• ஜீவா

     
     
     
     
    பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்

    அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.

    போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

    ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு “என்ன காமராஜ் என்று கேட்டார்”.

    என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..? ” என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.

    உடனே ஜீவா, “நான் மட்டுமா..? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும் நின்று கொண்டே பேசினார்கள்.

    “நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்” என்றார் காமராஜர்.

    “காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்” என்று ஜீவா மறுக்க,

    “அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்” என்று அழைத்தார்.

    “அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் ” என்று அனுப்பி வைத்தார்.

    “கண்டிப்பாக வரணும்” என்றார் காமராஜர்.

    விழாவுக்கு அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

    “என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே…? ” என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

    உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம். தப்பா நினைச்சுக்காதே”… என்றார்.

    உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

    விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.

    “ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம்”….? என்றார்.

    கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்” என்றார்.

    உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட மாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையை விட வைச்சுடுவான் ” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர்.

    அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

    காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால் வடிக்க முடியாதது.

    நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா.

    தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர்,

    கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்கு போன் பண்ணுங்கள்”… என்பது தான்.

    இனி எங்கே கான்பது இது போன்ற தலைவர்களை
    அடித்தட்டு மக்களோடு மக்களாக வறுமையை உனர்ந்த,பகிர்ந்த தலைவர்கள்,கர்மவீரர், ஜீவா,கக்கன் போன்ற தலைவர்கள்.




    ப. ஜீவானந்தம்

    ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 211907 – ஜனவரி 181963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
    கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
    வைக்கம் சத்தியாக்கிரகம்சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டைதொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

     

    No Comments
  • லெட்ஸ் மூவ்’ – அமெரிக்க ஜனாதி பதியின் மனைவி மிஷேல் ஒபாமா தொடங்கியிருக்கும் இயக்கம் இது!
    எதற்காக?!
     ‘சர்க்கரைத் தண்ணீரான கோக், பெப்ஸி போன்றவற்றைக் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக நிறைய தண்ணீர் குடியுங்கள்.
     கொழுப்பும் புரதமும் மிகுந்த பீட்ஸா, பர்கர் வேண்டாம். அதற்குப் பதிலாக கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.
     டி.வி-யே கதி என்று பழியாகக் கிடக்காமல், விளையாட்டுத் திடலுக்கு போய் வியர்க்க விறுவிறுக்க விளையாடுங்கள்.
     பள்ளிக்கு காரில் போய் இறங்காமல், நடந்தே சென்று வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்’
    – இந்த நான்கு செய்திகளை அமெரிக்க குழந்தைகளின் மனதில் பதியவைக்க, கடந்த நான்கு ஆண்டுகளாக மிஷேல் முன்னெடுத்து வரும் இயக்கம்தான், ‘லெட்ஸ் மூவ்’! இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முழு ஒத்துழைப்பு கொடுத்தபோதும், இவரின் முயற்சி முழுமையாக நிறைவேறவில்லை. இந்த இயக்கமே கடும் சவாலை எதிர்நோக்கி இருக்கிறது இப்போது!
    அமெரிக்கப் பெற்றோர்கள், பொருள் தேடுவதிலேயே பிஸியாகிவிட்டதால்… வீட்டில் சமைத்த உணவைக் குழந்தைகள் சாப்பிடுவது என்பது அரிதாகிவிட்டது. மூன்று வேளையும் நொறுக்குத்தீனியையே அதிகமாகச் சாப்பிடுகிறார்கள். தண்ணீர் குடிப்பதையே முழுக்க மறந்துவிட்டு, சர்க்கரைத் தண்ணீரான குளிர்பானங்களை மட்டுமே குடிக்கிறார்கள். இதனால் உடலில் சேரும் அதிக கொழுப்பு, கலோரிகளால், அமெரிக்காவில் மூன்று குழந்தையில் ஒரு குழந்தை, குண்டு (ஒபிசிட்டி நோய்) குழந்தையாக இருக்கிறது. இன்னொருபுறம் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலரும் டி.வி., கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் கேம்ஸ் ஆகியவற்றுக்கு அடிமையாகி, நாளன்றுக்கு ஏழரை மணி நேரத்தைச் செலவிடுகிறார்கள். ’2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளில் மூன்றுக்கு ஒரு குழந்தை டயபடீஸ், ரத்த அழுத்தம், கேன்ஸர், ஆஸ்துமா, இதய நோய்… போன்றவற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என்று அமெரிக்க மருத்துவர்கள் அஞ்சுகிறார்கள். இதெல்லாம்தான்…. ‘லெட்ஸ் மூவ்’ என்ற இயக்கத்தை ஆரம்பிக்க வைத்தது.
    ‘குழந்தைகள் ஆரோக்கியமான உணவைச் சாப்பிடவும், ஓடியாடி விளையாடவும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்; ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்; அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்; சுற்றுப்புற சமுதாயம் என்ன செய்யவேண்டும்?’ – இது எல்லாவற்றையும் ஓர் அட்டவணையாகத் தீட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் மிஷேல். ஆனால், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று ஆராய்ந்தபோது, வீட்டில் அப்பா, அம்மாக்கள் சத்தான உணவுகளைப் பற்றி என்னதான் எடுத்துச் சொன்னாலும், பள்ளிக்கூட வளாகத்திலேயே கோக், கேஎஃப்சி, மெக்டொனல்ட்ஸ் போன்ற விளம்பரங்கள் இருப்பதும், பள்ளிக்கூட கேன்டீன்களிலேயே சிப்ஸ், பர்கர், ஹாட் டாக், கோக் போன்றவை விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி, பள்ளிக்கூடத்தில் துரித உணவுகளுக்கான விளம்பரங்களைத் தடை செய்யவும், பள்ளியில் விற்பனை செய்யப்படும் உணவுகளில் அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார் மிஷேல்.
    பிள்ளைகளைத் துருப்பிடிக்க வைக்கும் துரித உணவுகளுக்கு எதிராக மிஷேல் தொடுத்திருக்கும் யுத்தம் நான்கு ஆண்டுகளை கடக்கும் நிலையில்… இதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகளில் தற்போது கொடுக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளைக் குழந்தைகள் வீண் செய்கிறார்கள். பர்கரும் கோக்கும் பள்ளியில் கிடைக்காவிட்டால் என்ன, பள்ளிக்கு வெளியில் சென்று சாப்பிடத்தான் செய்கிறார்கள். அதனால் ‘மிஷேல் பரிந்துரைக்கும் தீர்வானது நடைமுறைக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று சொல்லி… துரித உணவுகளை மீண்டும் கல்விக்கூடங்களுக்குள் கொண்டு வர துரித உணவகங்கள் மறைமுக யுத்தத்தில் இறங்கியுள்ளன.
    ‘பர்கர், பீட்ஸா பற்றி இப்போது இவ்வளவு பேசும் மிஷேலே முன்பெல்லாம் இதுபோன்ற உணவுகளை விரும்பிச் சாப்பிடுவது மட்டுமல்லாது, தன் மகள்களுக்கும் கொடுப்பார். அவருக்கு உணவு விஷயத்தில் ஞானோதயம் பிறந்துவிட்டது என்பதற்காக நாட்டில் இருக்கும் அத்தனை பேர் மீதும் அதைத் திணிப்பது சரியல்ல. நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று கட்டுப்படுத்த முயற்சிப்பதெல்லாம் டூ மச்’ என்கிற ரீதியில் தனிமனித சுதந்திரத்தை முன் வைத்தும் துரித உணவகங்கள் கத்துகின்றன.
    துரித உணவு என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம். இதன் மீது மிஸ்டர் ஒபாமாவே கைவைத்தாலும், பண ருசி கண்ட தொழில்முதலைகள் சும்மா இருக்க மாட்டார்கள்தான். ஆனாலும், ‘துரித உணவகங்களின் சூழ்ச்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று போராடும் அமெரிக்க அம்மா மிஷேலின் போராட்டம் வெற்றி பெறவேண்டும்’ என்பதுதான் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறைகொண்ட நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை!
    http://www.letsmove.gov/eat-healthy
     நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?!

     

    No Comments
  • Ramakaryam Sukumar,Pollachi

    IMG_20140301_114528

    Ramakarayam-1

    Pollachi Ramakarayam seva Trust-1

    No Comments
  • Education is not all about studying and getting good marks. It is really a means to discover new things which we don’t know about and increase our knowledge.

    An educated person has the ability to differentiate between right and wrong or good and evil. It is the foremost responsibility of a society to educate its citizens.

    Focus should be on women’s education because the knowledge and empowerment of one woman can bring about a change in a family and even the society as a whole. It is the uneducated and illiterate people who think women are not entitled to education.

    A person becomes perfect with education as he is not only gaining something from it, but also contributing to the growth of a nation.

    We must realise the importance of education. We must aim to ensure that each citizen of our nation is educated and independent.

     

     

    2 Comments
  •  

    நம்மோடு வாழ்வார் நம்மாழ்வார்…

    ஐயாயிரம் கோடி கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை… அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. ஏனென்றால் இவனுக்கு மானம் தான் பெரிது.. –இப்படி விவசாயிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று நம்மிடையே இல்லை.
    வேளாண் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். ஆனாலும், படித்து கற்றுக்கொண்டதை நிராகரித்துவிட்டு, இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்ட உண்மைகளை மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். அரசு வேளாண் ஆய்வு நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றிய நம்மாழ்வார் அப் பணியை உதறித் தள்ளினார். “இங்கே செய்யப்படுபவை எல்லாம், விவசாயிகளுக்குப் பயன் தராத ஆராய்ச்சிகள். அதனால்தான், இந்த வேலையிலிருந்து விலகுகிறேன்’ என்று வெளிப்படையாக அறிவித்தவர் .
    பின்னர், கிருஷ்ணகிரி மலைப் பகுதி கிராமங்களில் தன்னார்வப் பணிகள் செய்தார். “இந்த மக்களிடம் பழகிய பின்னர்தான், தான் கற்றவை எல்லாம் அறிவே அல்ல. உண்மையான அறிவு மக்களிடம்தான் இருக்கிறது’ என்றுணர்ந்து அந்த மக்களிடம் இருந்து தான் கற்ற விவசாய நுட்பங்களை சமூகம் முழுமைக்கும் பரப்பியவர்.
    ரசாயன வேளாண்மை மட்டுமே பரவலாக செய்யப்பட்ட காலத்தில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக களம் இறங்கினார். ஏறத்தாழ முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர். நம்மாழ்வார் கூறிய இயற்கை வேளாண்மை முறைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், மனம் தளராமல் அவர் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து பணியாற்றினார். விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளன. அவரது இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் பயிற்சி மையங்கள் நூற்றுக் கணக்கில் உருவாகியுள்ளன.
    நாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்கள் வேளாண்மைக்குப் பயன்படாதவை என ஒதுக்கப்பட்டன. நம்மாழ்வார், அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் . தமது பணிகளுக்கென பலருடைய ஒத்துழைப்போடு உருவாக்கிய பண்ணையம்தான் வானகம் இன்றைக்கு இயற்கையை நேசிக்கும் ஆயிரக் கணக்கானோரின் ஆலயம்போல விளங்குகிறது.
    வாழ்நாள் முழுதும் சூழலையும் மரபு வளங்களையும் பாதுகாப்பதற்காகப் பணியாற்றியவர் நம்மாழ்வார். நம் முன்னோராவது வாடிய பயிருக்காக வாடியதோடு நின்றனர், ஆனால் பயிர் வாடக் காரணம் என்ன, பயிரை பெற்றெடுக்கும் மண் மலடாகாமல் காக்க வழி என்ன என்பதை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து எந்ந மாதிரியான விவசாயம், உழவு, உண்ணும் உயிரினங்களுக்கும் அதை உற்பத்தி செய்யும் மண்ணுக்கும் ஏற்றது என்பதை அனைவருக்கும் புரிய வைத்து, அந்த மாதிரியான விவசாயத்தை செய்து காட்டி வெற்றியும் பெற்றவர் .
    நஞ்சுகளே இல்லாத வேளாண்மை முறையை, இயற்கை வழி வேளாண் முறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. இயற்கையின் அங்கமான மனித உடலும் தவறு செய்யாது. ஆகவே, இயற்கை வழி வாழ்வியலின் மூலம் மருந்தே இல்லாத மருத்துவ முறைகளைக் கடைப்பிடிப்போம். மருந்தில்லா மருத்துவமுறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை வளங்களையும் மனித ஆற்றலையும் சுரண்டுவதற்காகத்தான் இன்றைய கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் தமக்குள் இருக்கும் சுய தன்மையை உணருவதே உண்மையான கல்வி. “தொட்டனைத் தூறும் மணற்கேணி” என்பதுபோல தமக்குள் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கே, அறிவு ஊற்றெடுக்கிறது. இதுவே இயற்கை நியதி. சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவோம், கடைபிடிப்போம்.
    இயற்கை எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இயற்கை எல்லா உயிர்களின் தாய். மனித குலம் தம் அறிவைக் கொண்டு இயற்கையைச் சுரண்டி, கொள்ளையடிக்கிறது. பெரும் நிறுவனங்களின் வணிகத்திற்காகவும் சில முதலாளிகளின் லாபத்துக்காகவும் இயற்கை அன்னை துன்புறுத்தப்படுகிறாள்.இயற்கை வளங்களைச் சூறையாடும் எந்தத் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளை இயற்கை வழியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
    இயற்கையின் உண்மையான பிள்ளைகளாக நாம் வாழ வேண்டுமெனில் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடித்தான் தீர வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் முழங்கிய நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர்வழி நிற்பதாகும். இயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர் இயற்கையோடு கலந்துவிட்டது… காற்றாக…மழையாக…வெயிலாக… அவர் நம்மோடு இருப்பார்… அவர் நம்மோடு விதைப்பார்.. அவர் நம்மோடு நாற்று நடுவார்… அவர் நம்மோடு களை எடுப்பார்.. அவர் நம்மோடு அறுவடை செய்வார்…
    எண்டோ சல்பான் தெளிப்பா
    மீத்தேன் குழாய் புதைப்பா
    ஆற்று மணல் கொள்ளையடிப்பா
    பிடி கத்தரிக்காய் விளைவிப்பா
    வால்மார்ட்க்கு வரவேற்பா
    எங்கும் எதிர்ப்பார் நம்மாழ்வர்

    நெளியும் மண்புழுவில்
    உருண்டோடும் ஆற்றுநீரில்
    பறக்கும் சிட்டுக்குருவியில்
    எருவாகும் தழைச்சசத்தில்
    என்றும் வாழ்வார்
    நம்மாழ்வார்..

    – எல்.முருகராஜ்

    source: Dinamalar.com – http://www.dinamalar.com/news_detail.asp?id=887638

    4 Comments
  • No Comments
  • உடல் மொழி
     
    Body language

    Body language

    1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.
     
    2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
     
    3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
     
    4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
     
    5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
     
    6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
     
    7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
     
    8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
     
    9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
     
    10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.
    3 Comments
  •  

    No Comments
  • EC – Encumbrance Certificate – வில்லங்க சான்றிதழ் online

    பொதுவாகவே ஈஸீ(EC – Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்)
    கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாடவேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்.அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
                      ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
    அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒருகாப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
    அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
    உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)

    Good News – To get your EC copies, Marriage Certificates,Certified Documents,Chit, Society Documents, Land Value Guidelines in ONLINE or HOME DELIVERY BY COURIER from Government for Rs 1 and Rs 25.

    Links to extract EC in English – http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

    Links to extract EC in Tamil – http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

    Links to extract Registered Documents –
    http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

    Links to extract Marriage Certificate
    http://www.tnreginet.net/english/smar.asp

    Links to CHECK Registered Chit Companies – http://www.tnreginet.net/english/schit.asp

    Links to CHECK Registered Society – http://www.tnreginet.net/english/society.asp

    Links to CHECK the Land Value Guideline (updated till 2012)
    http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp

    2 Comments
  •  

    99 LIFE HACKS TO MAKE YOUR LIFE EASIER!

    image
    image
    image
    imageimageimageimageimageimageimageimage

    imageimageimageimageimageimageimage

    image

    image

     

    image

     

    image

     

     

    imageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimageimage
    Related Posts Plugin for WordPress, Blogger...
    2 Comments