• அழியும் பேருயிர் : யானைகள்

    அழியும் பேருயிர் : யானைகள்

     

    அழியும் பேருயிர் : யானைகள்

    ” என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இன்று யானைகள் அழிந்து வருவதற்கு நம் மக்களின் மூட நம்பிக்கையும், இயற்கையைப் பற்றிய புரிதல் இல்லாததுமே எனச் சாடுகிறார் ஆசிரியர். இன்றைய சூழ்நிலையில் கூட, ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யானைகளை ஒரு கொடூர விலங்காக சித்தரிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்.

    “மனிதர் அன்போடு வளர்ப்பதாகக் கூறப்படும் யானைகள் வண்டி இழுத்தன, கடும் வெயிலில் ஏர் உழுதன, மூட்டை சுமந்தன, கல்லையும், கட்டைகளையும் இழுக்கின்றன. வழிபாட்டுத்தலங்களில் வெந்ததைத் தின்று விதி வந்து சாகும்வரை வதைபட்டு பெருமை காட்டுகின்றன. சர்க்கஸ் செய்கின்றன, தன் சகோதரனுடன் சண்டையிட வைக்கப்பட்டன. மன்னர்கள் என்ற மமதை கொண்ட குண்டர்களைத் தூக்கிச் சுமந்தன, பிச்சை எடுக்கின்றன, அடிமையாக சந்தைகளில் விற்பனைக்குள்ளாகின்றன, கெட்டவார்த்தைகளால் திட்டு வாங்குகின்றன, அடி உதைகளால் ரத்தம் சிந்தி அழுகின்றன.

    வேண்டிய நீரும், உணவும், நிழலும் கிடைக்காமல் துடிக்கின்றன, அழுக்கடைந்த, கூச்சல் மிகுந்த வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றன, தனிமையில் தவிக்கின்றன, மொட்டை வெயில், புகைதூசிகளால் மன உளைச்சலடைகின்றன, இயற்கையான சத்துள்ள ஆகாரமின்றி நோயால் கஷ்டப்படுகின்றன, தன் வாழ்விடத்தை தானே அழிக்கவும், தன் இனத்தை தானே பிடிக்கவும் உள்ளாக்கப்படுகின்றன. “இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’ என கொல்லப்பட்டு தனது தந்தத்திலேயே செய்த தன் உருவத்தைச் சுமக்கும் கொடுமைக்கு ஆளாகின்றன. ஆனால் இவ்வளவையும் பரிதாபத்திற்குரிய யானைகள் மகிழ்ச்சியோடு செய்வதாகவே நினைக்கிறது `ஆறறிவு கொண்ட’ மாந்தரினம்” என்ற இவருடைய எழுத்துக்கள், யானைகள் மீது ஆசிரியர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், நம் சமூகத்தின் மீதான கோபத்தையும் பிரதிபலிக்கிறது.

    யானைகள் அக ஒலி மூலம் பேசிக் கொள்கின்றன என்ற செய்திகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஐந்து கி.மீ தொலைவிலுள்ள யானைகள் அக ஒலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன எனும் செய்தி வியப்பை அளிக்கிறது. இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் அந்த ஒலி மனிதர்களால் உணர முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இருப்பதுதான்.

    மேலும் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் அவற்றின் வாழிடப் பரவலையும் எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆசிய யானைகளின் தும்பிக்கை ஒரு விரல் நுனியையும் ஆப்ரிக்க யானைகளின் தும்பிக்கை இரண்டு விரல் நுனியையும் கொண்டிருப்பது போன்ற செய்திகள், யானைகளை எளிதில் வேறுபடுத்தி புரிந்து கொள்ள உதவுகிறது.

    பள்ளிபருவத்திலேயே எல்லோரும் இந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென விரும்புகிறேன்…

    To Buy: http://www.panuval.com/index.php?route=product%2Fproduct&product_id=992

     

    No Comments

  • மதம் பிடிக்காத  யானைகள் ! ! !

    இந்த கதை நான் திரு
    ச்செந்தூர் சென்ற பொழுது அங்கு  இருக்கும் இரண்டு யானைகளை நினைத்து எழுதப்பட்டது .

     


     என்ன அஞ்சல வேளைக்கு போகலையா?
    இல்லை பா இன்னும் என் பாகன் வரல !
    ஓ! சரி ! உன் டுயுட்டி  முடிஞ்சிருச்சு  போல .

    ஆமா !
    நம்ம  ரெண்டு பேரையும் தனி தனியாகத்தான் அடைச்சு வெச்சு இருக்காங்க   ..

    ஷிபிட் மாரும்பொழுது  நாம் பேசக்க முடியுது ..
    ராத்திரியில்தான் நம்ம இருவர் முகத்தைக் கூட பார்க்கமுடியாது என்னா நடுவில ஒரு பெரிய சுவர் …

    பேசினாதான் கேட்கும் அதுவும் சத்தமா…. இதுல பக்தர்கள் கூட்டம் வேற  பார்வையாளர்களாக ..
    நம்ம தனிமையே போச்சு இந்த கோவில்ல இருக்கும் திரு
    ச்செந்தூர் முருகனுக்குத்தான் வெளிச்சம் !



    சரி என்னை விடு உன் கதை என்ன?

    பாவம் நீ கேரளாவுல யானை பள்ளிக்குடத்தில நல்ல சந்தோசமா இருந்திருப்ப..

    அஞ்சல நம்ம விதி அப்படியிருந்தா நாம என்ன செய்வது ?

    அட நீ ஒன்னு , எனக்கு இந்த விதி ,சதி ,கதியெல்லாம் தெரியாது …எந்த நம்பிக்கையும் இல்லை

    எல்லாம் இங்க வந்த பின்னதான் தெரியும் அதுவும் நம்மிடம் ஆசி பெற்றால் நல்லது நடக்கும்னு ,நம்ம சானத்தை மிதித்தால் படிப்பு வரும்.


    இப்படி நிறைய “கப்சாக்களை ” நினைச்சு  …சில சமயம் எனக்கு சிரிப்பு  தான் வருது …

    ஆமா நாமதான் கடவுளோட வாகனமாமே?

    அட அஞ்சல நாம தான் பிள்ளையாரோட வாகனம் !



    ஓ அப்படியா ! சரி அப்புறம் !!!

    தினமும் காலையில நமக்கு இங்க கடவுளுக்கு கிடைக்கிற சகல பூஜை எல்லாம் நடக்குது …

    ஏன் லட்சுமி நாம தான் கடவுளோட வாகனம் ஆச்சே ! கடவுளுக்கு சமமாக இருக்கிற நம்மள ஏன் லட்சுமி சங்கலியில் வச்சு இருக்கிங்க !??.. அதுவும் அந்த குச்சியால் குத்து விடுறாங்க பாரு…பிறகு நம்ம மேல அந்த பாகன் ஏறி உக்காருறான்

    அஞ்சல ! அது எல்லாம் நாம் சொன்னபடி கேக்குறதுக்கு இல்ல ..


    அப்ப மனுஷன் சொல்வதை தான் கடவுள் கேட்க்கனுமா ?

    இல்லை இல்லை நமக்கு மதம் கிதம் பிடிச்சா  இந்த மனுசங்க்களுக்குதானே ஆபத்து ….அதனால் தான் அஞ்சல …

    அப்படினா எதுக்கு நம்ம காட்டுல இருந்து கொண்டு வந்து நமக்கு மதம் பிடிக்க வைக்கணும் ???

    என்ன அஞ்சல சொல்ற ஒன்னுமே புரியவில்லை ???

    லட்சுமி,  காட்டுல நம்ம குடும்பத்தோட நல்லா சந்தோசமா வாழ்ந்து வந்து  இருந்தோம் … இந்த மனுசங்கதான் நம்மள இங்க கூட்டிகிட்டு வந்து நமக்கு மதம்  பிடிச்சுரும்னு நம்மள சங்கலியில கட்டி வெச்சு , அடிச்சு அவர்கள் மதத்தை நமக்கு பிடிக்க வைக்கிறாங்க பா

    அஞ்சல ?????

    புரிந்தவர்கள் சிந்தியுங்கள் ! புரியாதவர்கள் புரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் …

    மதம் இன்னும் 

    பிடிக்காத ஒன்று
    கோவிலில் “யானை”களுக்கு…

    மதம் இன்னமும் 
    பிடித்தருக்கிறது
    மனிதனுக்கு …
    -பொள்ளாச்சி அருன்பாலாஜி –



    Related Posts Plugin for WordPress, Blogger...
    No Comments