• நரகத்து வாழ்க்கை!!!

    சென்னை  நகரத்தில் (நரகத்தில்) நடக்கும் கதை ! இது கற்பனை கதை அல்ல !

    இடம் : மின்சார கம்பியில் (காக்க கூட்டில் )
    கதாபத்திரங்கள் : ரதி காக்கா , ரவி காக்கா

    காக்கா கூட்டில் :

    இந்த இரைச்சல்ல யாராச்சு வாழமுடியுமா ? என் பிறந்தவிட்டில் எவ்ளோ சொகுசா வாழ்ந்தேன் தெரியுமா ? காலை 6 மணிக்கே இந்த இரைச்சல்…. யாப்பா இதை என்னால தாங்க முடியல ….!!!

    ஐய் ஐய் ஐய்ய்யோ தங்க முடியல …..காலைலே ஆரம்பிச்சுட்டிய புள்ள !!!

    நம்ம என்ன செய்ய ! பிழைக்க வந்த இடத்துல  இப்படிதான் இருக்கும் என்ன செய்ய புள்ள !

    காதலிக்கும்போது நல்லா தான் இருந்த ,இப்ப என்ன வந்துச்சு ?

    ஐயா நான் ஒன்னும் ஆரம்பிக்கல உள்ளதுதான் சொன்னேன் ..!

    நம்ம காதலிச்சது இங்க இல்ல! அப்பா நீங்க நல்லா தான இருந்திங்க ஊர்ல…

    இப்ப பாருங்க நீங்க கஷ்டபட்ருது இல்லாம என்னையும் கஷ்டபடுத்திறிங்க.

    பிழைக்க தான புள்ள வந்தோம் .. வந்த இடத்துல …. அப்படி இப்படி தான் இருக்கும் ….

    ஐயா சாமி இந்த மின்கம்பியில இருக்கிற கூட்டுல வள என்னால முடியாது ….இப்பவோ அப்பவோன்னு கிழே விழுந்து விடுமோனு பயமாவே இருக்கு …

    என்ன செய்ய . எல்லா இடத்துலயும் மனிதன் பிடிச்சுட்டான் …. காக்க , குருவிக்குகூட மரத்தை விட்டு வைக்காம மனுசங்க அளிச்சுட்டாங்க!!! அவங்க தங்கிறதற்கு…

    எதோ இந்த மின் கம்பியில அவங்களால வாழ முடியாதுன்னு ஒரே காரணத்தினலதான் விட்டு வெச்சுருக்காங்க  …

    சரி சரி இரை தேட நான் குப்பை மேட்டுக்கு போறேன் …

    இங்கு எங்கு இருக்கு குப்ப மேடு ?

    அதான் புள்ள குப்பை வண்டி !

    சிக்கிரம் வாங்க நான் தனியா இருக்கிறேன் …

    ஆமா ஆமா வேற எந்த பறவையாவது வந்து நம்ம கூட்ட பிடிச்சிகிடும் ….

    ம்ம்ம்… இந்த வாழ்கை வாழ்வதற்கு .. நம்ம ஒரே அடியாக செத்து போயிடுலாம் போல இருக்கு !

    எல்லாம் என் வயத்துல வளர்ற குஞ்சுக்காகத்தான் …. இல்லன்னா இந்த நகரத்துக்கு வந்த போதே செத்து இருப்பேன் …

    என்ன வாழ்கை இது !!! மரண பயத்தோடவே எத்தனை நாள் உயிரை கைல பிடிச்சிட்டு வாழ்றது …. இன்னும் கொஞ்ச நாள்ள முட்ட வைக்கணும் …. எங்க போவது ? இந்த மின் கம்பி வாழ்கை நரகம் தான் ….

    ஒரு நாள் மின்கம்பி அறுந்து விழ ரவி காக்கவும் & ரதி காக்கவும் வேறு வழி இல்லாம நகரத்தை விட்டு கலி செய்தது ….

     

    ” மின்சார கம்பியில் இரு மின்   சார காக்கைகள் ”
    “நகரம்

    இது நரகம்

    வாழ்பவர்களுக்கு ”
    “நகரம்

    ( அ) நாகரிகத்தின்

    உச்சகட்டம் ”

     

    “நகரம்

    இது சொர்க்கம்

    வராதவர்களுக்கு ”

     
    – பொள்ளாச்சி அருண்பாலாஜி-..

    Related Posts Plugin for WordPress, Blogger...
    Published on December 9, 2011 · Filed under: Article;
    3 Comments

3 Responses to “நரகத்து வாழ்க்கை!!!”

  1. mathivanan said on

    nice story nice condent

  2. Narendran said on

    Good Bala

  3. மனம் நெகிழ் கிறது, அருமையான பதிப்பு.

Leave a Reply