Archives
Recent Articles
- Chinnayarpathi & Kilpunachi Tribal settlement Visit & Inventory Work
- 5000 Tree Saplings distributed from Nalvazhikatti & Selvalayam Trust
- Given 2 sewing machine for 2 tribal destitute womens
- Our Nalv Trust A/C number got changed, Please note new A/C details
- Piggy Banks to Tribal Children – பழங்குடி இன குழந்தைகளுக்கு உண்டியல்…
-
அறம் செய விரும்பு
இன்றைய வாழ்க்கை சூழலில் நாம் நம்மை பற்றியோ அல்லது நம் குடும்பத்தை பற்றியோ கூட யோசிக்க நேரம் இல்லை. ஆனால் எல்லோருக்கும் நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும், யாருக்காவது உதவ வேண்டும் என்றும் எண்ணம் இருக்கும். இருப்பினும் அந்த அளவுக்கு பணமோ, நேரமோ நம்மிடம் கிடையாது. சரி, யாராவது நம்மை நாடி வந்து சேவை செய்ய உதவி (பணம்) கேட்டால் உதாரணத்திற்கு நாங்க அன்பு இல்லத்தில் இருந்து வருகிறோம் உங்களால் முடிந்ததை உதவுங்கள் என்று கேட்டால் நம் மனம் சற்று சந்தேகம் கொள்வது இயல்பு தான்.
நாம் கொடுக்கும் பணம் அவர்களை சென்று சேருமோ அல்லது ஏதாவது பித்தலாட்டமோ என யோசிக்க வைக்கும். இதற்க்கு என்ன தான் செய்வது !. கவலை வேண்டாம் . நான் இந்த துறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ளேன். (அதாவது நான் 10 வருடமாக ஒரு என்.ஜி.ஒ நடத்தி வருகிறேன், அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன்…) நான் என் கண்களால் பார்த்து விசாரித்து உறுதி செய்யப்பட்டதை தான் இதில் கூறி இருக்கிறேன்.
எங்கள் ஊரில் (பொள்ளாச்சியில்) பல ஆண்டுகளாக ஒருவர்…
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் பழி.
என்ற குறளுக்கு ஏற்ப அன்னதானத்தை ஒரு உன்னதமான தர்மமாக கருதி வயதான நடக்ககூட முடியாத ஆதரவற்ற உடல்நலம் குன்றி இருப்பவர்களுக்கும் , தனது இருப்பிடம் தேடி உணவு வந்தால் ஒழிய வேறு வழியில்லை என்றிருப்பவர்களுக்கும் , சாலையோர மனநோயாளிகள் , கண்பார்வையற்றோருக்கும் உணவு , உடை, மருத்துவ வசதி ஆகியவை வழங்கி வருகிறார்.
ஆம்!! அவர்தான் “ராமகாரியம் சுகுமார்”.
Ramakaryam Sukumar
பொள்ளாச்சி சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் (45 கி.மி சுற்று அளவுள்ள ) ஊர்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட, பிச்சை ஏந்துகின்ற அதாவது “தனது இருப்பிடம் தேடி உணவு வந்தால் ஒழிய அவர்களால் வாழ முடியும் என்ற நிலைமையில் உள்ள 280 பேருக்கும் இவரே நேரில் சென்று தினமும் உணவு, உடை, மருத்துவம் ஆகிய அற்புத உதவிகளை செய்து வருகிறார்.
நம்மை போன்ற மக்கள் அவர்க்கு நாம் விரும்புகிற நாட்களில், அதாவது பிறந்த நாள், திருமண நாள், தாய் தந்தை நினைவு நாள் அல்லது ஏதாவது ஒரு நாளில் அன்றைய நாளுக்கு செலவாகும் ரூ. 2000 /- (280 பேருக்கு ஒரு வேளை உணவு) பணமாகவோ / காசோலை / வங்கி கணக்கு மூலமாகவோ அனுப்பி உதவுகிறார்கள்.
அவர் நம்மிடம் கேட்பது நம் வீட்டில் உள்ள பழைய துணிகள் , நியூஸ் பேப்பர் (பார்செலுக்கு), மளிகை பொருட்கள் மற்றும் நாம் விருப்பப்பட்ட இனிப்பு, கார வகைகளை கொடுத்து உதவலாம்.அல்லது
நாமே உணவு தயார் செய்தும் கொடுக்கலாம் ! நாம் விரும்பினால் அவருடன் சென்று அவர்களுக்கு உணவை நாமே கொடுக்கலாம்.
இருப்பினும் அவருக்கு தற்போதைய தேவை ஒரு நல்ல பெரிய (mixy) அரைப்பான் சமையலுக்காக மற்றும் 280 பேருக்கு போர்வை….குளிர்காலம் இல்லையா?…
இந்த சேவையோடு மட்டும் நில்லாமல் நான் முதலில் கூறியதை போன்று நான் நடத்தி வரும் “நல்வழிகாட்டி” – www.nalvazhikatti.org என்ற கல்வி சார்ந்த என்.ஜி.ஒ மூலியமாகவும் பல பேருக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார்.
Ramakaraya Sukumar – நல்வழிகாட்டி
சேவையின் உச்சகட்டமாக ஒரு ஆதரவற்ற மாணவியை தன் வீட்டிலேயே வளர்த்து படிக்க வைத்து வருகிறார்.
இவர் செய்யும் அறபணிக்கு நாம் ஏன் அணிலாக உதவி செய்ய கூடாது ?
உங்களால் என்ன உதவி செய்ய முடியுமோ தயவு கூர்ந்து இந்த மாமனிதருக்கு உதவுங்கள். நான் கீழே விவரங்களை இணைத்து உள்ளேன் .
-பொள்ளாச்சி அருண்பாலாஜி-Videos:-
- https://www.youtube.com/watch?v=U-zkKftB87Y
- https://www.youtube.com/watch?v=8EowKvmlixY&t=92s
- https://www.youtube.com/watch?v=gYNTGmTxqjM&t=52s
Photos: –
- https://www.facebook.com/nalvazhikatti/photos/t.100000784653507/890952744293310/?type=3&theater
- https://www.facebook.com/photo.php?fbid=1399109410125201&set=a.151805944855560.23506.100000784653507&type=3&theater
Contact number: 91502 55745 / 96000 85388 / 8296542155
Bank account details: –
Account Number: 1337101013515
Bank name: Canara Bank
Branch: Zamin Vthukuli
ifsc: cnrb0001337
Name: Sukumar
நல்வழிகாட்டி:
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், கல்வி மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கற்பிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது தான் நல்வழிகாட்டி.
உங்களின் பங்களிப்பு:
இந்த கிராமப்புற மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதின் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வர விரும்பினால், ‘நல்வழிகாட்டிக்கு உதவுங்கள்’.To know about Nalvazhikatti – An education NGO
Nalv website: www.nalvazhikatti.org
Nalv email: nalvazhikatti@gmail.com
Nalv blog: http://nalvazhikatti.blogspot.in/
Nalv video: – https://www.youtube.com/watch?v=wFCUe5zRGKM&feature=related
https://www.youtube.com/watch?v=IwN9hE7V6G0&feature=related
Nalv Photos: – https://www.facebook.com/pg/nalvazhikatti/photos/?ref=page_internal
நல்வழிகாட்டி முலம் கிராமப்புற மாணவர்களின்கல்விக்கு உதவ. http://www.nalvazhikatti.org/contributor.htm
நன்றி !
- No Comments