• Please afford your valuable 5 minutes, just to read this article..

    Dear Folkz.. Please afford your valuable 5 minutes, just to read this article, published in Tamil daily newspaper “DHINAMANI” written for ACTOR RAJINIKANTH..

    டிசம்பர் 12 என்ன நாள் என்று கேட்டபோது 80 சதவிகிதத்திற்கு அதிகமானோர் உடனடியாக “அன்று ரஜினி பிறந்த நாள்” என்று சரியாகக் கூறினர்.. அதே போல “டிசம்பர் 11 என்ன நாள்???” என்று கேட்டபோது உண்மையில் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே “அன்று மகாகவி பாரதியார் …பிறந்தநாள்” என்றனர். அவர்களில் கூட சிலர் “அன்று பாரதியார் பிறந்த நாளோ, இறந்த நாளோ” என்று சந்தேகத்துடன்தான் கூறினர்.

    வேற்று மாநிலத்தில் பிறந்த ரஜினி பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடத் தெரிந்த நம்மில் பலருக்கு எட்டையபுரத்தின் எழுச்சி நாயகன் பாரதியின் பிறந்த நாள் கூட சரியாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் என்ன? நடிகர், நடிகையர் பிறந்த நாளை போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடும் ஊடகங்கள், பாரதியின் பிறந்த நாளைப் பற்றி அதிகமாக அலடிக்கொல்லாதுதான்.

    அது சரி… பாரதி என்ன செய்துவிட்டார்.???

    • தானும் தன் குடும்பமும் பசித்திருந்த போதும் தமக்கான உணவை காக்கை, குருவி எங்கள் ஜாதி என அவற்றுக்கு வாரி வழங்கிய ‘கஞ்சன்’ தானே??

    • தன்னுடைய எழுச்சிமிகு எழுதுகளாலும் புதிய சிந்தனை கொண்ட புரட்சி பாடல்களாலும் நாட்டில் சுதந்திர வேட்கையை விதைத்த ‘தீவிரவாதி’ தானே??

    • சாதிய வெறியையும், உயர் சாதி-கீழ் சாதி வேறுபாடுகளையும் களைந்து சமுதாயத்தில் சம தர்மத்தை நிலை நிறுத்த முயற்சித்த பிரிவினைவாதிதானே??

    • நாடு சுதந்திரம் பெறாத போதே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என சுதந்திரப் பள்ளு பாடிய ‘பிற்போக்குவாதி’ தானே??

    • இன்றும் சர்ச்சைக்குள்ளாகி வரும் சேது சமுத்திரத் திட்டம், நதி நீர் இணைப்பு குறித்து அன்றே ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’, வந்கத்திலோடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளிற் பயிர்செய்குவோம் என்று விழித்துக்கொண்டே கனவு கண்ட ‘சொம்பிலிதானே’??

    நினைவில் வைதுக்கொண்டாட இன்னும் என்னவெல்லாம் காரியம் செய்து தொலைத்திருகிறான் பாரதி??

    Related Posts Plugin for WordPress, Blogger...
    Published on December 20, 2011 · Filed under: Truth, Useful; Tagged as: , , ,
    No Comments

Leave a Reply