• About NGOs

    அறம்  செய விரும்பு

    அனைவர்க்கும் வணக்கம்,

    என் மனதில் ரொம்ப நாளாக சொல்ல ேண்டும் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த வேதனையை சொல்ல விரும்புகிறேன் .

    சமுக அக்கறை கொண்ட அமைப்புகளில் ஆரம்ப காலங்களில் எல்லாரும் சமுகத்தின் முனேற்றத்திற்கும் அக்கறை கொண்டு உழைத்தார்கள் .அதில் இயங்கும் மற்றும் இயக்கும் அமைப்பாளர்கள் ,உறுப்பினர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் .இப்படி எல்லோரும் ஒரே ண்ணம் கொண்டு கொள்கைகளுடன் உழைத்தார்கள் .

    மற்ற அமைப்புகளும்  ஒன்றுகுஒன்று ஒத்துழைப்புடன் ெயல்பட்டது தங்கள் பொருட்களையும்,வளங்களையும்(resources) அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

    ஏன் இன்னும்  ஒருவர் மற்றவரின் அறக்கட்டளையிலும் ,சமூகநல அமைப்புகளிலும் ,அரசு சாரா சமூக நிறுவனங்களிலும் எந்த பலன் இன்றி சேவை செய்தனர்.

    சேவை என்ற வார்த்தையே தன் தேச டமை என்று நினைத்து ஒற்றுமையுடன் சேவை செய்தனர் .

    ஆரம்ப காலங்களில் எல்லோரின் எண்ணமும் சமுகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற வேறுபாடின்றி   ஒருவருக்கு ஒருவர் உக்குவித்து உழைத்து வந்தார்கள் . 

    கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கூட்டு ஆலோசனைகளும் நடைப்பெற்றன.மைப்புகளுக்கிடையே கருத்து பரிமாற்றம்  நடைபெறும் அது கருத்து வேறுபாடுடைய சமுக அமைப்பாக இருந்தாலும் சரி .

    அந்நாள்களில்  அனைவரின் மனதில் ஒரே எண்ணம்தான் யார் செய்தால்  என்னமக்களும் சமூகத்திற்கும் நன்மை ஏற்பட்டால்  போதும் என்ற எண்ணம் .

    இதற்க்கு அவர்கள் முன் நிற்கவே,வழிவிட்டேவோ  சற்றும் தயங்கியது கிடையாது .

    சாதி ,மத என்ற பேச்சிற்கே இடம் இல்லை ,தன்னார்வகளில் பலர் பல்வேறு விதமானவர்கள் ,எளிதாக சொல்லவேண்டும் என்றால் வேற்றுமையில் ஒற்றுமையுடன் ” இருந்தனர்

    About NGO's

    About NGO’s

    ஆனால் இன்று ,

                    அதே அமைப்புகளில் புதிதாக சேர்ந்த நண்பர்கள் சிலரும் மற்றும் பழைய அதித ஆர்வலர்களும் (அதிக ிரசங்கி… பாஸ்!செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது .

    அவர்கள் நாளாக நாளாக அமைப்பின் விதிகளையே மாற்றிவிட்டனர் .

    அதில் சில 

    மற்ற சமுக அமைப்பை சார்ந்தவர்கள் நம்மிடம் வரகூடாது  

    மற்ற சமூக அமைப்பு சார்ந்தவர்கள் தாங்கள் அமைப்பின் வளங்களையும் ,பொருட்களையும் பகிர கூடாது .

    *அவர்கள் நம் அமைப்பைப் பற்றி  பேசவோ ,தளங்களில் பகிறவோ கூடாது 

    *அவர்களிடம் இருந்து நன்கொடை வாங்க கூடாது .

    அப்படியும் மீறி சில நல்ல மனிதர்கள் தங்கள் அமைப்புக்கு சேவை செய்ய வந்த அவர்களை கதற கதற அவமான படுத்தவேண்டும் (இதற்கு தனியே ஒரு குழு வைத்து உள்ளனர் நம் பங்காளிகள் )

    அவர்கள் ஏதேனும் நம் அமைப்பிற்கு  நன்மை செய்தால் அவர்களின் மீது கடுமையான பழி போடவேண்டும் .

    உதாரணத்திற்கு நம் அமைப்பில் இருந்து தன்னார்வளர்களை  கூட்டி செல்ல மூளை சலவை செய்ய வந்துள்ளனர் .

    இவ்வாராக நிள்கிறது அந்த பட்டியல், இது கூட பரவால்லாமல் இருக்கிறது .

    தற்போது இருக்கும் அமைப்புகளில் HR என்ற பெயரில் அவர்கள் செய்யும் அல்பர தங்கமுடியல …”

    ஒரே அமைப்பில் ஓர் பெயர் கொண்ட இரு பிரிவினர் நாங்கள் இந்த ***** களத்தில்   வேலை செய்வோர் ,மற்றும் ஒரு குழு நாங்கள் அந் ***** களத்தில் வேலை செய்வோர் ( இரு களங்களிலும் ஒரே சமூகபிரச்சனை உடையது; ஆனால் மாவட்டங்கள் தான் வேறு தலைமை ஒன்று, ொள்கை கூட ஒன்றுதான் .

    அதனால் என்ன பாஸ் ! அவர்கள் தான் எங்கள் குழு இல்லையே என்கின்றனர்.

    நாகபதனியா?  அல்லது  நாகப்பதனியா? என்று சண்டை நடைபெறுகிறது.  

     சில முக்கியமான பிரச்சனையை சொன்னால் அந்த அமைப்பிற்கும், எங்கள்  அமைப்புகளுக்கு, சமுக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய அவமானம் நேர கூடும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை .

    எல்லா அமைப்புகளிலும் கருத்து ேறுபாடு வரும் அதனால் சிறு சிறு பிரச்சனைகளும் எழும் என்பது நிதர்சனம்தான் இங்கு அதை தாண்டி ஒரு முக்கிய விரிசல்  வந்து விட்டது.

    எனக்கு என்ன பயம் என்றால் நாங்கள் அனைவரும் சேவை செய்வது சமூகத்தின் நல்ல மாற்றத்திற்காக, னால் அரசியல் கட்சி போல ,சாதி  அமைப்புகள் போல எங்கள் அமைப்பினர் நடப்பது சமுகத்திற்கு மிகவும் ஆபத்தானது .இது நீண்டால் எங்கள் பங்காளிகள் இங்கு எதற்கு வந்தோம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தையே மறந்துவிட கூடும் .

    இதை தவிர்க்க :

    தலைமை குறுகிய மனப்பான்மை இல்லாத தன்னார்வளர்களை   தேர்வு செய்ய வேண்டும்.

    தற்போது இருப்பவர்களிடம் பேசி புரிய வைக்கவேண்டும் 

    அடிக்கடி நாம் எதற்கு இங்கு ந்தோம் என்ன செய்கிறோம் என்பதை  நினைவுப்படுத்தவேண்டும் .

    மற்ற சக மனிதர்களிடமும் அமைப்புகளிடமும் மதிப்பு கொடுக்கவேண்டும் 

    *ஒருவரை ஒருவர் ஊக்குவித்து கருத்துக்களை பகிரவேண்டும் 

    ஆரோக்கியமான விவாதங்களை அமைப்பினர்களிடம் ஏற்படுத்தவேண்டும். 

    *அமைப்புகள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் உறுப்பினர்களுக்கு யிற்சி நடத்தவும் .

     

    இந்த பதிவை எழுத தங்கியது உண்மைதான்… 

    இன்னும் என்னால்  வெளிப்படையாக எழுத முடியவில்லை அதற்கு காரணம் என் சகோதர்கள் பற்றி நான் எழுதுவதானால் தான் 

    அப்படி நான் சிறிது வெளிப்படையா எழுதினாலும் அது எங்களின் மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை இழந்துவிடுவோம் என்ற எண்ணம் தான் .

    ஆனால் இதை படிக்கும்பொழுது என் பங்காளிகளுக்கு முக்கியமாக ரோசம் உள்ளவர்களுக்கு உரைக்கும் . செருப்பால் அடி வாங்கியது போல் கூட தோன்றும்யார் கண்டது ??

    பி .கு இது முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள கல்வி சார்ந்த மற்றும் சாராத அமைப்பு பற்றி.

    இன்றும் சமூக முன்னேற்றதிற்காக போராடும் என் நல்ல உள்ளங்கள் படித்து ,தமிழே படிக்க தெரியாத நம் கல்வி அமைப்பில் உள்ள  பங்காளிகளுக்கு செல்லவும் .

    இப்படிக்கு,

    மிக்க அன்புடன்,

    பொள்ளாச்சி அருண்பாலாஜி 

     
     
    Related Posts Plugin for WordPress, Blogger...
    Published on March 4, 2013 · Filed under: Article; Tagged as: , , , , ,
    No Comments

Leave a Reply