Learning together

Bookmark this on Hatena Bookmark
Hatena Bookmark - Learning together
Share on Facebook
[`google_buzz` not found]
[`yahoo` not found]
[`livedoor` not found]
[`friendfeed` not found]
[`tweetmeme` not found]

தெரிந்து கொள்வோம் வாங்க….

 • ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்படு கின்றன. இது வரை 10 ஆயிரம் கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. கார்பன் மற்றும் எண்ணை யிலிருந்து கிரேயான் தயாரிக்கப்படு கிறது. எட்வின் பின்னி மற்றும் ஹரால்ட் ஸ்மித் என்னும் இருவர் நச்சுத் தன்மையில்லாத கிரேயானை 1900-ம் ஆண்டு வாக்கில் உருவாக்கினர். பின்னியின் மனைவி ஆலிஸ்தான் இந்தக் கலர் பென்சிலுக்கு கிரேயான் என்று பெயர் சூட்டியவர். சாக்பீஸ் போன்று இதன் வடிவம் இருப்பதால் இதற்கு அதனையொட்டி பெயர் சூட்டப்பட்டது. கிரேயான் என்பது பிரெஞ்சு சொல் ஆகும். சாக்பீசிற்கு பிரெஞ்சு மொழியில் கிரை என்று பெயர். ஓலா என்றால் எண்ணை. இந்த இரண்டு வார்த்தைகளையும் சேர்த்துதான் ஆலிஸ் கிரேயான் என்ற பெயரை உருவாக்கி அதற்குச் சூட்டி விட்டார். 1957-ம் ஆண்டு ஒரு பெட்டியில் 8 கிரேயான் பென்சில்தான் வைக்கப்பட்டன. அப்போது மொத்தம் 40 வண்ண கிரேயான் பென்சில்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது 120 வண்ணங்களில் கிரேயான்கள் தயாரிக்கப்படுகின்றன.
 • பறவை என்றால் அது `கீச் கீச்’என்று சத்தம் போடும். அல்லது கத்தும். ஆனால் நாய் மாதிரி குரைக்குமா?… அப்படியொரு பறவையும் இருக்கிறது. அந்தப் பறவையின் பெயர் ஆன்ட்பிட்டா. வாத்து இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவை நாய் மாதிரி குரைக்கிறது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் 1998-ம் ஆண்டுதான் இந்தப் பறவை இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது.
 • பறவையின ஆராய்ச்சியாளர் ராபர்ட் எஸ்.ரிக்லே, ஈகுவடார் நாட்டின் ஆன்டிஸ் மலைத் தொடரில் இந்தப் பறவை இருப்பதைக் கண்டறிந்தார். இப்போது இந்த இனப் பறவைகள் மொத்தம் 30 இருக்கின்றன.
 • குரைப்பது என்கிற போது இன்னொரு விஷயமும் உண்டு. நாய்கள் குரைக்கும் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் குரைக்காத நாய்களும் இருக்கின்றன. பாசென்ஜி,ஸ்மாலிஷ் இன நாய்கள் குரைப்பதில்லை. இதோ போல் ஆப்பிரிக்கா கண்டத்தில் காணப்படும் காட்டு நாய்களும் குரைப்பதில்லை.
 • அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

 • * ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

  * அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

  * கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

  * ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

  * எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

  * இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

  * பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

  * பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

  * சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?… வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

  *பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

  *10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

  *உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

  *ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
  அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

  *மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

  *உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

  *மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

  *வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

  தகவல்:யாழ் இணையம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Did you like this? Share it:
awareness, Education, General, Good, Interesting ,

2 comments


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *