• Nalvazhikatti Trust Sponsored groceries, vegetables , Milk powder & dresses for tribal destitute woman & her newly born twin babies on 8-May-2021

     

    No Comments
  • இனியவர்களுக்கு.,

    அன்பான வணக்கம்.

    43 tribal families -பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு வாய்ப்பு !

     

    பெரியகுளம் அருகே  கன்னகரை மலைவாழ்மக்கள் வாழும் மலைக்கிராமத்தில்,

    அரசு ஒரு குடும்பத்துக்கு தலா 3 ஏக்கர் (வன உரிமை சட்டத்தின் கீழ்) வழங்கியுள்ளது.

    மலைப்பகுதி என்பதால் எலுமிச்சை சாகுபடி செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர்.  ஆகவே ஒரு  குடும்பத்துக்கு  100 எலுமிச்சை கன்று விகிதம் 43 குடும்பத்துக்கு  4300 கன்றுகள் ஆகிறது. 1 கன்றின் விலை ரூபாய் 10/- ஆக 4300 கன்றுகளுக்கு ரூபாய் 43000/- ஆகிறது.

    கருணை உள்ளம் கொண்ட நீங்கள் உங்களால் முடிந்த அளவு பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுங்கள்.

    சிறு துளி, பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒரு கன்று (ரூபாய் 10/-) கொடை கொடுத்தால் அதுவே பெரிய மாற்றத்தை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும்.*

    _இந்த தகவலை நண்பர்களோடும் பரிமாறுங்கள்._


    Project update:1

    Date: 23-Oct-2020

    What we did: we have approached “1 family 3 trees” NGO 

    how much spending: “1 family 3 trees” team going to sponsor lemon saplings

    Sponsor names in update1  : Deepakmanavalan – 500
                                                   Kannadasan – 50
                                                   Appadurai -2500

     


    Project update : 2

    Date: 29-Oct-2020

    What we did:  confirmed with “1 family 3 trees” NGO  and fixed date for distribute saplings on 8-nov-2020

    how much spending: “1 family 3 trees” team going to sponsor lemon saplings & Nalvazhikatti going to take care of transport from puthukotai to Kannakari-ahamalai 230km distance (up & down 460km) its costing Rs. 8000/-

    Sponsor names in update2 : Nil


    Project update : 2

    Date: 31-Oct-2020

    What we did:  confirmed with “1 family 3 trees” NGO  and fixed date for distribute saplings on 8-nov-2020

    how much spending: “1 family 3 trees” team going to sponsor lemon saplings & Nalvazhikatti going to take care of transport from puthukotai to Kannakari-ahamalai 230km distance (up & down 460km) its costing Rs. 8000/-

    Sponsor names in update2 : Gowtham – 2000

                                                        Kalanithi – 2500

                                                        Buvaneshkumar- 2500

     ——————————————————————-

     

     

    Project got completed successfully, 

     

     

    மேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்

    Email – nalvazhikatti@gmail.com
    WhatsApp / Call – ​82965 42155​ 
    Website – www.nalvazhikatti.org
    Mobile – +91 – 82965 42155 / 96000 85388

    To Sponsor:-

    :-  +91 – 96000 85388  

    GooglePay

    :- +91- 94866 56708 

     

    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH

    நன்றி

    -நல்வழிகாட்டி அறக்கட்டளை-

    No Comments
  • A request from Nalvazhikatti NGO

    Support Tribal people’s welfare

    நல்வழிகாட்டி எனும் அமைப்பு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காகவும், வாழ்கை மேம்பாட்டுக்காகவும் (வாழ்க்கைத் திறன்) உதவி செய்து வருகிறது.

    தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா நோயின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று தான். இதன் தொடர்ச்சியாக  பொதுமுடக்கத்தால் பொள்ளாச்சி சுற்றுவற்றாரப் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமக்களுக்கும், திண்டிவனம்,விழுப்புரம்,வந்தவாசி சுற்றயுள்ள கிராமங்களும், மழைவாழ் மற்றும் பழங்குடியினர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்ற செய்தி அறிந்தவுடன் நல்வழிகாட்டி தன்னார்வலர்கள் ஒன்றினைந்து பல குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவியுள்ளனர்.

    இப்போதும் தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பல பகுதிகளில் அடிப்படை உதவி ஏதும் கிடைக்கப் பெறாமல் தவித்து வருவது மிகவும் நம்மை வருத்தமடைய செய்கிறது.

    Nalvazhikatti -An Educational NGO
    Nalvazhikatti -An Educational NGO

    அதிலும் அவர்களின் குழந்தைகள் பலர் பள்ளிக்கூட படிப்பை முழுமையடையாத மாணாக்கர்களாக உள்ளனர். மேலும் பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லூரி செல்ல வழிகாட்டுதல் இல்லாமலும், நிதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தங்களால் இயன்றளவு அடிப்படை உதவிகளையும்,கல்விக்கான உதவியையும் செய்ய முன்வருமாறு நல்வழிகாட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    உதவி செய்ய விருப்புமுள்ளவர்கள் கீழ்கண்ட பகுதியிலிருக்கும் தன்னார்வலர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

    ஊர் : பொள்ளாச்சி
    தன்னார்வலர்களின் பெயர்: அருண்பாலாஜி
    கைப்பேசி எண் : 96000 85388

    ஊர் : திருவண்ணாமலை / காஞ்சிபுரம் / விழுப்புரம்
    தன்னார்வலர்களின் பெயர் : அரிகிருஷ்ணன்
    கைப்பேசி எண் : 99622 33814 / 99439 33815

    ஊர் : பெங்களூர்
    தன்னார்வலர்களின் பெயர்: புவனேஸ்வரி
    கைப்பேசி எண் : 94866 56708

    ஊர் :  சென்னை
    தன்னார்வலர்களின் பெயர்: செல்வராஜ்
    கைப்பேசி எண் : 82965 42155


    நன்றிகளுடன்,
    நல்வழிகாட்டி அறக்கட்டளை

    NALVAZHIKATTI CURRENT ACCOUNT DETAILS:
    Name of Beneficiary: NALVAZHIKATTI TRUST                                                                                                                                 Account Type – Current Account
    IFSC Code: CORP0000170
    MICR Code: 642017002
    Account number: 017001601000184
    Location of Beneficiary Bank: POLLACHI
    Beneficiary Bank Name: CORPORATION BANK
    Beneficiary Bank Branch: POLLACHI BRANCH
    Contact – 82965 42155 / 94866 56708
    web: www.nalv.in
    email- nalvazhikatti@gmail.com 

    Nalvazhikatti -An Educational NGO
    An Appeal from a Volunteer
    Volunteer sharing his experience with Nalvazhikatti
    No Comments
  • Tamil tribes

    Tamil tribes

     

    இவங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!! இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள். ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிரிவின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையிலான குழு தான் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க். ஆஸ்திரேலியப் பழங்குடியினர், ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியூகினியா தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளோரிடம் 344 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அவை தெற்காசியா, இந்தியா, அமெரிக்கா, சீன இனத்தினரின் ஜீனோம்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய ஜீன்கள் ஆஸ்திரேலியாவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்திய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்து அந்த நாட்டினரின் இனத்தினருடன் கலந்துள்ளனர். இந்த ஜீன் கலப்பு 141 தலைமுறைகளுக்கு முன் நடந்திருப்பதையும் ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் கற்களால் ஆன கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிந்தனர். இதனால் இந்தக் கலையும் இந்திய பழங்குடியினரால் தான் இங்கே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்கிறார்கள். அதே போல இந்த பழங்குடியினர் தான இந்திய நாய்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நாய்களின் ஜீன்களில் நடந்த ஆராய்ச்சிகளில் இது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காட்டு நாய்களான ‘டிங்கோ’, இந்தியாவில் இருந்து தான் வந்தன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். Read more at: http://tamil.oneindia.in/editor-speaks/2013/01/genomes-link-aboriginal-australians-to-indians-168301.html#slide48543



    Related Posts Plugin for WordPress, Blogger...

    No Comments