• முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் !

    முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் !

    செய்ய கூடாத பாவத்தைச்
    செய்ததுபோல் காணப்படுவார்கள்

    ஒரு நாளென்பது
    ஒரு நாளாக அல்லாமல்
    வேலாக அவர்களின் விலா எலும்பைக்
    குத்திக் குடையும்

    இஸ்திரி இடப்படாத
    அவர்களின் சட்டைச் சுருக்கங்கள்
    அவர்களுக்குள் கட்டாய வருத்தங்களைக்
    கொண்டுதரும்

    தன் சகாக்களின் முன்பாக
    உணவுப் பொட்டலத்தைப் பிரிக்கத் தயங்கித்
    தாமதமாக உண்பார்கள்
    சமயத்தில் பட்டினியும்கிடப்பார்கள்

    இயல்பான தம் பேச்சுக்களை
    ஏகடியம் செய்வார்களென்று
    வெறுமனே தலையை மட்டும் ஆட்டுவார்கள்

    தேர்வைவிடவும்
    தேர்வுக் கட்டணத்துக்காகக் கவலைப்படுவார்கள்

    அவர்கள் படிக்க வந்ததை மறந்து
    நடிக்கத் தொடங்குவார்கள்

    ஆசை இருந்தும்
    அழகிய பெண்களை/ஆண்களை
    ஆழ்ந்து ரசிக்கத் தயங்குவார்கள்

    முடிவாய்ச் சொல்வதெனில்,
    முதல் தலைமுறையில்
    கல்லூரிக்குள் நுழைபவர்கள்
    தங்கள் மூதாதையர்களின் அழுகையையும் சேர்த்து
    அழுதுகொண்டிருப்பார்கள்!

    சமிபத்தில் விகடனில் படித்த கவிதை….. நம்மில் பலரது அனுபவமும் இதுவாக தான் இருந்திருக்கும்ல??

    http://www.nalvazhikatti.org/

    மாற்றங்களை எதிர்நோக்கிய பயணத்தின் முதல் அடியை எங்களோடு எடுத்து வையுங்கள் ! !

    http://www.nalvazhikatti.org/

    9600579018 / 9578675904

    Related Posts Plugin for WordPress, Blogger...
    1 Comment

One Response to “முதல் தலைமுறையில் கல்லூரி வந்தவர்கள் !”

  1. vijivasudevan said on

    Excellent blog. Lots of useful information. Keep it up.

Leave a Reply