• கதை சொல்லி – அ. வெண்ணிலா (A. Vennila)

    “என் உடலை விதைத்திருக்கிறார்கள்
    என் மார்புக் காம்புகள் நீரூற்ற‌
    பூச்செடிகளும் மரங்களும்
    துளிர் வி ட்டு வளர்ந்து
    விருட்சமாயிருந்தன.
    விளையாட
    சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
    போட்டியிட்டன.

    உழுதார்கள் விதைத்தார்கள்
    அறுவடை செய்தார்கள்.
    காலாதீதத்தில்
    என் உடல்
    நல்ல விளைநிலமாயிருந்தது.
    வண்ணத்துப் பூச்சிகளும்
    தேடி வரும் ஆவலில்
    பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
    முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
    அதிக தேவையிருந்ததால்
    என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.

    என் பால் வாசம் நுகர்ந்து
    வேலி வரை வந்து
    உள் நுழைய முடியாமல்
    தவித்துக் கொண்டிருக்கும்
    வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
    தட்டான்களுக்காகவும்
    என் உடலை சுருட்டிக் கொண்டு
    தொட்டிச் செடி பூவாக்கி
    காத்திருக்கிறேன்.
    சூரிய‌னுக்கு வெகு கீழே.”

    – அ.வெண்ணிலா.

    கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். ‘ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்’என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நான‌ற்ற‌ நிலையில் சிந்திப்ப‌த‌ற்கும் காட்சி வெளி தேவையாக‌ இருக்கிற‌து

    சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.

    வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.

    தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.

    அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். ‘மலம்’ கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது ‘அவ்வளவு பட்டாம்பூச்சி’ என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.

    “காக்கா க‌தை
    குட்டி இள‌வர‌சி க‌தை
    தேவதை க‌தை என‌
    சொல்லி ம‌கிழ்ந்த‌
    பேச்சுக்க‌ளைப் ப‌ரிமாறிய‌
    இர‌வொன்றில்
    ந‌ம்மால்
    குழ‌ந்தைக‌ளைப் போல்
    க‌ட்டிய‌ணைத்து
    உற‌ங்க‌ முடிந்த‌து”

    – அ.வெண்ணிலா

    அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் க‌ற்ப‌னையும் அத‌ன் உன்ன‌த‌ நிலையில் செய‌ல்ப‌டும் த‌ருண‌ங்க‌ள் அது. நிறைய‌ க‌தைக‌ளைத் த‌ம‌க்குள் வைத்துக்கொண்டிருந்தார்க‌ள். முல்லாக் க‌தைக‌ள் தொட‌ங்கி அவ‌ர்க‌ளுள் நிறைந்திருந்த‌ க‌தைக‌ள் ஏராள‌ம். க‌தைக‌ள் சொல்ல‌ அவ‌ர்க‌ள் எந்த‌ த‌ய‌க்க‌மும் காட்ட‌வில்லை. க‌தைக‌ளை ஆர‌ம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்க‌ள்.

    க‌தை சொல்லி முடித்து வெளியே வ‌ந்தேன் . இருட்டிய‌ வானில் அரை நில‌வோடு வெள்ளிக‌ள் மிக‌ப்பிர‌காச‌மாக் மின்னிக் கொண்டிருந்த‌ன‌. குதுகாலிக்கும் ம‌ன‌நிலையை என்னுள் கிள‌றி விட்ட‌து. ‘க‌ப்ப‌ல் பார்க்க‌ விட்ட‌ சேவ‌க‌ன் என்ன‌ செய்திருப்பான்’ என‌ சிறுவ‌ய‌து முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த‌ சேவ‌க‌ன் க‌தைக‌ளோடு க‌தைக‌ளின் வாச‌னையோடு த‌ன்னை இழ‌ந்து திரும்புகிறான்.

    அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.

    http://koodu.thamizhstudio.com/kadhaisolli_18.php

    No Comments
  • இனி கிடைக்குமா ?

    வயல்வெளி பார்த்து
    வறட்டி தட்டி
    ஓணாண் பிடித்து
    ஓடையில் குளித்து
    எதிர்வீட்டில் விளையாடி
    எப்படியோ படித்த நான்
    ஏறிவந்தேன் நகரத்துக்கு !

    சிறு அறையில் குறுகிப் படுத்து
    சில மாதம் போர்தொடுத்து
    வாங்கிவிட்ட வேலையோடு
    வாழுகிறேன் கணிப்பொறியோடு !

    சிறிதாய்த் தூங்கி
    கனவு தொலைத்து
    காலை உணவு மறந்து
    நெரிசலில் சிக்கி
    கடமை அழைக்க
    காற்றோடு செல்கிறேன்
    காசு பார்க்க !

    மனசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    மாறிப் போகுமோ ?

    மௌசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    பழகிப் போகுமோ ?


    வால்பேப்பர் மாற்றியே
    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ ?

    சொந்த பந்த
    உறவுகளெல்லாம்
    ஷிப் பைலாய்
    சுருங்கிப் போகுமோ?

    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ
    மொத்தமும்!
    புரியாது
    புலம்புகிறேன்
    நித்தமும்!


    தாய் மடியில் தலைவைத்து
    நிலவு முகம் நான் ரசித்து
    கதைகள் பேசி
    கவலைகள் மறந்த காலம்
    இனிதான் வருமா ?

    இதயம் நனைத்த
    இந்த வாழ்வு
    இளைய தலைமுறைக்காவது
    இனி கிடைக்குமா ?


    சொந்த மண்ணில்
    சொந்தங்களோடு
    சோறு திண்பவன்
    யாரடா ?
    இருந்தால் அவனே
    சொர்க்கம் கண்டவனடா!

    No Comments
  • Most selfish 1 letter “I”, avoid it

    Most satisfactory 2 letters “We”, use it

    Most poisonous 3 letters “Ego”, kill it

    Most used 4 letters “Love”, value it

    Most pleasing 5 letters “Smile”, keep it

    Most fastest spreading 6 letters “Rumour”, ignore it

    Most hardworking 7 letters “Success”, achieve it

    Most enviable 8 letters “Jealousy”, distance it

    Most powerful 9 letters “Knowledge”, acquire it

    Most divine 10 letters “Friendship”, maintain it

    Related Posts Plugin for WordPress, Blogger...
    1 Comment