• அரசு Volvo-வில் ஒரு பயணம் !

  காலை 9.30 மணி என் இரு சக்கர வாகனத்தை பழுதுப்பார்க்க கடையில் கொடுக்க சென்று இருந்தேன். அவர்கள் மாலை 5.30 மணிக்கு வர சொன்னார்கள். நானும் சரி அலுவலகம் செல்லலாம் என்று அருகில் இருக்கும் பஸ் நிலையத்தை தேடினேன். சற்று தூரம் நடக்க வேண்டியது ஆயிற்று. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.

  எல்லோருக்கும் தெரியும் கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தம் ரோட்டிலேயே அமைந்து இருக்கும். திருவிழா கூட்டம் போல் மகக்ள் நிற்கிறார்கள். நான் ஓம்.எம்.ஆர் (OMR) என்று அழைக்கப்படும் பழைய மால்லபுரம் சாலையில் இருக்கும் ஆர்.ஆர்.ஈ (RRE) பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் என் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால் கிண்டி திரு.வி.க பேருந்து நிறுத்தத்தில் அதிக மக்கள் கூட்டம் நிலவுகிறது. ”நான் இன்று போய் சேர்ந்தாற்போல் தான் ! ” என்று நினைக்கையில் பஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதே நேரத்தில் அதிக மக்கள் நிரம்பி வழிந்து சென்றும் இருக்கிறார்கள்.

  நான் மனதில் “ஓ இன்று நாம் அலுவலகத்திற்கு மட்டம் தான் போல என்று அப்போது ஆபத்துபாண்டவனாக அரசின் மாநகர போக்குவரத்து கழக குளிர்சாதன பேருந்து என் அருகில் வந்து நின்று தானியிங்கி கதவை ஓட்டுநர் திறக்க குளிர்சாதன காற்று என் முகத்தில் தென்றல் வீசியது நான் என்னை அறியாமலே ஏறிவிட்டேன் அமர்வதற்கு இடம் இல்லை எனினும் நிற்பதற்கு இடம் இருந்தது. எங்கேயோ பாட்டு பாடுவது போல் இருந்தது. அது குளிர்சாதன Volvo பேருந்தில் இருந்து தான் அந்த பாட்டு மிகவும் அருமையான இசை. மெல்லிய சத்தத்தில் ஒளிர்கிறது. அமர்ந்து இருப்பவர்கள் எல்லோரும் ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறார்கள். தியானமா என்று கேட்கிறீர்களா, ஆம் ஆழ்ந்த உறக்கத்தை தான் நான் அவ்வாறு கூறினேன். என்ன பேருந்தில் உறங்குவதால் குறட்டை சத்தம் இல்லை. குளிர் 18oC வெப்பநிலை, இனிமையான இசை வெளியே வரும் இரைச்சல் கேட்காதவாரு கண்ணாடி அமைக்கப்பட்டு உள்ளது. நடத்துனர் என் அருகே வந்து பயணச்சீட்டு கேட்டார். எங்கே போகணும்? நான் அதற்கு (RRE) என்று கூறினேன். நான் 50 ரூபாய் கொடுத்தேன். மனதில் இன்னும் கேட்பார் போல என்று நினைக்கும் கனத்தில் ரூபாய் 25 யை திருப்பி தந்தார். பொதுவில் ஆர்.ஆர்.ஈ நிறுத்தத்தில் விரைவு பேருந்தோ, மஞ்சள் பலகை, பச்சைப் பலகை, LSS. (எல்.எஸ்.எஸ்) பேருந்து நிற்காது. இவை அனைத்தும் மூட்டைக்காரன் சாவடி, P.T.C மேட்டுக்குப்பம் ஆகிய நிறுத்த்தில் தான் நிற்கும். நான் இதில் ஏதேனும் ஒரு நிறுத்தத்தில் இரங்கி பின்பு அலுவலகத்தில் நடப்பேன்.

  சற்று தூரம் சென்ற உடன் எனக்கு அமர்வதற்கு இருக்கை கிடைத்தது. ஒரு வழியாக நிம்மதியாக அமர்ந்தேன். கண்ணாடி வழியாக பார்த்தால் சத்தம் இல்லாத படத்தை காண்பது போல் இருந்தது. எனக்கு பேருந்து நகர்வதோ, குழியில் இறங்கி ஏறுவதோ தெரியவே இல்லை. நான் விமானத்தில் சென்று உள்ளேன். அதில் கூட ஏறும் போதும், இறங்கும் போதும் சில அதிர்வுகளை உணர முடியும். இந்த அரசு Volvo பேருந்து குண்டும் குழியுமாக உள்ள தரமணி சாலையில் செல்லும் போது கூட எனக்கு அதிர்வுகள் தெரியவே இல்லை. எனக்கும் தியானம் செய்ய வேண்டும் போல இருக்கையில் என்னை அறியாமலே என் கண்கள் மூடின. நானும் சாமியாட வேண்டியது ஆயிற்று அன்று தான் நான் சொகுசு என்றால் என்ன என்பதை உணர்ந்தேன்.

  வழக்கத்திற்கு மாறாக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் ஐடி நிறுவனங்களின் முகப்பில் நின்றது. நான் சென்ற பேருந்து கோயம்பேட்டில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் பேருந்து அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் ஐடி துறை சார்ந்தவர்கள். எல்லோர் உடைய கழுத்திலும் மாட்டுக்கு மணிகட்டுவது போல அடையாள அட்டையை அணிந்து இருந்தார்கள்.

  அப்போது தான் புரிந்தது இது தானியை (ஆட்டோவை) போன்றது என்று. உங்களுக்கு தெரியும் OMR-ல் தான் அனைத்து ஐகூ நிறுவனங்களும் இருக்கின்றன. நான் கவனித்த வரையில் இதில் பயணம் செய்பவர்கள் எல்லோரும் ஐடியில் வேலை செய்பவர்கள் ஏன்? நானே ஐடி துறையில் தானே வேலை செய்கிறேன்.

  நான் ரோட்டை கூர்ந்து கவனித்தேன். OMR-ல் நிறை அரசு Volvo குளிர்சாதன பேருந்து தான் அதிகம் காணப்பட்டது. நான் வழக்கமாக இருசக்கர வாகனத்தில் வருவதால் எனக்கு இது தெரியவில்லை. இந்த மாதிரி சொகுசு பயணம் யாருக்கு கிடைக்கும். அதுவும் இந்த வெயிலில் இனிமையான இசை, நடத்துனரே நேரில் வந்து பயணச்சீட்டு கொடுப்பார் (மத்த அரசு மாநகர பேருந்தில் அது கிடையாது நாம்தான் நடத்துனர் இருக்கைக்கு சென்று வாங்க வேண்டும்) நினைத்து இடத்தில் இறங்கி கொள்ளலாம். மக்கள் நெரிசல் இல்லை. மணிக்கு சென்று விடாலம். சொகுசு பயணம். விலையே 25 ரூபாய் மட்டும். நான் இதை எல்லாம் நினைக்கையிலேயே என் அலுவலகம் அருகில் வர நான் நடத்துனர் இடம் செல்ல அவர் என் அலுவலக முகப்பிலேயே என்னை இறக்கி விட்டார். அட* தினமும் நாம் இதிலேயே வரலாம் போல் இருக்கே என்று தோன்றியது.

  ஆனால் இந்த பயணம் நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழே வாழ் மக்களுக்கு அது தினமும் பயணம் செய்ய சாத்தியம் இல்லாத ஒன்று என்ன. ஏதோ ஒரு நாள் ஆசைக்காக சென்று பார்க்கலாம் வெறும் 25 ரூ தான். நானும் அதை தான் செய்தேன். தினமும் 25 ரூ கொடுத்து வர இயலாத சூழல் மனம் சொகுசுக்கு ஆசைபடுகிறது. ஆனால் பேருந்து நிறுத்தத்தில் 5 ரூ கூடுதலே அதே தொலைவிற்கு நாம் கொண்டு செல்ல பேருந்து இருக்கும். என்றுமே சொகுசாய் வாழ நாம் ஏழை எளிய மக்களால் முடியாது என்றாவது ஒரு நாள் முடியும். இப்படி நானும் ஒரு நாள் வாழ்ந்து பார்த்தேன். அதை பதிவு செய்யவும் ஆசைப்பட்டேன் இதோ உங்கள் முன்…

  நீங்களும் ஒரு நாள் அரசு Volvo-வில் சென்று தான் பாருங்களேன் என்னை போல் அனுவித்து கூறுங்களேன்.

  நன்றி,
  பொள்ளாச்சி அருண்பாலாஜி ,

  Related Posts Plugin for WordPress, Blogger...
  No Comments