• Tribal women allege rape by cops in Tamil Nadu

    தொடரும் பாலியல் வன்முறை: மாறுமா பழைய வழிமுறை?
    காவல்துறையை நவீனப்படுத்த 47 கோடியே 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறதாம். கண் டிப்பாக நவீனப்படுத்தியாக வேண்டிய ஒன்று இருக்கிறது. அதுதான் காவல்துறையின் அணுகு முறை. குறிப்பாக எளிய மக்களைக் கிள்ளுக் கீரைகளாக நடத்துகிற அதிகார வக்கிரத்திலி ருந்து காவல்துறையைத் திருத்தியே ஆக வேண்டும்.

    இதன் அவசர அவசியத்தை உணர்த்துவதா கவே விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு பழங் குடிப் பெண்கள் காவலர்களால் வன்புணர்ச் சிக்கு உட்படுத்தப்பட்ட செய்தி வந்திருக்கிறது. திருக்கோவிலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மண்டபம் கிராமத்தில், இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த காசி என்பவர் ஒரு புகார் தொடர்பாக காவல் நிலையம் கொண்டுசெல்லப் பட்டிருக்கிறார். அவரை விடுவிக்கக் கேட்டுக் கொள்வதற்காக வந்த அவரது தாய் வள்ளியிடம், நெருங்கிய உறவினர்களை அழைத்துவந்தால் விடுவிப்பதாகக் காவலர்கள் கூறியிருக்கின்ற னர். பின்னர் காவல் வேனில் கொண்டுவரப்பட்ட காசியின் மனைவி லட்சுமி, தம்பி மனைவி கார்த் திகா, தங்கை ராதிகா, மற்றொரு உறவுக்காரப் பெண் மாதேஸ்வரி ஆகியோரை காவலர்கள் இம்மாதம் 22ம்தேதியன்று இரவு, அருகில் உள்ள தைலமரக் காட்டில் வைத்து, தாய் வள்ளியின் கண் முன்பாகவே மாறி மாறி பாலியல் வன்மத் திற்கு உட்படுத்தியுள்ளனர். இது குறித்து புகார் செய்தால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளனர்.

    ஆயினும் கிராம மக்கள் ஊக்குவிக்க, இக் கொடுமை பற்றி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் பதிவு செய்திருக்கின்றனர். இந் தப் பிரச்சனையை இப்போது தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கையில் எடுத்துள்ளது.

    erular
    சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி, மொண்டியம் பாக்கம் வசந்தா உள்ளிட்ட முந்தைய வழக்கு களில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று முதலில் அறிவிப்பது, குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்வது என்பதே அன்றைய அதி முக அரசின் போக்காக, நடைமுறையாக இருந் தது. ஆனால், நீதிமன்றங்கள் அழுத்தந்திருத்த மாக வழங்கிய தீர்ப்புகள் உண்மையை நிலை நாட்டின. அதற்குப் பிறகும் இப்படிப்பட்ட கொடு மைகள் நடக்கின்றன என்றால், அப்பாவிகளின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்தி, இப்படித் துன்புறுத்துகிற அராஜகம் தங்குதடை யின்றித் தொடர்கிறது என்பதுதானே இதன் பொருள்?

    தனது ஆட்சி வருகிறபோதெல்லாம் இத்த கைய காவல்துறை அத்துமீறல்கள் அதிகரிப்பது ஏன் என்பதை முதலமைச்சர் இப்போதாவது தன் மனதைச் செலுத்தி ஆராயட்டும். வழக்கை இழுத்தடித்து குற்றவாளிகளைக் காப்பாற்ற முயலும் பழைய வழிமுறைகளைக் கைவிடட் டும். விரைவான விசாரணைக்கு உத்தரவிடுவ தோடு, அந்த விசாரணை முறையாக நடைபெறத் தோதாக, வன்கொடுமைக் குற்றத்தில் ஈடுபட்ட வர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பழங்குடியினர் வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக் கும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வதும் அவசியம்.

    இப்படிப்பட்ட அத்துமீறல்கள் இனி காவல் துறையில் நடக்காது என்பதை, அந்தத் துறைக் கும் பொறுப்பு வகிப்பவரான முதலமைச்சர் உறுதிப்படுத்தியாக வேண்டும். இந்த நான்கு பழங்குடிப் பெண்களுக்காக மாநில அளவில் போராட்டக்குரல் வலிமையாக எழுந்து, அவ் வாறு உறுதிப்படுத்தச் செய்யட்டும்.

     

    Tribal women allege rape by cops in Tamil Nadu

    Villapuram, Tamil Nadu:    Four tribal women have alleged that they were raped by the police in the Villupuram district of Tamil Nadu.

    In their complaint, the women have said that cops from the Tirukovilur police station picked them up for interrogation on November 22 and sexually assaulted them that night

    Two of the complainants are married, one is pregnant.The women allege that police took them in for a theft enquiry and raped them.

    Police officials have confirmed that the SP and the DIG of the area are rushing to the village where the  incident took place. They have ordered  a probe into the alleged rape. They say an FIR will be filed soon and they would investigate the case with an open mind. They would take stringent action against their men if the accusations were found to be true.

    Police sources have also said that the husband of one of the women was a property offender and that the police had gone to the village to nab him and others. They suggested that the women’s claims of rape could be a strategy to escape legal action.

    Related Posts Plugin for WordPress, Blogger...
    1 Comment

One Response to “Tribal women allege rape by cops in Tamil Nadu”

  1. Got the complaint letter of them .

    Pls check the below link

    http://www.thadagam.com/index.php/politics/politicalcategories/politicalhappenings/738-complaintletterofirularwomenwhosexuallyassaultedbypolice

Leave a Reply