Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு:தமிழாக்கம் பாகம் -1 , வரவேற்புக்கு மறு மொழி-செப்டம்பர்,11 ,1893
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு:தமிழாக்கம் பாகம் -1 , வரவேற்புக்கு மறு மொழி-செப்டம்பர்,11 ,1893
அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே !!!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கின்றேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியரின் பரம்பரை பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகின்றேன். பல்வேறு இனங்களையும், பிரிவுகளையும் சார்ந்த இந்து பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகின்றேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றி குறிப்பிடும்போது வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பலநாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை இவர்களைத்தான் சாரும் என்று கூறினார்கள், அவர்களுக்கும் எனது நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், ஆகியவற்றை எதிப்பு இன்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்கு புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன். எதையும் வெறுக்காமல் மதிக்கவேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கின்றோம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகின்றேன். ரோம்மணிரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து, சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்த கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனதாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். மேலும் பெருமை மிக்க சொராஸ்திரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.
அன் அருமை சகோதர்களே!!! பிள்ளை பருவத்திலிருந்து நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும், இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு உங்கள் முன் குறிப்பிட விரும்புகின்றேன்.
“எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் தன்மையினைப் போன்றுலகோர்
பின்பற்று தன்மை யாலே
சங்கமிகு நெறி பலவாய் நேராம்
வளைவாம் தோன்றினாலும்
அங்கு அவைதாம் எம்பெரும!! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறேயன்றோ!!!
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிக, மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்த பேரவை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அறுபுதமான உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். யார் எந்த வழியாக என்னிடம் வரமுயன்றாலும் நான் அவர்களை அடைகின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கின்றார்கள். அவையெல்லாம், இறுதியில் என்னையே அடைகின்றன.
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த பூமியினை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும், மீண்டும் மூழ்கடித்து நாகரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்து விட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும். அவற்றிற்கான அழிவு காலம் வந்துவிட்டது. இந்த பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணியோசை மதவேரிகளுக்கும், வாளாலும், பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கும் சாவு மணி ஒசையாகும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
அடுத்ததாக “நாம் ஏன் ஒத்துப் போவதில்லை” என்ற தலைப்பில் செப்டம்பர் 15 திகதி 1983 -ல் ஆற்றிய உரை தொடரும் …அன்புடன் கே எம் தர்மா…(28 APRIL 2011)
நன்றி ..ஆங்கில மற்றும் தமிழ் பதிவுகளை பெற உதவிய வலைதலங்களுக்கும், வழிகாட்டிய நண்பர்களுக்கும்.
Published on September 28, 2011 · Filed under: Good; Tagged as: ab, arun balaji selvaraj, arunbalaji blog, arunbalaji selvaraj, as, blog, discuss, forum, itacumens, nal, nalv, nalvallikatti, nalvazhikatti arunbalaji, navazhikatti, npt arun, npt arunbalaji, pollachi arunbalaji, wordpress