• நண்பர்களே ஒரு எழுத்து, ஒரு மொழி,

  தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

  உயிரெழுத்து: ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள்

  ஆ – பசு

  ஈ – கொடு ,பறக்கும் பூச்சி

  ஊ – இறைச்சி

  ஏ – அம்பு

  ஐ – அழகு, தலைவன் , வியப்பு

  ஓ – வினா , மதகு


  ம வரிசை: மா . மீ , மு , மே, மை , மோ

  மா – பெரிய , விலங்கு

  மீ – மேலே , உயரம்

  மு – மூப்பு

  மே – மேன்மை , மேல் , மாதம்

  மை – கண்மை , இருள்

  மோ – முகர்தல் , மோதல்

  த வரிசை: தா, தீ, து, தூ , தே, தை

  தா – கொடு , கேட்பது

  தீ – நெருப்பு

  து – கெடு, உண், பிரிவு

  தூ – வெண்மை , தூய்மை

  தே – தெய்வம்

  தை – மாதம்

  ப வரிசை: பா, பூ, பே , பை , போ

  பா- பாட்டு, நிழல், அழகு

  பூ – மலர்

  பே – நுரை , அழகு

  பை – பசுமை , உறை

  போ – செல்

  ந வரிசை: நா , நீ, நே ,நொ, நை , நோ

  நா – நாக்கு

  நீ – நின்னை

  நே – அன்பு , நேயம்

  நை – வருந்து, நைதல்

  நொ – நொண்டி , துன்பம்

  நோ – நோவு வருத்தம்

  க வரிசை: கா , கூ , கை , கோ

  கா – சோலை , காத்தல்

  கூ – பூமி , கூவுதல்

  கை – கரம், உறுப்பு

  கோ – அரசன் ,தலைவன் , இறைவன்

  வ வரிசை: வா , வீ , வை , வௌ

  வா – அழைத்தல்

  வீ – பூ , அழகு ,

  வை – கூர்மை, வைதல், வைத்தல்

  வௌ – கௌவுதல், கொள்ளை அடித்தல்

  ச வரிசை: சா, சீ, சே , சோ

  சா- மரணம் , பேய் , சாதல்

  சீ – இகழ்ச்சி , திருமகள்

  சே – எருது

  சோ – மதில்

  மற்ற எழுத்து: யா 

  யா – மரம்

  Related Posts Plugin for WordPress, Blogger...
  No Comments