Private

Bookmark this on Hatena Bookmark
Hatena Bookmark - Private
Share on Facebook
[`google_buzz` not found]
[`yahoo` not found]
[`livedoor` not found]
[`friendfeed` not found]
[`tweetmeme` not found]

என்ன இருந்தாலும் தனியார் சர்வீஸ் மாதிரி வராது சார்…

‘அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் கணக்கில் போதுமான கையிருப்பு
இல்லாததால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
நிலுவைத் தொகையான ரூபாய் 2,212 செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொண்டு
எங்கள் சேவைகளை தொடர்ந்து அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள்
வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள எண் 66832ஐ அழுத்துங்கள்.
உங்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’.

நம்ப முடியவில்லை என்கிறீர்களா? உங்கள் செல்பேசியில் பேசுவதற்கு சேவை
வழங்கும் நிறுவனமும், உங்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதற்கு சேவை வழங்கும் டிடிஎச் நிறுவனமும் இப்படிப்பட்ட தகவலை
அனுப்புவது போல கக்கூஸூக்கு தனியார் சேவையும் அது தொடர்பான கட்டண தகவலும்
வராது என்று உறுதியாக நினைக்கிறீர்களா? உங்கள் நினைப்பை மறுபரிசீலனை
செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

மத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய
தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.மூளையைக் கசக்கி மன்மோகன்
சிங், ப சிதம்பரம் போன்ற ‘பொருளாதார நிபுணர்கள்’ சொந்தமாக இந்தக்
கொள்கையை உருவாக்கினார்கள் என்று நினைத்தீர்கள் என்றால் அங்கும் கோட்டை
விட்டு விட்டீர்கள். இது 2005-ல் வெளியான உலக வங்கி அறிக்கையிலிருந்து
காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட கொள்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 2G அலைக்கற்றை உரிமத்துக்கு பல நூறு கோடிகள் லஞ்சம் கொடுத்து/வாங்கி
தனியார் சேவை வழங்கப்படுவதைப் போல தண்ணீர் வழங்கும் சேவை உரிமம்
பெறுவதற்கான ஏலம், அதைத் தொடர்ந்து தனியார் முதலீடு, தாம் பயன்படுத்தும்
ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் மாதா மாதம் மக்கள் செலுத்தும் கட்டணம்
என்று இந்தியாவின் பொருளாதார ‘வளர்ச்சி’ அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து
விடும். உரிமத்துக்கு சட்டப்படி கொடுக்கும் தொகை, சட்ட விரோதமாக
அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் லஞ்சம், தமது
முதலீட்டுக்கான லாபம் என்று தனியார் நிறுவனத்துக்கு குளிப்பவரும், கை
கழுவுபவரும் கப்பம் கட்ட வேண்டியிருக்கும்.

‘என்ன இருந்தாலும் தனியார் சர்வீஸ் மாதிரி வராது சார்’ என்று நாம்
விதந்தோதும் சேவை தண்ணீர் துறையிலும் கிடைக்க ஆரம்பித்து விடும். ‘தரமான
தனியார்’ தண்ணீர் ஏழைகளுக்கும் கிடைக்கச் செய்ய 2020-ல் ‘தளபதி தண்ணீர்
திட்டம்’ (கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல) செயல்படுத்தப்படும் என்றும்
எதிர்பார்க்கலாம்.

குடிமக்கள் முழுக்க முழுக்க ‘வாடிக்கையாளராக’ மாற்றப்படுவதுதான்
உலகமயம்-தனியார் மயம்-தாராளமயத்தின் இறுதி நோக்கம்.

சக மாணவனை தன்னுடன் நடனமாட வைக்கும் குளோஸ்அப் பற்பசை, அக்பரின் மகன்
ஜஹாங்கீர் என்று நினைவில் வைத்துக் கொள்ள உதவும் காம்ப்ளான் ஊட்டச் சத்து
பானம், கல்லூரிக்குள் நுழையும் போது எல்லா மாணவரையும் முகத்தின்
சிகப்பழகில் மயங்கச் செய்யும் சிகப்பழகு கிரீம் போன்றவை அத்தகைய
‘மதிப்பை’ வாங்குவோருக்கு அளிக்கின்றன.

ஒரு நுகர்வோரின் அடிப்படை உணர்வு ‘எனக்கு வேண்டும்’ என்பது, ஒரு
குடிமகனின் அடிப்படை உணர்வு ‘நமக்குத் தேவை’ என்பது. முதலாளித்துவ
பொருளாதார அமைப்பில் ஒவ்வொரு மனிதரும் ஒரு பகுதி குடிமகனாகவும், ஒரு
பகுதி நுகர்வோராகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதில் நுகர்வோரின் பங்கை
அதிகமாகிக் கொண்டே போவதுதான்  பொருளாதார ‘வளர்ச்சி’யின் சூத்திரம்.

‘நமது நாடு நமதில்லை, நாம் நாட்டின் குடிமக்கள் இல்லை, நாம் அனைவரும்
வணிக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள்’ என்று மாற்றி விடுவதுதான்
முதலாளித்துவ அமைப்பின் இறுதி இலக்கு.

ரிலையன்ஸ் இந்தியாவில், ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் நீர்
குடித்து, ரிலையன்ஸ் பிரஸ்ஸில் பல் விளக்கி, ரிலையன்ஸ் அடுப்பில்,
ரிலையன்ஸ் குக்கரில் சமைத்து, ரிலையன்ஸ் டி.வி பார்த்து, ரிலையன்ஸ்
செல்பேசியில் பேசி, நோய் வந்தால் ரிலையன்ஸ் மருந்து சாப்பிட்டு, இறந்தால்
ரிலையன்ஸ் மயானத்தில் எரிக்கப்பட்டு……..இதுதான் குடிமக்கள்
வாடிக்கையாளர்களாக மாறும் நிலை.

அப்படி மாற்றப்பட்டால் நாம் அடிமைகள் என்பதையும், நமது உயிர் வாழ்தலின்
பாக்கியமே அவர்கள் அருளும் பிச்சை என்பதையும், இந்த பிச்சை பெரும்பாலான
மக்களை சராசரி வாழ்விலிருந்து தூக்கி ஏறியும் என்பதையும் புரிந்து
கொண்டால், நீங்கள் வாடிக்கையாளர் எனும் அடிமைத்தனத்தை எதிர்த்து போராட
வரலாம். குடிமக்கள் என்ற தகுதியையும் தக்க வைத்துக் கொள்ளலாம். என்ன
சொல்கிறீர்கள்?

 

 

Related Posts Plugin for WordPress, Blogger...
Did you like this? Share it:
Article, awareness, Chennai, General, lol, Mnc, tamil, Think, world

1 comment


  1. sivamarimuthu

    100% FDI on mining, morethan 50% FDI in Retail these are some examples of our economic principles. our wealth is not used for us.We are trained to became a member of service provider industries(ex IT) not a capital goods industry.We are trained to imitate,we are converted as followers.

    still we are slaves

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *