• Story

     

    ராஜா ! மஹாராஜா ! !

    ராஜா ! மஹாராஜா ! !

    ஒரு நாள் மஹாராஜா அரசவையில் வீற்று இருக்கும் போது

    ஒருபெரிய சந்தேகம் வந்தது. அதை அங்கு இருக்கும் எல்லோரிடமும்கேட்டு

    கொண்டு இருந்தார். அந்த சந்தேகம் என்னவென்றால்

    இந்த உலகத்தை விட பெரியது எது?

    இந்த உயிரை விட பெரியது எது?

    இந்த கடலை விட பெரியது எது? என்று தான் அவரது சந்தேகம்.

    அவையில் இருந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுந்து இதுநம்

    தலைமை அமைச்சருக்கு தான் தெரியும் என்று கூற அவரோ “சற்று

    அவகாசம் தாருங்கள் என்று கூறினார். நாட்கள் கடந்தன.எல்லோரும்

    அதை மறக்க மன்னனின் சேவகன் ஒருவன் “ அரசேநீங்க அன்றைக்கு கேட்ட

    கேள்விக்கு இந்த தலைமை அமைச்சர்இன்றைய வரை பதில் சொல்லாமல்

    ஏமாற்றி வருகிறார் என்று.

    “இதை கேட்ட அரசர் கோபம் கொண்டு அரசவைக்கு சென்றுதலைமை

    அமைச்சருக்காக காத்து இருந்தார்.

    அமைச்சர் வந்த உடன் “மஹாராஜா என்ன! இன்று சற்று கோபமாகஉள்ளீர்கள்

    என்று கேட்க அதற்கு அவர் “அமைச்சரே ! நீர் என்னஎன்னை ஏமாற்றி

    கொண்டு இருக்கிரிரா ?” இல்லை மஹாராஜா ஏன்?

    திடீர் என்று உங்களுக்கு இப்படி தோன்றியது.

    “நான் கேட்டகேள்விக்கு பதில் எங்கே?” நாளை காலையில் எனக்கு

    பதில் வந்துஆக வேண்டும் என்று கூறி எழுந்து சென்று விட்டார்.

    தலைமை அமைச்சர் வீட்டிற்கு சென்று சோகமாக உட்கார்ந்துஇருந்தார்.

    நான் என்ன செய்ய முடியும்.இந்த உலகை விட ,உயிரைவிட, கடலை

    விட பெரியது எது?என்று எவ்வாறு எனக்கு தெரியும்.

    அவர் மனைவியிடம் இதை சொல்லி வருத்தப்பட்டார். அவர்மனைவி “ நாம்

    மஹாராஜா வின் கோபத்திற்கு வீணாக ஆளாகபோகிறோம்.” என்று கூறினார்,

    இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அவர்களின் மகன்“ராஜா”அங்கு

    வந்தான் . என்ன ஆகிவிட்டது இப்போ,மஹாராஜாவிற்கு உயிரை விட ,

    கடலை விட , உலகத்தை விட, எதுபெரியது என்று தெரிய வேண்டும் ,

    அவ்வளவு தானே நான் வந்துஅவருக்கு சொல்கிறேன் என்று ராஜா கூற

    “மகனே ராஜா! உன் அப்பாதலைமை அமைச்சர் அவருக்கே தெரியாதது

    உனக்கு எப்படி கண்ணாதெரியும் ?” என்று அம்மா கேட்டாள்.

    அப்பா, அம்மா என்னை நம்பி என்னிடம் விடுங்கள் , என்னை

    நாளைஅரசவைக்கு கூட்டி செல்லுங்கள் என்று சொன்னான் ராஜா .

    ஒருவழியாக இருவரும் சமாதானமாகி ஒப்புக் கொண்டனர்.அடுத்த

    நாள்காலை அரசவையில் ,

    “மஹாராஜா வருகிறார்” என்று கூற காவலாளி. எல்லோரும்ஆவலாக

    இருந்தார்கள். அப்படி என்ன தான் இந்த தலைமைஅமைச்சர் சொல்வார்

    என்று அதுவும் இவர் தன் மகனையும்மனைவியையும் அழைத்து வந்து

    இருக்கிறாரே! சிலர் “எனக்குதெரியாது !” என்று கூறி மன்னிப்பு கேட்க தான் ,

    இவர் அழைத்துவந்தாக சொன்னார்கள். அரசர் வந்தாயிற்று . அரசவை கூடியது.

    தலைமை அமைச்சர் : மஹாராஜா உங்களின் கேள்விக்கு என்அருமை

    மகன் ராஜா பதில் அளிப்பான்.

    மஹாராஜா : என்ன உன் மகனா?

    தலைமை அமைச்சர் : ஆம்…

    மஹாராஜா : சரி வரச் சொல்

    ராஜா : உங்களின் கேள்விகள் என்ன மஹாராஜா ?

    மஹாராஜா : என் கேள்விகள் இந்த உலகை விட,உயிரைவிட,கடலை

    விட பெரியது என்ன? என்பது தான்.

    ராஜா : மிகவும் சுலபமானது மஹாராஜா?

    மஹாராஜா : எப்படி?

    ராஜா : உலகை விட பெரியது

    காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

    ஞாலத்தின் மாணப் பெரிது .

    விளக்கம் :தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி,சிறியதாகஇருந்தாலும்,

    அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப்பெரியதாகும்.

    ராஜா : உயிரை விட பெரியது ?

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

    உயிரினும் ஒம்பப் படும்.

    விளக்கம் : ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் அந்தஒழுக்கமே

    உயிரினும் மேலானதாகப் போற்றப்படும்.

    ராஜா : கடலை விட பெரியது ?

     

    “ பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

    நன்மை கடலிற் பெரியது ”

    விளக்கம்: பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய,

    அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை

    கடலினும் மிகப் பெரியதாகும்.

     

    இப்போது உங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா என்று

    ராஜாமஹாராஜாவிடம் கேட்க அவர் தலை குனிந்து நின்றார்.அந்தஅவையே

    ராஜாவின் அறிவு கூர்மையை பார்த்து வியந்து நின்றது.

    இந்த கதையில் இருந்து நாம் கற்றுக் கொண்டது,என்னவென்றால் திருக்குறளில் அனைத்திற்கும்விடை உண்டு.பின்பு பிறரிடம் திறமையையேபார்க்க வேண்டும்வயதை அல்ல

    -பொள்ளாச்சி அருண்பாலாஜி-

    ================================================================

    9 Comments