•  

    3 month groceries,Vegetables, rice given to destitute tribal woman via GH Sister Valarmathi on 22-May-2021

     

     

     

    No Comments
  • Kalakkad Mundanthurai Tiger Reserve Visit and Camp on Sivasailam on 4-Feb-2021

    Nalvazhikatti Volunteer Camp and visit on Sivasailam

     

    No Comments
  • No Comments
  • என் இனிய தமிழ் மக்களே ….

    உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா …

    நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் ,

    இந்த படைபிற்க்காக
    சுட்டது : பருத்தி வீரன் பாடலை
    சுடாதது : ஆந்த பாடல் வரிகளை

    Start Mizik…

    Team members:
    ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
    ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
    நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
    நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera

    Team members:
    கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
    கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
    மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேல
    மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேல

    PM:
    நிறுத்துங்கடி , ஏ நிறுத்துங்கடி , நிறுத்துங்கிறேன்ல Code அடிங்கடின்னா என்னா நக்கலா
    ஏய் Fresher நீ இங்க வா , டேய் associate நீ இங்க வா , எல்லாம் வரிசையா நில்லு
    நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்ன

    Team meber:
    யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு deliveryகிடையாது ஆமா

    PM:
    இங்க பார்யா கோவத்த , டேய் TL அட்ரா

    TL:(Team Leader)
    நாடரிஜ்ச fresher களா நீங்க எங்க சோடி ,
    உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
    C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
    C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
    ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமா
    ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமா

    PM:
    Codenna இப்படிதான் குத்தனும் , என்ன புரிஞ்சுதா

    Programmer:
    Design correct ல்லாத ப்ரொஜெக்ட்குள்ள ,
    இப்போரவுசு பன்னும் PM தம்பி
    நைட்டெல்லாம் codeaa குத்தி ,
    எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா ,
    கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா

    PM:
    அட , ராவெல்லாம் codeaa குத்தி ,
    உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
    இந்த experience உல்ல PM கிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடி

    Programmer:
    experience உள்ள PM கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
    பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா ,
    நீயும் அறிவுகெட்டு பேசாதடா

    Tester:
    அடி body மேல body வச்சி body க்குள்ள HTLML code வச்சி

    TL:
    அட , அப்படி போடு SAppu (Senior Associate )

    Tester:
    ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடா

    அஹா அஹா அஹா ….
    ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது Trouser
    ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது Trouser

    Test Lead:
    அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
    ஆமா ஆமா ஆமோய் ….

    பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா

    Test Manager:
    QC ஈல (QC = Quality Centre)…
    ஆமோய் ஆமோய் ஆமோய் …
    QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி ..
    QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
    நான் test planaai போட்டு வச்சென் MPP யில (MPP = Microsoft Project plan)
    நான் test planaai போட்டு வச்சென் MPP யில

    ஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியல
    ஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியல

    Designer:
    Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
    Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
    சப்பையான design changeu க்கு changeaa விடாம
    சப்பையான design changeu க்கு changeaa விடாம
    ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
    ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க

    TL:(Team Leader)
    அடி யாயி … ஆஹா ஆஹா ஆஹா

    ELT: (Entry Level Trainee)
    அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
    அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
    புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
    புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
    இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியல

    PM:
    போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
    போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
    ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே
    designerkku எனக்கும் சண்டை , இப்போ உடைய போகுது மண்டை
    அட designerkku எனக்கும் சண்டை , இப்போ உடையப்போகுது மண்டை

    PM & TL: என்ன fresher ங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டுநிக்கறீங்க , codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா .

    இப்படிக்கு என்றும் பால்முகம் மாரா … உங்கள் சுட்டிப்பய புள்ள

    No Comments
  • முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் !

    செய்ய கூடாத பாவத்தைச்
    செய்ததுபோல் காணப்படுவார்கள்

    ஒரு நாளென்பது
    ஒரு நாளாக அல்லாமல்
    வேலாக அவர்களின் விலா எலும்பைக்
    குத்திக் குடையும்

    இஸ்திரி இடப்படாத
    அவர்களின் சட்டைச் சுருக்கங்கள்
    அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக்
    கொண்டுதரும்

    தன் சகாக்களின் முன்பாக
    உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தயங்கித்
    தாமதமாக உண்பார்கள்
    சமயத்தில் பட்டினியும்கிடப்பார்கள்

    இயல்பான தம் பேச்சுக்களை
    ஏகடியம் செய்வார்களென்று
    வெறுமனே தலையை மட்டும் ஆட்டுவார்கள்

    தேர்வைவிடவும்
    தேர்வுக் கட்டணத்துக்காகக் கவலைப்படுவார்கள்

    அவர்கள் படிக்க வந்ததை மறந்து
    நடிக்கத் தொடங்குவார்கள்

    ஆசை இருந்தும்
    அழகிய பெண்களை/ஆண்களை
    ஆழ்ந்து ரசிக்கத் தயங்குவார்கள்

    முடிவாய்ச் சொல்வதெனில்,
    முதல் தலைமுறையில்
    கல்லூரிக்குள் நுழைபவர்கள்
    தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து
    அழுதுகொண்டிருப்பார்கள்!

    சமிபத்தில் விகடனில் படித்த கவிதை….. நம்மில் பலரது அனுபவமும் இதுவாக தான் இருந்திருக்கும்ல??

    http://www.nalvazhikatti.org/

    மாற்றங்களை எதிர்நோக்கிய பயணத்தின் முதல் அடியை எங்களோடு எடுத்து வையுங்கள் ! !

    http://www.nalvazhikatti.org/

    9600579018 / 9578675904

    1 Comment
  • கறை படரதுஆல நல்லது நடந்தா “கறை நல்லது” தானே 🙂

    No Comments
  • நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….
    ***இரு விழிகளில் காதல் அறிக்கை எழுதி நீ படிக்கும் போது.. *****

    கட கடவென இதயம் முன்னில்… வெளினடிபு செய்யுதம்மா…. *****

    பேசாத உதடு,துடிக்காத இதயம். உன்னாலே என் ஜீவன் ஏங்குதே….. ****

    தோடு தொடுவேன விரல்கள் எல்லாம்.. உன்னைப் பார்த்து சொல்லும் போது… ****

    தடா தடவென உயிரின் ஓசை .. தயக்கத்தோடு நடுங்குதம்மா……. ****

    தாயோடு பிறந்தே,உன்னோடு வளந்தேன்.. நீ கொஞ்சும் நாய் குட்டி நானடி….

    2 Comments
  • திரும்பி வந்துவிடு என் singapore கணவா…
    வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

    சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
    முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
    என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது
    காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..
    ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
    சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
    கெஞ்சுபவனைப்போல…
    மல்லிகைப்பூ தந்துவிட்டு
    மன்றாடுகிறாய்!

    பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய்
    நடிக்கும் சின்னப்பையனைபோல…
    மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

    அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது…
    பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
    கை இழுத்து வைத்து குளிக்க வைக்க
    முயலும்போது குளிரடிப்பதாய் கூறி –
    ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
    மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்…
    கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

    கெஞ்சுவதும்… மிஞ்சுவதும்…
    அழுவதும்… அணைப்பதும்…
    கண்டிப்பதும்… கண்ணடிப்பதும்…
    இடைகிள்ளி… நகை சொல்லி…
    அந்நேரம் சொல்வாயடா “அடி கள்ளி ”
    இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு…
    எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்…
    என் singapore கணவா!
    கணவா… – எல்லாமே கனவா….???
    கணவனோடு இரண்டு மாதம்…
    கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா…?
    12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ …
    5 வருடமொருமுறை ஒலிம்பிக்….
    4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்… …
    1 வருடமொருமுறை கணவன் …
    நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
    ٌஇது வரமா ..? சாபமா..?

    கண்களின் அழுகையை…
    கண்ணாடி தடுக்குமா கணவா?
    நான் தாகத்தில் நிற்கிறேன் – நீ கிணறு வெட்டுகிறாய்
    நான் மோகத்தில் நிற்கிறேன் – நீ விசாவை காட்டுகிறாய்
    திரும்பி வந்துவிடு என் singapore கணவா…
    வாழ்வின் அர்த்தம் புரிந்துவாழலாம்

    விட்டுகொடுத்து… தொட்டு பிடித்து…
    தேவை அறிந்து… சேவை புரிந்து…
    உனக்காய் நான் விழித்து… எனக்காக நீ உழைத்து…
    தாமதத்தில் வரும் தவிப்பு… தூங்குவதாய் உன் நடிப்பு…

    வார விடுமுறையில் பிரியாணி…
    காசில்லா நேரத்தில் பட்டினி…
    இப்படி… காமம் மட்டுமன்றி
    எல்லா உணர்ச்சிகளையும் நாம்
    பரிமாறிக் கொள்ளவேண்டும்

    இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உல்லாச பயணம்..
    பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!
    தவணைமுறையில் வாழ்வதற்கு
    வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
    எப்பொழுதாவது வருவதற்கு
    நீ என்ன பாலை மழையா ?
    இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

    விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
    பணத்தை தரும்… பாரத வங்கி ! பாசம் தருமா?
    நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
    ஒட்டியிருக்கிறது என் இதயம்
    அனுமதிக்கப்பட்ட எடையோடு
    அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே
    விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

    பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு…
    நீ தங்கம் தேடிsingapore சென்றாயே?
    பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

    வாழ்க்கை பட்டமரமாய் போன…
    பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம்
    நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
    உன் singapore தேடுதலில்….
    தொலைந்து போனது – என் வாழ்க்கையல்லவா..?
    விழித்துவிடு கணவா! விழித்து விடு –
    அந்த கடவுச்சீட்டு வேண்டாம்…கிழித்துவிடு!

    விசாரித்து விட்டு போகாதே,
    கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

    திரும்பி வந்துவிடு என் singapore கணவா…
    வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

    -எனது விழியில் கண்ணீருடன்….
    (உங்கள் அன்பு மனைவி)

    (“தாய்க்குப்பின் தாரம்” என்பார்கள். அப்படிபட்ட புனிதமான உறவான மனைவியை குடும்ப சூழ்நிலையின் காரணமாக பிரிந்து வாழும் அனைத்து வெளிநாட்டு நண்பர்களுக்கும் இந்த கடிதப் பதிவு ஒரு சமர்ப்பனம்)

    (பெண்ணின் உணர்வுகளை சொல்லியிருக்கும் இந்த கடித வடிவிலான கவிதையை மின்னஞ்சலில் அனுப்பி பகிர்ந்துகொள்ள சொன்ன தோழிக்கு மனமார்ந்த நன்றி)
    ***********************************

    No Comments
  • சொர்க்கம் -எது சொர்க்கம் ?
    வயல்வெளி பார்த்து
    வறட்டி தட்டி
    ஓணாண் பிடித்து
    ஓடையில் குளித்து
    எதிர்வீட்டில் (பெண்களுடன்) விளையாடி
    எப்படியோ படித்த நான்
    ஏறிவந்தேன் நகரத்துக்கு !

    சிறு அறையில் குறுகிப் படுத்து
    சில மாதம் போர்தொடுத்து
    வாங்கிவிட்ட வேலையோடு
    வாழுகிறேன் கணிப்பொறியோடு !

    சிறிதாய்த் தூங்கி
    கனவு தொலைத்து
    காலை உணவு மறந்து
    நெரிசலில் சிக்கி
    கடமை அழைக்க
    காற்றோடு செல்கிறேன்
    காசு பார்க்க !

    மனசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    மாறிப் போகுமோ ?

    மௌசு தொட்டு
    வாழும் வாழ்க்கை
    பழகிப் போகுமோ ?

    வால்பேப்பர் மாற்றியே
    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ ?

    சொந்த பந்த
    உறவுகளெல்லாம்
    ஷிப் பைலாய் (zip file)
    சுருங்கிப் போகுமோ?

    வாழ்க்கை
    தொலைந்து போகுமோ
    மொத்தமும்!
    புரியாது
    புலம்புகிறேன்
    நித்தமும்!

    தாய் மடியில் தலைவைத்து
    நிலவு முகம் நான் ரசித்து
    கதைகள் பேசி
    கவலைகள் மறந்த காலம்
    இனிதான் வருமா ?

    இதயம் நனைத்த
    இந்த வாழ்வு
    இளைய தலைமுறைக்காவது
    இனி கிடைக்குமா ?

    சொந்த மண்ணில்
    சொந்தங்களோடு
    சோறு திண்பவன்
    யாரடா ?
    இருந்தால் அவனே
    சொர்க்கம் கண்டவனடா….

    E-Mail ல் வந்தது……

    No Comments
  • சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு:தமிழாக்கம் பாகம் -1 , வரவேற்புக்கு மறு மொழி-செப்டம்பர்,11 ,1893

    அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே !!!

    இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கின்றேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியரின் பரம்பரை பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகின்றேன். பல்வேறு இனங்களையும், பிரிவுகளையும் சார்ந்த இந்து பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகின்றேன். இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றி குறிப்பிடும்போது வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பலநாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை இவர்களைத்தான் சாரும் என்று கூறினார்கள், அவர்களுக்கும் எனது நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், ஆகியவற்றை எதிப்பு இன்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்கு புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன். எதையும் வெறுக்காமல் மதிக்கவேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கின்றோம்.

    உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகின்றேன். ரோம்மணிரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து, சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்த கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனதாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். மேலும் பெருமை மிக்க சொராஸ்திரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.

    அன் அருமை சகோதர்களே!!! பிள்ளை பருவத்திலிருந்து நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும், இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு உங்கள் முன் குறிப்பிட விரும்புகின்றேன்.

    “எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்

    இறுதியிலே கடலில் சென்று

    சங்கமாம் தன்மையினைப் போன்றுலகோர்

    பின்பற்று தன்மை யாலே

    சங்கமிகு நெறி பலவாய் நேராம்

    வளைவாம் தோன்றினாலும்

    அங்கு அவைதாம் எம்பெரும!! ஈற்றில் உனை

    அடைகின்ற ஆறேயன்றோ!!!

    இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிக, மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்த பேரவை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அறுபுதமான உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். யார் எந்த வழியாக என்னிடம் வரமுயன்றாலும் நான் அவர்களை அடைகின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கின்றார்கள். அவையெல்லாம், இறுதியில் என்னையே அடைகின்றன.

    பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த பூமியினை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும், மீண்டும் மூழ்கடித்து நாகரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்து விட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும். அவற்றிற்கான அழிவு காலம் வந்துவிட்டது. இந்த பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணியோசை மதவேரிகளுக்கும், வாளாலும், பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கும் சாவு மணி ஒசையாகும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

    அடுத்ததாக “நாம் ஏன் ஒத்துப் போவதில்லை” என்ற தலைப்பில் செப்டம்பர் 15 திகதி 1983 -ல் ஆற்றிய உரை தொடரும் …அன்புடன் கே எம் தர்மா…(28 APRIL 2011)

    நன்றி ..ஆங்கில மற்றும் தமிழ் பதிவுகளை பெற உதவிய வலைதலங்களுக்கும், வழிகாட்டிய நண்பர்களுக்கும்.

    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments