Archives
- August 2021
- May 2021
- January 2021
- December 2020
- November 2020
- October 2020
- July 2020
- July 2017
- October 2014
- June 2014
- March 2014
- January 2014
- October 2013
- August 2013
- March 2013
- February 2013
- October 2012
- September 2012
- August 2012
- July 2012
- June 2012
- February 2012
- January 2012
- December 2011
- November 2011
- September 2011
Recent Articles
- 2nd wave COVID-19 Lockdown -Nalv distributed 40 Groceries bags to ayyampathi tribal people
- Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 16-June-2021
- 15-Jun-2021- Sankarankudi & Paramankadavu Settlement – Groceries & vegetables for 67 families – worth of Rs.70,000/-
- 13-Jun-2021- Nedukundram Settlement – Groceries & vegetables for 47 families – worth of Rs.43,000/-
- 8-Jun-2021- Kattupatti & Mavadappu Settlement – Groceries & vegetables for 110 families – worth of Rs.63,000/-
-
Second wave COVID-19 Lockdown Services-Nalvazhikatti Distributed 530+ food packets for destitute old age people on 1-Jun-2021
-
On 22-jan-2021, Nalvazhikatti Trust & STF both gave Groceries and vegetables to Gopalpathi Tribal village
-
நண்பர்களே ஒரு எழுத்து, ஒரு மொழி,
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
உயிரெழுத்து: ஆ , ஈ , ஊ , ஏ, ஐ ,ஓ எழுத்து பொருள்
ஆ – பசு
…
ஈ – கொடு ,பறக்கும் பூச்சிஊ – இறைச்சி
ஏ – அம்பு
ஐ – அழகு, தலைவன் , வியப்பு
ஓ – வினா , மதகு
ம வரிசை: மா . மீ , மு , மே, மை , மோமா – பெரிய , விலங்கு
மீ – மேலே , உயரம்
மு – மூப்பு
மே – மேன்மை , மேல் , மாதம்
மை – கண்மை , இருள்
மோ – முகர்தல் , மோதல்
த வரிசை: தா, தீ, து, தூ , தே, தை
தா – கொடு , கேட்பது
தீ – நெருப்பு
து – கெடு, உண், பிரிவு
தூ – வெண்மை , தூய்மை
தே – தெய்வம்
தை – மாதம்
ப வரிசை: பா, பூ, பே , பை , போ
பா- பாட்டு, நிழல், அழகு
பூ – மலர்
பே – நுரை , அழகு
பை – பசுமை , உறை
போ – செல்
ந வரிசை: நா , நீ, நே ,நொ, நை , நோ
நா – நாக்கு
நீ – நின்னை
நே – அன்பு , நேயம்
நை – வருந்து, நைதல்
நொ – நொண்டி , துன்பம்
நோ – நோவு வருத்தம்
க வரிசை: கா , கூ , கை , கோ
கா – சோலை , காத்தல்
கூ – பூமி , கூவுதல்
கை – கரம், உறுப்பு
கோ – அரசன் ,தலைவன் , இறைவன்
வ வரிசை: வா , வீ , வை , வௌ
வா – அழைத்தல்
வீ – பூ , அழகு ,
வை – கூர்மை, வைதல், வைத்தல்
வௌ – கௌவுதல், கொள்ளை அடித்தல்
ச வரிசை: சா, சீ, சே , சோ
சா- மரணம் , பேய் , சாதல்
சீ – இகழ்ச்சி , திருமகள்
சே – எருது
சோ – மதில்
மற்ற எழுத்து: யா
யா – மரம்
-
ராஜா ! மஹாராஜா ! !
ராஜா ! மஹாராஜா ! !
ஒரு நாள் மஹாராஜா அரசவையில் வீற்று இருக்கும் போது
ஒருபெரிய சந்தேகம் வந்தது. அதை அங்கு இருக்கும் எல்லோரிடமும்கேட்டு
கொண்டு இருந்தார். அந்த சந்தேகம் என்னவென்றால்
இந்த உலகத்தை விட பெரியது எது?
இந்த உயிரை விட பெரியது எது?
இந்த கடலை விட பெரியது எது? என்று தான் அவரது சந்தேகம்.
அவையில் இருந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் எழுந்து இதுநம்
தலைமை அமைச்சருக்கு தான் தெரியும் என்று கூற அவரோ “சற்று
அவகாசம் தாருங்கள் என்று கூறினார். நாட்கள் கடந்தன.எல்லோரும்
அதை மறக்க மன்னனின் சேவகன் ஒருவன் “ அரசேநீங்க அன்றைக்கு கேட்ட
கேள்விக்கு இந்த தலைமை அமைச்சர்இன்றைய வரை பதில் சொல்லாமல்
ஏமாற்றி வருகிறார் என்று.
“இதை கேட்ட அரசர் கோபம் கொண்டு அரசவைக்கு சென்றுதலைமை
அமைச்சருக்காக காத்து இருந்தார்.
அமைச்சர் வந்த உடன் “மஹாராஜா என்ன! இன்று சற்று கோபமாகஉள்ளீர்கள்
என்று கேட்க அதற்கு அவர் “அமைச்சரே ! நீர் என்னஎன்னை ஏமாற்றி
கொண்டு இருக்கிரிரா ?” இல்லை மஹாராஜா ஏன்?
திடீர் என்று உங்களுக்கு இப்படி தோன்றியது.
“நான் கேட்டகேள்விக்கு பதில் எங்கே?” நாளை காலையில் எனக்கு
பதில் வந்துஆக வேண்டும் என்று கூறி எழுந்து சென்று விட்டார்.
தலைமை அமைச்சர் வீட்டிற்கு சென்று சோகமாக உட்கார்ந்துஇருந்தார்.
நான் என்ன செய்ய முடியும்.இந்த உலகை விட ,உயிரைவிட, கடலை
விட பெரியது எது?என்று எவ்வாறு எனக்கு தெரியும்.
அவர் மனைவியிடம் இதை சொல்லி வருத்தப்பட்டார். அவர்மனைவி “ நாம்
மஹாராஜா வின் கோபத்திற்கு வீணாக ஆளாகபோகிறோம்.” என்று கூறினார்,
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த அவர்களின் மகன்“ராஜா”அங்கு
வந்தான் . என்ன ஆகிவிட்டது இப்போ,மஹாராஜாவிற்கு உயிரை விட ,
கடலை விட , உலகத்தை விட, எதுபெரியது என்று தெரிய வேண்டும் ,
அவ்வளவு தானே நான் வந்துஅவருக்கு சொல்கிறேன் என்று ராஜா கூற
“மகனே ராஜா! உன் அப்பாதலைமை அமைச்சர் அவருக்கே தெரியாதது
உனக்கு எப்படி கண்ணாதெரியும் ?” என்று அம்மா கேட்டாள்.
அப்பா, அம்மா என்னை நம்பி என்னிடம் விடுங்கள் , என்னை
நாளைஅரசவைக்கு கூட்டி செல்லுங்கள் என்று சொன்னான் ராஜா .
ஒருவழியாக இருவரும் சமாதானமாகி ஒப்புக் கொண்டனர்.அடுத்த
நாள்காலை அரசவையில் ,
“மஹாராஜா வருகிறார்” என்று கூற காவலாளி. எல்லோரும்ஆவலாக
இருந்தார்கள். அப்படி என்ன தான் இந்த தலைமைஅமைச்சர் சொல்வார்
என்று அதுவும் இவர் தன் மகனையும்மனைவியையும் அழைத்து வந்து
இருக்கிறாரே! சிலர் ”எனக்குதெரியாது !” என்று கூறி மன்னிப்பு கேட்க தான் ,
இவர் அழைத்துவந்தாக சொன்னார்கள். அரசர் வந்தாயிற்று . அரசவை கூடியது.
தலைமை அமைச்சர் : மஹாராஜா உங்களின் கேள்விக்கு என்அருமை
மகன் ராஜா பதில் அளிப்பான்.
மஹாராஜா : என்ன உன் மகனா?
தலைமை அமைச்சர் : ஆம்…
மஹாராஜா : சரி வரச் சொல்
ராஜா : உங்களின் கேள்விகள் என்ன மஹாராஜா ?
மஹாராஜா : என் கேள்விகள் இந்த உலகை விட,உயிரைவிட,கடலை
விட பெரியது என்ன? என்பது தான்.
ராஜா : மிகவும் சுலபமானது மஹாராஜா?
மஹாராஜா : எப்படி?
ராஜா : உலகை விட பெரியது
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது .
விளக்கம் :தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி,சிறியதாகஇருந்தாலும்,
அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தை விட மிகப்பெரியதாகும்.
ராஜா : உயிரை விட பெரியது ?
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்.
விளக்கம் : ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதால் அந்தஒழுக்கமே
உயிரினும் மேலானதாகப் போற்றப்படும்.
ராஜா : கடலை விட பெரியது ?
“ பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரியது ”
விளக்கம்: பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய,
அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை
கடலினும் மிகப் பெரியதாகும்.
இப்போது உங்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்ததா என்று
ராஜாமஹாராஜாவிடம் கேட்க அவர் தலை குனிந்து நின்றார்.அந்தஅவையே
ராஜாவின் அறிவு கூர்மையை பார்த்து வியந்து நின்றது.
இந்த கதையில் இருந்து நாம் கற்றுக் கொண்டது,என்னவென்றால் திருக்குறளில் அனைத்திற்கும்விடை உண்டு.பின்பு பிறரிடம் திறமையையேபார்க்க வேண்டும், வயதை அல்ல…
-பொள்ளாச்சி அருண்பாலாஜி–
-
கதை சொல்லி – அ. வெண்ணிலா (A. Vennila) “என் உடலை விதைத்திருக்கிறார்கள்
என் மார்புக் காம்புகள் நீரூற்ற
பூச்செடிகளும் மரங்களும்
துளிர் வி ட்டு வளர்ந்து
விருட்சமாயிருந்தன.
விளையாட
சிட்டுக் குருவிகளும் புறாக்களும்
போட்டியிட்டன.உழுதார்கள் விதைத்தார்கள்
அறுவடை செய்தார்கள்.
காலாதீதத்தில்
என் உடல்
நல்ல விளைநிலமாயிருந்தது.
வண்ணத்துப் பூச்சிகளும்
தேடி வரும் ஆவலில்
பூச்செடிகளுக்காய் ஏங்கியிருந்தேன்.
முட்களுக்கும் சுள்ளிகளுக்கும்
அதிக தேவையிருந்ததால்
என் உடலில் அதிகம் விதைத்தார்கள்.என் பால் வாசம் நுகர்ந்து
வேலி வரை வந்து
உள் நுழைய முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கும்
வண்ணத்துப் பூச்சிகளுக்காகவும்
தட்டான்களுக்காகவும்
என் உடலை சுருட்டிக் கொண்டு
தொட்டிச் செடி பூவாக்கி
காத்திருக்கிறேன்.
சூரியனுக்கு வெகு கீழே.”– அ.வெண்ணிலா.
கதை சொல்லிக்காக சென்னையிலிருந்து வந்தவாசி செல்வதற்கு வெளிக்கிட மதியத்தை தாண்டிவிட்டிருந்தது. கவிஞர் அ.வெண்ணிலா பின்னேரம் நான்கு முப்பது மணிக்கு நேரம் ஒதுக்கித் தந்திருந்தார். சென்னையிலிருந்து வந்தவாசிக்கு இரண்டரை மணித்தியாளத்திற்குள் சென்று விடலாம் அல்லது அதிகபட்சம் மூன்று மணித்தியாளம். பேருந்தின் சன்னலில் வாய் பார்த்து வந்து கொண்டிருந்தேன்.வேடிக்கைப் பார்ப்பது சிறுவயதில் இருந்தே அறியாமல் என்னுள் தொற்றிக் கொண்ட விடயம். ‘ஒருவேலைக்கு அனுப்பினா கப்பல் பார்க்க விட்ட சேவகன் மாதிரி இல்லாம கெதியாண்டு வீட்டுக்கு வந்து சேர்’என்னும் வசவோடே வீட்டில் வளர்ந்தேன். காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்னும் தீர்ந்தபாடில்லை. காணக் காண கிடைக்கும் போதை திகட்டுவதில்லை. நானற்ற நிலையில் சிந்திப்பதற்கும் காட்சி வெளி தேவையாக இருக்கிறது
சாலையின் இருமங்கிலும் ஆச்சிரியப் பட வைத்தவை கிழடு தட்டிப் போன மரங்கள். பழமையான ஊர் என்பதற்கு சாட்சிகளாக நின்று கொண்டிருந்தன. அனேகமான மரங்களில் பட்டைகள் கிழவனின் முகச்சுருக்கங்கள் போல் மாறிவிட்டிருந்தது. சில மரங்களில் தண்டுகள் பொக்கை வாய்களாய் உள்வற்றிப்போய் சிறு தடி போல் நின்று பெரும் கிளைகளை தாங்கிக் கொண்டு நின்றது. பச்சை நிற இலைகள்இன்னும் பசுமையான வசந்தங்களைப் காணப் போவதை சொல்லிக் கொண்டிருந்தது. முன்னர் அங்கங்கே வெட்டி விடப்பட்ட கிளைகள் மரத்தில் கண்களைப் போல மாறியிருந்தது. பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பழமையான கோவில்களை காண முடிந்தது. ஊரின் பெயர்ப் பலகைகளும் மிக விசித்திரமான அழகான பெயர்களைத் தாங்கி நின்றது.
வந்தவாசி பேருந்து நிலையத்தில் இறங்கி சற்றுத் தொலைவில் உள்ள அம்மையப்பட்டு என்னும் ஊரில் உள்ள பாடகசாலைக்கு கொஞ்சம் தள்ளி உள்ள பாதையில் இருக்கிறது அ.வெண்ணிலாவின் வீடு. வெண்ணிலாவின் வீட்டின் பெயர் அகநி இல்லம். அகநி என்பது மூன்று குட்டி இளவரசிகளின் பெயர்களுடைய முதல் எழுத்து. அ = அன்புபாரதி, க = கவின் மொழி, நி = நிலாபாரதி. இதில் அன்புபாரதியும், நிலாபாரதியும் இரட்டையர்கள். வெண்ணிலாவின் கணவரும் கவிஞர். அம்மா அப்பா இருவரும் கவிஞர்களாக இருப்பாதல் குழந்தைகளுக்கும் கவிதை மேல் நாட்டம் இயல்பாக இருக்கிறது. மூவருக்கும் வாழ்க்கை தேர்வு மருந்துவர், ஆட்சியர் என பட்டியலிட்டாலும் தவறாமல் ஒரு மாற்றுத் தேர்வாக கவிஞர் ஆவதையும் குறிக்கோளாக வைத்துள்ளார்கள். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பொது அறிவுப்போட்டியென பரிசுகளை வென்று வரத் தொடங்கி விட்டார்கள்.
தேனீர் உபசரிப்புடன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் கதைகளை பதிவு செய்யத்தொடங்கினோம். வெண்ணிலா கதை சொன்ன விதம் நிறம்ப அழகு.
அவர் குரலின் இனிமை கதைகளோடு ஒட்டிக் கொண்டது. கதைகளைச் சொல்லும் போது அவர் குரலில் ஏற்ற இறக்கங்கள் கதாபாத்திரங்களின் ஒத்த தன்மையோடு மாறிவிடும். சில நேரங்களில் கதாபாத்திரங்களை போல் நடித்துக் காண்பித்து கதைகள் சொல்கிறார். தாயையும் மகளையும் பற்றி வரும் சிறுகதையில் அவரே தாயாகவும் மகளாகவும் உருமாறிக் கொண்டிருந்தார். ‘மலம்’ கதையில் வரும் துன்பியல் நகைச்சுவையை தன் மனதில் உள்ளதை வார்த்தைகளில் வழி கடத்துவது அவ்வளவு எளிதல்ல. பாதிரியாரின் நிலையை எளிதாக கற்பனை செய்ய முடிந்திருந்தது அவர் குரலில். தன்னுடைய சிறுகதையைச் சொல்லும் போது ‘அவ்வளவு பட்டாம்பூச்சி’ என்கிற பொழுது அவர் கண்களும் மூடியேஇருந்தது.
“காக்கா கதை
குட்டி இளவரசி கதை
தேவதை கதை என
சொல்லி மகிழ்ந்த
பேச்சுக்களைப் பரிமாறிய
இரவொன்றில்
நம்மால்
குழந்தைகளைப் போல்
கட்டியணைத்து
உறங்க முடிந்தது”– அ.வெண்ணிலா
அடுத்து தொடங்கியது மழலைகளின் கதை சொல்லல். அவர்கள் கதைகளுக்குள் நுழைய அவர்களின் வயதினராலேயே முடியும். அதியுயர்ந்த கற்பனைகளுக்கெல்லாம் இடம் கொடுக்கும் வயது அது. அவர்களின் நகைச்சுவை உணர்வு நம்மைப் போல் மழுங்கிய ஒன்றல்ல. சிரிப்பும் கற்பனையும் அதன் உன்னத நிலையில் செயல்படும் தருணங்கள் அது. நிறைய கதைகளைத் தமக்குள் வைத்துக்கொண்டிருந்தார்கள். முல்லாக் கதைகள் தொடங்கி அவர்களுள் நிறைந்திருந்த கதைகள் ஏராளம். கதைகள் சொல்ல அவர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை. கதைகளை ஆரம்பித்தால் போதும் சொல்லிக்கொண்டே சென்றார்கள்.
கதை சொல்லி முடித்து வெளியே வந்தேன் . இருட்டிய வானில் அரை நிலவோடு வெள்ளிகள் மிகப்பிரகாசமாக் மின்னிக் கொண்டிருந்தன. குதுகாலிக்கும் மனநிலையை என்னுள் கிளறி விட்டது. ‘கப்பல் பார்க்க விட்ட சேவகன் என்ன செய்திருப்பான்’ என சிறுவயது முதல் யோசித்திருக்கிறேன். பதிலில்லை. இந்த சேவகன் கதைகளோடு கதைகளின் வாசனையோடு தன்னை இழந்து திரும்புகிறான்.
அ. வெண்ணிலாவின் கதைகளை கேட்க கீழே உள்ள ப்ளே ஐகானை அழுத்தவும்.
-
மதகொண்டபள்ளி கல்வி நிறுவனம்-MEC (Mathagondapalli Education Centre)
மதகொண்டபள்ளி கல்வி நிறுவனம்.
இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய மலைகள் எந்த பக்கம் திரும்பினும் பசுமை நிறைந்திருக்கும் ரம்மியமான சூழல் பார்க்கும் இடங்கள் அத்தனையிலும் இயற்கை அன்னை தன் கொடையை வாரி வழங்கி இருக்கிறாள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல அமைதிக்கும், அறிவுக்கும் அழகு சேர்க்கும் இடமாக தான் அமைந்திருக்கிறது மதகொண்டபள்ளி கல்வி நிறுவனம்.
பள்ளிக்குள் நுழையும் போதே கோவிலுக்குள் நுழைவது போன்ற அமைதியான உணர்வினை அங்கு செல்லும் ஓவ்வொவரும் உணர முடியும் அங்கிருக்கும் செடிகளும், மரங்களும் கூட மௌனம் காக்கிறதோ என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நிசப்தம்.
இத்தகைய ஒரு பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிட்டாமல் பொய் விட்டதே என இங்கு வரும் அனைவரும் ஏங்குவர்.மெத்த படித்தவர்களே சிறிது நேரத்தில் கலங்கி போய் விட கூடும். இங்கு பயிலும் மாணவர்களுக்கு திறமைசாலிகள். நாம் இங்கிருக்
கும் மாணவர்கள் ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இங்குள்ள குழந்தைகளின் ஆங்கிலப் புலமையை நோக்கும் போது நாம் இருப்பது தமிழ்நாட்டிலா அல்லது இங்கிலாந்திலா என கேட்கும் அனைவரும் சந்தேகப்பட கூடும்.
உண்மை, நேர்மை, ஒழுக்கம், திறமை, கல்வி என அத்தனை பண்பு
களிலும் சிறந்து விளங்கும் இக்குழந்தைகள் அனைவரும் குற்றவாளிகளின் குழந்தைகள் என எண்ணும் போது நெஞ்சம் கணத்து போவது நிதர்சனம். ஆனால் அவர்கள் அப்படி இல்லாவிட்டால் இங்கு படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்து இருக்காதே என்று நினைக்கும் போது தீமையிலும் நன்மை என்ற முதுமொழி தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் வாழ்கையில் ஒரு முறையாவது அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய கல்விக் கோயில் தான் மதகொண்டப்பள்ளி கல்வி நிறுவனம்.
Address:
RURAL INSTITUTE FOR COMMUNITY EDUCATION – MATHAGONDAPALLI MODEL SCHOOL,
Mathagondapalli village and post,
Via Hosur,
Krishnagiri District, – 635 114
Tamil Nadu, India
Tel : +91-4347-237160, 237161
Fax- +91-4347-237158
e-mail – ricemms2000@gmail.com
website – www.ricemms.org
skype: rice.mmsகருத்தை பதிவு செய்யவும்…
நன்றி ……
– பொள்ளாச்சி அருண்பாலாஜி –
-
பேராசிரியர் கல்யாணி(பிரபா.கல்விமணி) – ஒரு போராட்ட கதை…
கல்யாணி என அறியப்படும் பேராசிரியர் பிரபா கல்விமணி கல்வியாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.
திரு.பழ நெடுமாறன் அவர்களுடன் தமிழகத்தில் எங்கு நமது இனம் தொடர்பான எங்கு போராட்டம் நடந்தாலும் பங்கு கொள்ளும் மொழி போராளி.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திர பாண்டியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கல்யாணி திண்டிவனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் விருப்ப ஓய்வுபெற்றுத் தற்போது அங்கேயே வசிக்கிறார். மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சிய இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த கல்யாணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், மக்கள் யுத்தக் குழு)யின் பண்பாட்டு அமைப்பான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்க’த்தில் செயல்பட்டவர். அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ‘செந்தாரகை’ என்னும் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த கல்யாணி பிறகு அதிலிருந்து விலகிக் கல்வி சார்ந்த பல போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். மக்கள் கல்வி இயக்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் சார்பாகத் தாய்த் தமிழ்ப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.
பணியிலிருக்கும் போதே பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திய கல்யாணி, ஓய்வுக்குப் பிறகு பழங்குடி இருளர் பேரவை என்னும் அமைப்பின் மூலம் அவர்களது வாழ்வுரிமை சார்ந்த போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார்.
காலச்சுவடு இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து, அவரது போராட்ட, அரசியல் வாழ்வு அவரது பார்வையில்……
எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திரபாண்டியபுரம். அப்பா சிறு விவசாயி, சமூகரெங்கபுரத்தில் தலையாரி வேலை பார்த்தார். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம். நான் கடைசியாக, பத்தாவது குழந்தையாக 1947இல் பிறந்தேன். கல்யாணி எனும் பெயரை எங்கள் பகுதியில் மறவர், தலித் சாதிகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு வைப்பார்கள். நான் மறவர். மறவர் என்பது denotified tribe. அங்கு அது சிறுபான்மைச் சாதியாக இருந்தது. நாடார்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர்.
ஐந்தாம் வகுப்புவரை சொந்த ஊரில் படித்தேன். அப்புறம் கள்ளிகுளம் பள்ளிக்குச் சென்றேன். அது சாமியார்கள் நிர்வாகத்தில் செயல்படும் பள்ளி. அண்ணன் பத்தாம் வகுப்பு. நான் ஒன்பதாம் வகுப்புப் படித்தேன். பள்ளியில் அண்ணன் செய்த ஒரு தவறுக்காக நிர்வாகத்தினர் அவனைத் தண்டித்தனர். அவனுடன் சேர்ந்து தவறுசெய்த இன்னொரு மாணவர் நிர்வாகத்தினருக்கு வேண்டியவரென்பதால் அவரை விட்டுவிட்டனர். அதனால் அந்தப் பள்ளியில் படிக்க மாட்டேனென வீம்புடன் சொல்லிட்
டு சமூகரெங்கபுரத்திலிருந்த பள்ளியில் சேர்ந்தேன். அது டிஸ்ட்ரிக்ட் போர்டு பள்ளி. அங்கு ரெட்டியார்கள் பெரும்பான்மை வகுப்பினராக இருந்தனர்.
பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் பியூசி (1963 – 1964). கல்லூரியில் நான்தான் கடைசி மதிப்பெண். ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துவார்கள். முதலில் அவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. பியூசி முடித்துவிட்டு அங்கேயே இயற்பியல் (1964-1967) படித்தேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக இருந்ததால் தொடர்ந்து ஆங்கில நாளிதழ்கள் படிப்பது போன்ற சுய முயற்சிகளைச் செய்தேன். மூன்று வருடப் படிப்பில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அதிக நேரம் விரயமாகியது. இயற்பியல் துறை சார்ந்து படித்தது மூன்றாம் ஆண்டில் தான். அறிவியல் பாடங்களில் அடிப்படை பலமாக இருந்ததால் தேர்ச்சி பெற்றேன். மேலும் விடுமுறையின் போதே கல்லூரிப் பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டுபோய்ப் படித்துவிடுவேன்.
65இல் கல்லூரியில் இந்திப் போராட்டம் தீவிரமாக இருந்தது. திமுகவில் இருந்ததால் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். ரகுமான்கான் அமெரிக்கன் கல்லூரி தானே! கல்லூரியில் அவர் எனக்குச் சீனியர். மற்றவர்களுடன் சென்று நானும் கலந்துகொண்டேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பருவத்திலேயே திமுக அனுதாபி. அப்போது எனக்குப் பதினோரு வயது.
என் அண்ணன் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர், திராவிடர் கழகத்துக்காரர் என்றே சொல்லலாம். என் சித்தப்பா கொழும்பில் இருந்தார். சித்தி மட்டும் இங்கே இருந்தார். அவரது வீட்டுக்கு அண்ணனுடன் போய்ப் பேசிக்கொண்டிருப்பது உண்டு. அப்போது அரசியல் பற்றிய பேச்சுகளும் வரும். அதனால் அந்தச் சின்ன வயதிலே
யே கடவுள் மறுப்பு, திமுக அரசியலிலெல்லாம் ஈடுபாடு வந்துவிட்டது.
1967இல் இளங்கலை முடித்தேன். முதுகலைப் படிப்புக்குச் செல்லவில்லை. வேலைக்குப் போகவே விரும்பினேன். கும்பகோணத்தில் ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியராகச் சேர்ந்தேன். மாதம் 150 ரூபாய் சம்பளம். ஒரு வருடத்திற்குப் பிறகு மாமா மூலமாகத் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஒரு வருடம் வேலை. அடுத்த வருடம் சிவகங்கையில் வேலை. அங்கே பதினான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்த்தேன். அப்போது முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் அதே சமயத்தில் யானைமலை ஒத்தக்கடை அரசு விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. நான் அதில் சேர்ந்துவிட்டேன்.
அந்த வேலையில் சேர்ந்த பிறகு திரைப்படங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நிறைய நேரம் கிடைத்தது. திமுகவின் மீது விமர்சனம் எழத் தொடங்கியிருந்த தருணம் அது. அப்போதுதான் செம்மலர் பத்திரிகை வந்தது. மக்கள் உரிமைக் கழகத்தின் தில்லைநாயகம் மூலமாக முற்போக்கு இயக்கம் அறிமுகமானது. எனக்குத் திமுகவின் கொள்கைகளோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இடதுசாரிச் சார்பு மனநிலை உருவானது. முற்போக்கு இயக்கங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. எனக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் மார்க்சிஸ்ட் கட்சிதான் நெருக்கமாகத் தென்பட்டது. அதற்கு எந்தத் தத்துவார்த்தப் பின்னணியும் காரணமல்ல. எங்கள் கல்லூரி விவசாயப் பல்கலைக் கழகமாக ஆன பின்னர் அங்கே பணியில் தொடர எனக்கு ஆர்வமில்லை, எனவே கடலூருக்கு வந்துட்டேன். அங்கேதான் பழமலயைச் சந்தித்தேன். அவர் கடலூரில் பேராசிரியராக இருந்தார். அங்கேயிருந்து மதுரை மேலூரிலும் பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியிலும் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று மாதம் அங்கே வேலை பார்த்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது. அதனால் விடுப்பு எடுத்துக்கொண்டு படிக்க வந்துவிட்டேன்.
அப்போதெல்லாம் சம்பளத்தோடு அனுப்பமாட்டார்கள். அப்போது 1975 நெருக்கடிநிலை சமயம். திமுக
வின் நட வடிக்கைகள் பிடிக்காத சூழலில்கூட நெருக்கடிநிலைமீது ஒரு கோபம் வந்தது. நான் இருந்த விடுதிக்கு நேரெதிரே இருந்த இடத்தில் இரவு நேரத்தில் நெருக்கடிநிலை அமலாகியிருப்பது குறித்த சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். காலையில் போய் டீ குடித்துவிட்டுச் சுவ ரொட்டிமீது சாணி அடிக்க வேண்டுமென்று சாணியை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு முன்பே யாரோ அந்தச் சுவரொட்டிமீது சாணி அடித்திருந்தனர்.
1972-73இல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகினார். அப்போது நான் கடலூரில் வேலையில் இருந்தேன். ஒரு கட்சிக்காரனாக எப்போதும் எம்ஜிஆரின் சினிமாத்தனங்கள்மீது எனக்கு விமர்சனம் உண்டு. அவரை விலக்கியது என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இந்த மாதிரி ஆள்களைக் கட்சியில் வைக்கக் கூடாது என்னும் நினைப்பு எனக்கிருந்தது. மாயத்தேவருக்காக சிபிஐ, சிபிஎம் எம்ஜிஆரை ஆதரித்ததால் அந்தக் கட்சிகளை வெறுத்து, சிபிஎம்மிலிருந்து நான் விலகிவிட்டேன்.
1976இல் முதுகலைப் படிப்பை முடித்தேன். பிறகு விழுப்புரத்தில் வேலை கிடைத்தது. முதுகலை முடித்த புத்துணர்ச்சியோடு மிக ஆர்வமாக வகுப்பு எடுக்கத் தொடங்கியிருந்த சமயம் அது. வகுப்பில் போகிறபோக்கில் வாய்ப்புக் கிடைக்கும்போது கடவுள் மறுப்பு பற்றியெல்லாம் பேசுவேன். என் இயல்பு அது. மாணவர்களும் என்னை விரும்புவார்கள். விடுதிக்குச் சென்று தலித் மாணவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுத்தால் அவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற துறைப் படிப்புகளுக்குப் போக முடியும் என்பதால் அவர்களுக்குப் பயிற்சியளிப்பேன். கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் முக்கியமான பொறுப்பில் இருந்தேன். இப்படிப் பல தளங்களிலும் இயங்கியதைப் பார்த்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் என்னை அவர்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அப்போதுதான் தினகரன் பத்திரிகை வந்தது. எப்போதும் தினகரன் பத்திரிகையோடுதான் இருப்பேன். அப்போது நான் தீவிர திமுக ஆதரவாளன். ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், அவர்களின் வேண்டுகோள்களுக்காகக் கடவுள் மறுப்பு போன்ற செய்திகளைப் பேசுவேன்.
அஷ்வகோஷ் அங்கே அறிமுகம் ஆனார். ஒரு நாள் அங்கே ஏற்பட்ட விவாதத்தில் நான் பேசியதைக் கேட்ட ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சித் தோழர் என்னைப் பார்க்க அறைக்கு வந்துவிட்டார். அவர் வெளிப்படையாகத் தான் அந்த இயக்கத்தில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளமாட்டார். என்னை அந்தத் தோழர் பார்த்ததை அறிந்த மார்க்சிஸ்ட்கள் அவரை மிரட்டினர். எனக்கு அவர்களின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. அவர்களைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டேன். பிறகு அவர்களிடமிருந்து விலகிவந்துவிட்டேன். தோழர் செந்தாரகை வந்து என்னைச் சந்தித்தார். இரவில்தான் வருவார், தலைமறைவு அரசியலிலிருந்துதான் தொடங்குவார். எனக்கு நன்றாகத் தூக்கம் வரும். மார்க்சிஸ்ட்டுகளோடு இருந்த முரண்பாடு காரணமாக அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். இயல்பான பிடிப்பு இல்லை. இப்படியான சூழலில் இலங்கையிலிருந்து வந்த சில மலையகத் தமிழர்கள் மார்க்சியம் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியுமென நினைத்து என்னிடம் வந்தார்கள். எனக்கும் எதுவும் தெரியாது. எல்லோரும் சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லி அரசுங்கிற புத்தகத்தை வரிக்கு வரி படித்தோம். பின்னர் குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்களைப் படித்தோம்.
அதன் விளைவாக மார்க்சியத்தின் அடிப்படை புரிந்தது.
1983இல் இலங்கைப் பிரச்சினை வந்தது. அதை ஆதரித்தது. பிரபாகரன் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியா சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது, இராணுவத்தை அனுப்பக் கூடாது என்று கூறினார்கள். திமுகவினர் இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள். ஈழ விடுதலையை, தனி ஈழத்தை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்கள் ஆதரித்தனர். ஒரு தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமை. அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. தேசிய இனப் பிரச்சினையிலும் மொழிப் பிரச்சினையிலும் இந்திய அளவில் ஏஎம்கே அளவுக்குத் தெளிவானவர்கள் யாரும் இல்லை. மொழிப் பிரச்சினை தொடர்பான இந்திய அளவிலான விவாதத்தில் தமிழ்நாடு வைத்த பயிற்சி மொழி, ஆட்சி மொழி, தொடர்பு மொழி மூன்றும் ஒரே மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்னும் ஒரு மொழிக்கொள்கையை அப்படியே எல்லா மாநிலங்களும் பின்பற்றின. மொழிப் பிரச்சினை தொடர்பாக மபொசி எழுதிய புத்தகம் மிக முக்கியமான ஒன்று. நாடாளுமன்றத்தில் தேசிய இனங்களுக்கான இடம் சமமாக இருக்க வேண்டும். மக்கள்தொகை சார்ந்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது என்று சிந்தித்திருக்கிறார்.
தொடக்கத்தில் சரியான அமைப்பு கிடையாது. நான் நக்சல்பாரி இயக்கத்தில் இருப்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் பெண் கல்வி தொடர்பா ஒரு பள்ளி கொண்டுவர வேண்டிய முயற்சிக்கு என்னை அணுகினர். வன்னியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி அது. மருத்துவர் ராமதாஸ் மக்களைச் சார்ந்து நிற்பார் என அவரைக் கொண்டுவந்தோம். அவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். பல்வேறு தரப்பினரைக் கொண்டு பள்ளி திறப்புக் குழு, வெகுஜன மேம்பாட்டுக் குழு என இருகுழுக்களை உருவாக்கினோம். தலைவர் மருத்துவர் ராமதாஸ். நான் ஒரு குழு உறுப்பினர். செயலாளர் பவனந்தி. ஹீராசந்த் அப்ப நகராட்சித் தலைவர். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தின் அதிமுக செயலாளர். அவரை எதிர்த்துதான் அதை நடத்த வேண்டும். கடுமையான போராட்டம். அவர்தான் இலக்கு. அவரை எதிர்த்து எப்படி அணி திரட்டுவது என்பது குறித்த தெளிவான பார்வை இருந்தது. அதில் எனக்குப் பயங்கர பாதிப்பு. ஆனால் திண்டிவனத்தில் எனக்குக் கிடைத்த நல்ல பெயர் அப்போராட்டத்தை வைத்து உருவானதுதான். நாங்கள் விரும்பியபடி பள்ளியைக் கொண்டுவந்துவிட்டோம். பல தடைகளைத் தாண்டி இப்போது அது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது.
98இல் டிசம்பர் 6 நிகழ்வை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரையும் இஸ்லாமியரையும் கைதுசெய்திருந்தனர். இதற்கு எதிராக ஒரு பத்திரிகைச் செய்தி கொடுக்க வேண்டுமென ரவிக்குமார் சொன்னார். செய்தியை அவரே எழுதினார். அப்போது இஸ்லாமியர்களுடன் இணைந்து சதிசெய்ததாக ஒரு வழக்கு எங்கள்மீது போடப்பட்டது. ரவி என்பவர் அப்போது மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். இருளர்களுக்கு எதிரான வழக்குகளில் ரவி சரியாகச் செயல்படவில்லை என நான் முன்பு அவர்மீது குற்றம் சுமத்தியிருந்தேன். அதை மனத்தில் வைத்துக்கொண்டு பழிவாங்கும்விதமாக இப்படி ஒரு வழக்குப் போடப்பட்டது.
2002இல் திண்டிவனம் அருகே பட்டிணத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரைப் போட்டு அடித்துவிட்டார்கள். புகார் கொடுத்தோம். எதிர்த் தரப்பினர் கட்டப்பஞ்சாயத்துக்கு வந்தனர். தலித் இனத்தைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் தலைமையில் அந்தப் பஞ்சாயத்துக்கு வந்தனர். எப்போதும் கட்டப்பஞ்சாயத்துகளை நான் ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொள்ளமாட்டேன். கடுமையாகப் பேசிவிடுவேன். அதனால் இருளரில் ஒருவரைப் பிடித்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கையெழுத்து வாங்கி அவரை நான் திட்டியதுபோல் என்மேல் வழக்குப்போட்டார்கள். ஆனால் கைது செய்யவில்லை. அதை எதிர்த்துத் திருமாவளவன் தலைமையில் விழுப்புரத்தில் 10,000 பேர் திரண்ட பெரிய பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அப்பேரணியில் இணைந்தனர்.
மார்க்சிய – லெனினிய இயக்கத்திலிருந்து வந்த பின்பு பண்ணையபுரம் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான உண்மையறியும் குழுவில் இணைந்து பணிபுரிந்தேன். அப்போது 93இல் அத்தியூர் விஜயா வழக்கு கவனத்திற்கு வந்தது. ஒரு கைதியைத் தேடிப் போவதுபோல் போய் அந்த இருளர் இனத்துப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். உண்மையில் இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை. வழக்கமாகப் பாண்டிச்சேரி போலீசார் இவ்வாறு செய்வதுண்டாம். தமிழகப் போலீசாரும் இதற்கு உடந்தைதான். அதனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர்கள் பகுதியில் வின்செண்ட் என்பவர் ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறார். விஜயாவின் அண்ணன் ஏழுமலை அதில் உறுப்பினர். அதன் மூலம் புகார் தந்தி அனுப்பியுள்ளனர். விசாரணைகள் நடக்கின்றன.
அப்போது இணை ஆட்சியர் ஜவஹர் விசாரித்து அதில் முகாந்திரம் இருப்பதாகச் சொல்லி, முதல் தகவல் அறிக்கை போடச் சொல்லிவிட்டார். இச்சம்பவம் நடந்து 15 நாள்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. இந்தச் செய்தி போலீஸ் செய்தி வழியாகத் தினசரி நாளிதழ்களுக்கு வந்தது. அதை வைத்து மணிவண்ணன் எனும் மனித உரிமைப் பத்திரிகையாளர் மூலமாகத் தகவல் வந்தது. அதுவரை இருளர் என்று ஒரு பழங்குடியினர் சாதி இருப்பதே எனக்குத் தெரியாது. அதன் பின்பு பவனந்தி தலைமையில் உண்மையறியும் குழு அமைத்து, வழக்கறிஞர் லூசியானா போன்றோர் அங்கே சென்றோம். அந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையை இண்டியன் எக்ஸ்பிரஸிலும் தினமணியிலும் மிகப் பெரிய செய்தியாக வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து விஜயாவுடைய அப்பாவைத் திருப்பதி போலீஸ் அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த வழக்கைக் கையில் எடுத்தோம். நானும் சிஸ்டர் லூசியானாவும் திருப்பதி போய் ரத்தினம் முலமாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அவரை பெயிலில் எடுத்தோம். இதற்கிடையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் மூலமாக ஆந்திரா போலீஸ் விஜயாவின் அப்பாவைக் கடத்தியது ஹைதராபாத்தில் ஆங்கில நாளிதழில் வெளியானது. இதைப் படித்த இளைஞர் ஒருவர் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எனவே விஜயாவின் தந்தையை ஹைதராபாத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு எங்களிடம் ஒப்படைத்தனர். அங்கே மனித உரிமைப் போராளி பாலகோபால் இருக்கும் இடத்தில் தங்கியிருந்தோம். ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தவர் இளம் வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்துக்கு வழிகாட்ட மூத்த வழக்கறிஞர் சீனிவாசலு என்பவரை நியமித்திருந்தனர். நாங்கள் சென்று கண்ணபிரானைப் பார்த்தோம். அவர் சீனிவாசலுவை அறிமுகப்படுத்தினார். அவர் இவ்வழக்கு குறித்த முன் தயாரிப்புகளோடு இருந்தார். அங்கே அன்று நீதிமன்றப் புறக்கணிப்பு வேறு. எங்களிடம் போதிய பணமும் இல்லை. நாங்கள் தமிழகத்திலிருந்து சென்றிருந்ததால் வழக்கறிஞர் சங்கத்தினரே எங்களுக்குப் போக்குவரத்துக்கென 1,000 ரூபாய் கொடுத்தனர். இந்த வழக்கில் திருப்பதி போலீஸ் விஜயாவின் அப்பாவுக்கு 5,000 ரூபாய் தர வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் பின்பு விஜயா மூலமாகக் கிட்டத்தட்ட 16 வழக்குகள் எங்களிடம் வந்தன. அதனால் இவர்களுக்கென்று ஓர் அமைப்பு வேண்டும், அதற்கு ஒரு தலித் தலைமை ஏற்கவேண்டுமென நினைத்தேன். விடுதலைச் சிறுத்தைகளைச் சார்ந்த லாரன்ஸை வைத்து அமைப்பை உருவாக்குவதாக ஏற்பாடு. கடைசி நேரத்தில் அவரால் வர இயலவில்லை. கூட்டம் திட்டமிட்டபடி கூடியதால் ரத்தினம், சிஸ்டர் லூசியானா ஆகியோர் ஆலோசனைப்படி நானே அந்த அமைப்புக்குத் தலைமையேற்க வேண்டியதாயிற்று. எனவே 04.08.1996இல் மயிலத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் உருவானது. 01.10.1996இல் இருளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு பேரணி நடத்தினோம். வழக்கமான முழக்கங்களுக்குப் பதிலாகப் பழமலய் பாடல் எழுதிப் பாடினார். பல ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைத்ததுதான் நான் செய்த செயல்.
மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழுமூச்சாகச் செயல்பட வேண்டும் என நினைத்தேன். அதற்குக் குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பின்னர் நாள் கடந்துவிட்டது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது நல்லதென்று இப்போது நினைக்கிறேன். வேலைகள் செய்வதற்குத் தடையில்லாமல் இருக்கிறது.
தமிழ்மொழிப் பற்றுக் காரணமாக நான் எப்போதுமே பேசியதில்லை. நான் திமுகவில் இருக்கும்போதுதான் அப்படியொரு கருத்து எனக்கு இருந்தது. நான் மார்க்சிய – லெனினிய இயக்கத்துக்கு வந்தபோது அவரவர் தாய்மொழி அவரவருக்குப் பெரிது என்னும் எண்ணம் வந்துவிட்டது.
நமது மொழிக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். அதற்காக நாம் சிறப்பு உரிமை கொண்டாட முடியாது. மொழிப் பிரச்சினையை ஜனநாயக உரிமையாகப் பார்க்கிறேன். என் மொழியில் படிப்பதற்கு எனக்கு எல்லா வாய்ப்பும் இருக்க வேண்டும் என்கிறேன். தமிழக அரசு போடுகிற கடிதம் தமிழில் இருக்க வேண்டாமா?
தொகுப்பு : பொள்ளாச்சி அருன்பாலாஜி,
9600085388
-
முன் மாதிரி !
காலையில் நேரத்திலே எழுந்து மணியை பார்த்த அப்பமணி 9.30 a.m. ! அட என்னடா இன்றைக்கு நேரத்திலேயேஎழுந்து விட்டோமோ என்று தோன்றியது. சரி விடுஅலுவலகத்தில் போய் தூங்கிக் கொள்ளலாம் என்றுவிட்டு விட்டேன். எழுந்து பல் துலக்கிவிட்டு தேநீர்குடிக்க போகலாம்னு கிளம்பி போகும் போதேசுள்ளான்கள் சிலர் தெருவில் விளையாடிக் கொண்டுஇருந்தனர்.
தேநீர் கடையில் செய்தித்தாளை மேய்ந்து விட்டு “அண்ணா ஒரு டீ” என்று தேநீர் தயாரிப்பவரிடம் சொல்லஅவர் அதற்கு “சார்! ஸ்டராங்கா இல்ல லைட்டா” நான்அதற்கு “நார்மல் ” என்று கூறிவிட்டு சுள்ளான்களைபார்த்த படி நின்று கொண்டு இருந்தேன். தேநீர்அருந்தி ஆயிற்று.
வீட்டிற்கு வந்தால் தமிழ்நாட்டின் துயரம் (அதுதானுங்க பவர்கட்) மின் தடை. பொதுவாக எங்கபகுதியில் 11 மணியிலிருந்து 12 மணி வரைதான் மின்தடை (நான் சென்னையில் இருக்கங்க. அதனால்தான் 1மணி நேரம்) ஆனா இன்று மட்டும் 10 மணிக்கே நம்ம நல்லமனசுகார மின்துறை அதிகாரிகள் நன்மைசெய்துவிட்டார்கள்.
அப்புறம் என்ன! மாடி படி நிழலில் உட்கார்ந்துயோசித்து கொண்டு இருந்தேன். அப்போது தெருவில்விளையாடும் சிறுவர்களை பார்க்க நேர்ந்தது. (இங்கேதான் கருவே அடங்கி இருக்கு)
சிறுவர்கள் தன்னை அறியாமல் விளையாடிக் கொண்டுஇருந்தார்கள். சுள்ளான் ஒருவன் கட்டையாகஇருந்தான். அவனை விட சற்று உயரமாக உள்ளசுள்ளானை பார்த்து என்ன இன்னைக்கு யாருமேவரல?என்று கூறியவாறே சட்டென்று ஓடிமிதிவண்டியில் வரும் சுள்ளானை பிடித்து “டே!லைசென்ஸ் எடு” என்றான் . அதற்கு மிதிவண்டிசுள்ளானும் ஏதோ எடுத்துக் கொடுத்தான். சரி சரிஎல்லாம் சரியாய் தான் இருக்கு. போ!போ! என்று கூறஎனக்கு அப்போது தான் சிறிது புரியஆரம்பித்தது.அவன் போக்குவரத்து காவலராக (டிராபிக்போலீஸ்) விளையாடுகிறான் என்று.
பிறகு மற்றெhரு மிதிவண்டியில் சுள்ளான் ஒருவன்வந்தான். அப்போது இந்த கட்டை சுள்ளான் “டே!டே!நிறுத்து, நிறுத்து. ஆர்.சி.புக் எங்கே? அப்போதுஇந்த சுள்ளான் தலையைச் சொரிய , நட,நட இன்ஸ்பெக்டர்கிட்ட நட,
சார், இந்த சைக்கிள் காரனுக்கு இல்ல இல்ல. இந்தசைக்களுக்கு ஆர்.சி.புக் இல்லையாம் சார். அப்பொதுஅந்த அதிகாரி சுள்ளான் (இன்ஸ்பெக்டர்) சரி சரி பணம்எவ்வளவு வைச்சு இருக்கிற. சார் சார் நான் அவசரமாகஆஸ்பத்திரிக்கு போறேன் என்று கூற அதிகாரிசுள்ளான்சார் 200 ரூபாய் கொடுத்து விட்டு போஎன்று சொல்ல இவனும் ஏதோ கையில் கொடுக்கிறான்.
இப்படியாக இந்த விபரித விளையாட்டு தொடர்கிறது.நான் இதை எதார்த்தமாக கலந்த ஆச்சர்யத்தோடுபார்த்து கொண்டு இருந்தேன். அப்போதுகுடியிருப்பில் இருந்து கரண்டு வந்தாச்சு அம்மா ! !என்ற சத்தம் காதில் விழ நான் எழுந்து என் வீட்டைநோக்கி சென்றேன். அப்போது எனக்கு அந்தசுள்ளானிடம் போய் கேட்க வேண்டும் என்றுதோன்றியது. “ யாரிடம் இதை நீ தெரிந்து கொண்டாய்என்று ” ஆனால் அதற்கு முன் என்னிடம் பதிலும்இருந்தது . நம் தேசத்தில் தான் தெருவிற்கு தெருகாவலர்கள் இதை செய்கிறார்களே என்று.
என் வீட்டில் இருள் விலகியது. ஆனால் என் மனதில்இருள் அண்டியது.புதிய தலைமுறை, நாளைய தலைமுறை , எதிர்கால இந்திய என்றெல்லாம் சொல்லக் கூடிய இந்த இளம்மனதில் இப்படிப்பட்ட நஞ்சு விதைகள் விழுந்துஉள்ளதே என்று தான்.
தொலைக்காட்சி பெட்டியை போட்டேன். அப்போதுஎன்னால் நம்மமுடியாதவாறு (இறைவனோ அல்லதுஇயற்கையோ அல்லது எதார்த்தமோ)
“உன்னால் முடியும் தம்பி தம்பி ……….
இந்த உலகம் இருக்கு உங்களை நம்பி என்று பாடல்ஒடிக்கொண்டு இருந்தது.
இதில் இருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன்என்றால் தவறு செய்யக் கூடாது . அதுவும் சிறுவர்கள்முன் தவறு செய்யவே செய்யக் கூடாது.எக்காரணத்திற்கு ஆகவும் நான் தவறான முன்மாதிரியாக இருக்கக் கூடாது என்று தீர்மானித்துஉள்ளேன். ! !
அப்ப நீங்க ?
– பொள்ளாச்சி அருண்பாலாஜி-
-
தாய்மையின் சின்னம், நம்பிக்கை நட்சத்திரம்,வாழ்க்கைக்கு வழிகாட்டி.
இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர்
இவரின் அடையாளம் ஏழ்மையின் சின்னம்
இவர் வாழ்ந்த இந்த பூமியில் நாமும் வாழ்ந்தோம் என்று
நினைத்தாலே நாமும் நல்லது செய்யவண்டும் என்று
நினைக்கத்தோன்றும். அவ்வாறு நினைத்தாலே போதும்
அந்த காரியம் தானாக நடக்கும் , அதற்கு அந்த அன்னையின்
அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
நீங்களும் நன்மை செய்ய வேண்டும் என்று நினையுங்கள்
நிச்சயம் உங்களுக்கும் நிச்சயம் நன்மையே நடக்கும். 🙂
-
என் இனிய தமிழ் மக்களே ….
உங்களுக்கு ஒரு IT வீரனின் தினசரி போராட்டத்தை கவிதை நடையில்வர்ணித்துள்ளான் இந்த வாரதிராஜா …
நீங்கள் கேட்க்கவிருப்பது ஒரு software சுப்பனின் கிராமத்து காவியம் ,
இந்த படைபிற்க்காக
சுட்டது : பருத்தி வீரன் பாடலை
சுடாதது : ஆந்த பாடல் வரிகளைStart Mizik…
Team members:
ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
ஊரோரம் IT- பார்க்கு ஊலுப்பிவிட்டா சலசலக்கும்
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmera
நான்பிறந்த சென்னையில ஆளுக்காளு programmeraTeam members:
கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
கூடுனுமே கூடுனுமே code அடிக்க மாடு போல
மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேல
மாட்டுனமே மாட்டுனமே நார -PM கையிமேலPM:
நிறுத்துங்கடி , ஏ நிறுத்துங்கடி , நிறுத்துங்கிறேன்ல Code அடிங்கடின்னா என்னா நக்கலா
ஏய் Fresher நீ இங்க வா , டேய் associate நீ இங்க வா , எல்லாம் வரிசையா நில்லு
நல்லா keybordaa வளச்சு நெளிச்சு அடிக்கனும் என்னTeam meber:
யோவ் இங்க பாருய்யா keybordala கண்டவாக்குல கைவச்சின்னா உனக்கு deliveryகிடையாது ஆமாPM:
இங்க பார்யா கோவத்த , டேய் TL அட்ராTL:(Team Leader)
நாடரிஜ்ச fresher களா நீங்க எங்க சோடி ,
உங்கள வச்சுக்கவா projectula சொல்லிப்புடுங்கடி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
C plus plus code அடிக்கும் சின்ன பைங்கிளி
ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமா
ஓன்ன quarter க்கு associataaa தூக்கிவிடட்டுமாPM:
Codenna இப்படிதான் குத்தனும் , என்ன புரிஞ்சுதாProgrammer:
Design correct ல்லாத ப்ரொஜெக்ட்குள்ள ,
இப்போரவுசு பன்னும் PM தம்பி
நைட்டெல்லாம் codeaa குத்தி ,
எனக்கு கைய்யி ரெண்டும் வலிக்கிதுடா ,
கைய்யி ரெண்டும் வலிக்கிதுடாPM:
அட , ராவெல்லாம் codeaa குத்தி ,
உனக்கு கைய்யி ரெண்டும் நொந்தாலென்ன
இந்த experience உல்ல PM கிட்ட நீயும் பாசாங்கு பண்ணாதடிProgrammer:
experience உள்ள PM கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல
பாசங்கு பண்ணுரெண்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா ,
நீயும் அறிவுகெட்டு பேசாதடாTester:
அடி body மேல body வச்சி body க்குள்ள HTLML code வச்சிTL:
அட , அப்படி போடு SAppu (Senior Associate )Tester:
ஓட்டி ஓட்டி பாத்தாலும் என் Browser Trouser கிளியுதடாஅஹா அஹா அஹா ….
ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது Trouser
ஓட்ட Browser இந்த Browser Testeru க்கு கிளியப்போகுது TrouserTest Lead:
அட இந்த பாட்டு படிக்காதடா எனக்கு துக்கம் ஆகுதடா
ஆமா ஆமா ஆமோய் ….பொசகெட்ட பயேல ஒனக்கு test director கேக்குதடா
Test Manager:
QC ஈல (QC = Quality Centre)…
ஆமோய் ஆமோய் ஆமோய் …
QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி ..
QC ஈல caseaa வச்சு நீவரனூம் testaa கட்டி
நான் test planaai போட்டு வச்சென் MPP யில (MPP = Microsoft Project plan)
நான் test planaai போட்டு வச்சென் MPP யிலஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியல
ஆனா milestoneu கிட்ட mileuu தூரம் போகமுடியலDesigner:
Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
Risk குள்ள riska போட்டு escalateuu ஆக்கிப்புட்டு
சப்பையான design changeu க்கு changeaa விடாம
சப்பையான design changeu க்கு changeaa விடாம
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க
ஓங்கள அரிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்கTL:(Team Leader)
அடி யாயி … ஆஹா ஆஹா ஆஹாELT: (Entry Level Trainee)
அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
அள்ளி MPP யில estimateaa தூக்கி பொட்டு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
புள்ளி மானு போல ப்ரொஜெக்ட் துல்லி ஓடலன்னு
இப்பொ புலம்பினாக்க உங்கல நாங்க நம்பமுடியலPM:
போடா போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலேபோடா
போடா பொடிப்பயலே design தெரியா மடப்பயலே
ELT batch சின்ன பய என்னென்னமோ பேசுரானே
designerkku எனக்கும் சண்டை , இப்போ உடைய போகுது மண்டை
அட designerkku எனக்கும் சண்டை , இப்போ உடையப்போகுது மண்டைPM & TL: என்ன fresher ங்கலா keyboarda கையில வச்சிகிட்டு தலைய சொரிஞ்சிக்கிட்டுநிக்கறீங்க , codeaa நீங்க அடிக்கறீங்கலா இல்ல நாங்க அடிக்கவா .
இப்படிக்கு என்றும் பால்முகம் மாரா … உங்கள் சுட்டிப்பய புள்ள