாட்டி” – www.nalvazhikatti.org என்ற கல்வி சார்ந்த என்.ஜி.ஒ மூலியமாகவும் பல பேருக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார்.

    Ramakaraya Sukumar – நல்வழிகாட்டி 

    சேவையின் உச்சகட்டமாக ஒரு ஆதரவற்ற மாணவியை தன் வீட்டிலேயே வளர்த்து படிக்க வைத்து வருகிறார்.

    இவர் செய்யும் அறபணிக்கு நாம் ஏன் அணிலாக உதவி செய்ய கூடாது ?

    உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ தயவு கூர்ந்து இந்த மாமனிதருக்கு உதவுங்கள். நான் கீழே விவரங்களை இணைத்து உள்ளேன் .

    -பொள்ளாச்சி அருண்பாலாஜி-

    http://ab.nalv.in/aboutme

    Videos:-

    1. https://www.youtube.com/watch?v=U-zkKftB87Y
    2. https://www.youtube.com/watch?v=8EowKvmlixY&t=92s
    3. https://www.youtube.com/watch?v=gYNTGmTxqjM&t=52s

    Photos: –

    1. https://www.facebook.com/nalvazhikatti/photos/t.100000784653507/890952744293310/?type=3&theater
    2. https://www.facebook.com/photo.php?fbid=1399109410125201&set=a.151805944855560.23506.100000784653507&type=3&theater

    Contact number: 91502 55745 / 96000 85388 / 8296542155

    Bank account details: –

    Account Number: 1337101013515

    Bank name:        Canara Bank

    Branch:              Zamin Vthukuli

    ifsc:                   cnrb0001337

    Name:              Sukumar

     

    நல்வழிகாட்டி:

    கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், கல்வி மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கற்பிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது தான் நல்வழிகாட்டி.

    உங்களின் பங்களிப்பு:

    இந்த கிராமப்புற மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதின் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், ‘நல்வழிகாட்டிக்கு உதவுங்கள்’.

    To know about Nalvazhikatti – An education NGO

     Nalv website: www.nalvazhikatti.org

    Nalv email: nalvazhikatti@gmail.com

    Nalv blog: http://nalvazhikatti.blogspot.in/

    Nalv video: – https://www.youtube.com/watch?v=wFCUe5zRGKM&feature=related

    https://www.youtube.com/watch?v=IwN9hE7V6G0&feature=related

    Nalv Photos: – https://www.facebook.com/pg/nalvazhikatti/photos/?ref=page_internal

    நல்வழிகாட்டி முலம் கிராமப்புற மாணவர்களின்

    கல்விக்கு  உதவ. http://www.nalvazhikatti.org/contributor.htm

     நன்றி !

    No Comments
  • My Father A.Selvaraj

    My Father A.Selvaraj

    Even at last breath My Father had donated his eyes and gave vision to two people. He will ever live in this world and see us through his eyes. Let his Soul rest in peace.

    No Comments
  • தொடரும் பாலியல் வன்முறை: மாறுமா பழைய வழிமுறை?
    காவல்துறையை நவீனப்படுத்த 47 கோடியே 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறதாம். கண் டிப்பாக நவீனப்படுத்தியாக வேண்டிய ஒன்று இருக்கிறது. அதுதான் காவல்துறையின் அணுகு முறை. குறிப்பாக எளிய மக்களைக் கிள்ளுக் கீரைகளாக நடத்துகிற அதிகார வக்கிரத்திலி ருந்து காவல்துறையைத் திருத்தியே ஆக வேண்டும்.

    இதன் அவசர அவசியத்தை உணர்த்துவதா கவே விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு பழங் குடிப் பெண்கள் காவலர்களால் வன்புணர்ச் சிக்கு உட்படுத்தப்பட்ட செய்தி வந்திருக்கிறது. திருக்கோவிலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மண்டபம் கிராமத்தில், இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த காசி என்பவர் ஒரு புகார் தொடர்பாக காவல் நிலையம் கொண்டுசெல்லப் பட்டிருக்கிறார். அவரை விடுவிக்கக் கேட்டுக் கொள்வதற்காக வந்த அவரது தாய் வள்ளியிடம், நெருங்கிய உறவினர்களை அழைத்துவந்தால் விடுவிப்பதாகக் காவலர்கள் கூறியிருக்கின்ற னர். பின்னர் காவல் வேனில் கொண்டுவரப்பட்ட காசியின் மனைவி லட்சுமி, தம்பி மனைவி கார்த் திகா, தங்கை ராதிகா, மற்றொரு உறவுக்காரப் பெண் மாதேஸ்வரி ஆகியோரை காவலர்கள் இம்மாதம் 22ம்தேதியன்று இரவு, அருகில் உள்ள தைலமரக் காட்டில் வைத்து, தாய் வள்ளியின் கண் முன்பாகவே மாறி மாறி பாலியல் வன்மத் திற்கு உட்படுத்தியுள்ளனர். இது குறித்து புகார் செய்தால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளனர்.

    ஆயினும் கிராம மக்கள் ஊக்குவிக்க, இக் கொடுமை பற்றி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் பதிவு செய்திருக்கின்றனர். இந் தப் பிரச்சனையை இப்போது தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கையில் எடுத்துள்ளது.

    erular
    சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி, மொண்டியம் பாக்கம் வசந்தா உள்ளிட்ட முந்தைய வழக்கு களில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று முதலில் அறிவிப்பது, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வது என்பதே அன்றைய அதி முக அரசின் போக்காக, நடைமுறையாக இருந் தது. ஆனால், நீதிமன்றங்கள் அழுத்தந்திருத்த மாக வழங்கிய தீர்ப்புகள் உண்மையை நிலை நாட்டின. அதற்குப் பிறகும் இப்படிப்பட்ட கொடு மைகள் நடக்கின்றன என்றால், அப்பாவிகளின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்தி, இப்படித் துன்புறுத்துகிற அராஜகம் தங்குதடை யின்றித் தொடர்கிறது என்பதுதானே இதன் பொருள்?

    தனது ஆட்சி வருகிறபோதெல்லாம் இத்த கைய காவல்துறை அத்துமீறல்கள் அதிகரிப்பது ஏன் என்பதை முதலமைச்சர் இப்போதாவது தன் மனதைச் செலுத்தி ஆராயட்டும். வழக்கை இழுத்தடித்து குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் பழைய வழிமுறைகளைக் கைவிடட் டும். விரைவான விசாரணைக்கு உத்தரவிடுவ தோடு, அந்த விசாரணை முறையாக நடைபெறத் தோதாக, வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபட்ட வர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பழங்குடியினர் வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக் கும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதும் அவசியம்.

    இப்படிப்பட்ட அத்துமீறல்கள் இனி காவல் துறையில் நடக்காது என்பதை, அந்தத் துறைக் கும் பொறுப்பு வகிப்பவரான முதலமைச்சர் உறுதிப்படுத்தியாக வேண்டும். இந்த நான்கு பழங்குடிப் பெண்களுக்காக மாநில அளவில் போராட்டக்குரல் வலிமையாக எழுந்து, அவ் வாறு உறுதிப்படுத்தச் செய்யட்டும்.

     

    Tribal women allege rape by cops in Tamil Nadu

    Villapuram, Tamil Nadu:    Four tribal women have alleged that they were raped by the police in the Villupuram district of Tamil Nadu.

    In their complaint, the women have said that cops from the Tirukovilur police station picked them up for interrogation on November 22 and sexually assaulted them that night

    Two of the complainants are married, one is pregnant.The women allege that police took them in for a theft enquiry and raped them.

    Police officials have confirmed that the SP and the DIG of the area are rushing to the village where the  incident took place. They have ordered  a probe into the alleged rape. They say an FIR will be filed soon and they would investigate the case with an open mind. They would take stringent action against their men if the accusations were found to be true.

    Police sources have also said that the husband of one of the women was a property offender and that the police had gone to the village to nab him and others. They suggested that the women’s claims of rape could be a strategy to escape legal action.

    1 Comment
  • புன்னகைக்க மட்டுமல்ல புரிதலுக்கும்….

    ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். ` அதற்கு அந்த ஞானி, ”அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ”என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ”எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ”என்று கேட்டார். சீடன் சொன்னான், ‘குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. ` ‘ புன்முறுவலோடு ஞானி சொன்னார்,”இது தான் காதல்.” ` பின்னர் ஞானி,”சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.” சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,”இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? ”சீடன் சொன்னான், ‘இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.’ ` இப்போது ஞானி சொன்னார், ”இது தான் திருமணம்.”

    — ஓஷோ—

    No Comments
  • கதை சொல்லி – அ. வெண்ணிலா (A. Vennila)

    “என் உடலை விதைத்திருக்கிறார்கள்
    என் மார்புக் காம்புகள் நீரூற்ற‌
    பூச்செடிகளும் மரங்களும்
    துளிர் வி ட்டு வளர்ந்து
    விருட்சமாயிருந்தன.
    விளையாட
    சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
    போட்டியிட்டன.

    உழுதார்கள் விதைத்தார்கள்
    அறுவடை செய்தார்கள்.
    காலாதீதத்தில்
    என் உடல்
    நல்ல விளைநிலமாயிருந்தது.
    வண்ணத்துப் பூச்சிகளும்
    தேடி வரும் ஆவலில்
    பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
    முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
    அதிக தேவையிருந்ததால்
    என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.

    என் பால் வாசம் நுகர்ந்து
    வேலி வரை வந்து
    உள் நுழைய முடியாமல்
    தவித்துக் கொண்டிருக்கும்
    வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
    தட்டான்களுக்காகவும்
    என் உடலை சுருட்டிக் கொண்டு
    தொட்டிச் செடி பூவாக்கி
    காத்திருக்கிறேன்.
    சூரிய‌னுக்கு வெகு கீழே.”

    – அ.வெண்ணிலா.

    கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். ‘ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்’என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நான‌ற்ற‌ நிலையில் சிந்திப்ப‌த‌ற்கும் காட்சி வெளி தேவையாக‌ இருக்கிற‌து

    சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.

    வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.

    தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.

    அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். ‘மலம்’ கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது ‘அவ்வளவு பட்டாம்பூச்சி’ என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.

    “காக்கா க‌தை
    குட்டி இள‌வர‌சி க‌தை
    தேவதை க‌தை என‌
    சொல்லி ம‌கிழ்ந்த‌
    பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
    இர‌வொன்றில்
    ந‌ம்மால்
    குழ‌ந்தைக‌ளைப் போல்
    க‌ட்டிய‌ணைத்து
    உற‌ங்க‌ முடிந்த‌து”

    – அ.வெண்ணிலா

    அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் க‌ற்ப‌னையும் அத‌ன் உன்ன‌த‌ நிலையில் செய‌ல்ப‌டும் த‌ருண‌ங்க‌ள் அது. நிறைய‌ க‌தைக‌ளைத் த‌ம‌க்குள் வைத்துக்கொண்டிருந்தார்க‌ள். முல்லாக் க‌தைக‌ள் தொட‌ங்கி அவ‌ர்க‌ளுள் நிறைந்திருந்த‌ க‌தைக‌ள் ஏராள‌ம். க‌தைக‌ள் சொல்ல‌ அவ‌ர்க‌ள் எந்த‌ த‌ய‌க்க‌மும் காட்ட‌வில்லை. க‌தைக‌ளை ஆர‌ம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்க‌ள்.

    க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்தேன் . இருட்டிய‌ வானில் அரை நில‌வோடு வெள்ளிக‌ள் மிக‌ப்பிர‌காச‌மாக் மின்னிக் கொண்டிருந்த‌ன‌. குதுகாலிக்கும் ம‌ன‌நிலையை என்னுள் கிள‌றி விட்ட‌து. ‘க‌ப்ப‌ல் பார்க்க‌ விட்ட‌ சேவ‌க‌ன் என்ன‌ செய்திருப்பான்’ என‌ சிறுவ‌ய‌து முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த‌ சேவ‌க‌ன் க‌தைக‌ளோடு க‌தைக‌ளின் வாச‌னையோடு த‌ன்னை இழ‌ந்து திரும்புகிறான்.

    அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.

    http://koodu.thamizhstudio.com/kadhaisolli_18.php

    No Comments
  • இனி கிடைக்குமா ?

    வயல்வெளி பார்த்து
    வறட்டி தட்டி
    ஓணாண் பிடித்து
    ஓடையில் குளித்து
    எதிர்வீட்டில் விளையாடி
    எப்படியோ படித்த நான்
    ஏறிவந்தேன் நகரத்துக்கு !

    சிறு அறையில் குறுகிப் படுத்து
    சில மாதம் போர்தொடுத்து
    வாங்கிவிட்ட வேலையோடு
    வாழுகிறேன் கணிப்பொறியோடு !

    சிறிதாய்த் தூங்கி
    கனவு தொலைத்து
    காலை உணவு மறந்து
    நெரிசலில் சிக்கி
    கடமை அழைக்க
    காற்றோடு செல்கிறேன்
    காசு பார்க்க !

    மனசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    மாறிப் போகுமோ ?

    மௌசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    பழகிப் போகுமோ ?


    வால்பேப்பர் மாற்றியே
    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ ?

    சொந்த பந்த
    உறவுகளெல்லாம்
    ஷிப் பைலாய்
    சுருங்கிப் போகுமோ?

    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ
    மொத்தமும்!
    புரியாது
    புலம்புகிறேன்
    நித்தமும்!


    தாய் மடியில் தலைவைத்து
    நிலவு முகம் நான் ரசித்து
    கதைகள் பேசி
    கவலைகள் மறந்த காலம்
    இனிதான் வருமா ?

    இதயம் நனைத்த
    இந்த வாழ்வு
    இளைய தலைமுறைக்காவது
    இனி கிடைக்குமா ?


    சொந்த மண்ணில்
    சொந்தங்களோடு
    சோறு திண்பவன்
    யாரடா ?
    இருந்தால் அவனே
    சொர்க்கம் கண்டவனடா!

    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments